தாய்லாந்து நாட்டு பெண்கள் அறுவரையும் நாடுகடத்துமாறு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

473

 images (1)

கொழும்பு-03, கொள்ளுப்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்ட தாய்லாந்து நாட்டு பெண்கள் அறுவரையும் நாடுகடத்துமாறு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட விபசார விடுதியில் வைத்தே தாய்லாந்து பெண்கள் அறுவரும் இலங்கைப்பெண்கள் இருவரும் கடந்த 18ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

இந்த எட்டுபெண்களையும் தலா 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ரொக்கப்பிணை மற்றும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்ட கோட்டை பிரதான நீதவான் திலின கமகே, விஸா இல்லாமல் நாட்டில் தங்கியிருக்கும் தாய்லாந்து பெண்கள் அறுவரையும் நாடு கடத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, ஹோட்டலை நடத்திச்சென்றதாக கூறப்படும் ருகுண என்பவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறும் நீதவான் பொலிஸாருக்கு பணித்ததுடன் அவரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி ஆஜராக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

SHARE