நோக்கியா- BSNL ஒப்பந்தம்: 5G சேவை வழங்க திட்டம்

172

BSNL நிறுவனத்துடன் இணையும் நோக்கியா 5G தொழில்நுட்பம் மற்றும் Internet Of Things உள்ளிட்ட சேவைகளை வழங்க முடிவு செய்துள்ளது.

இரு நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பந்தம் செய்வது குறித்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவதற்கு பயனுள்ளதாக இருப்பது மட்டுமின்றி, எதிர்கால 5G நெட்வொர்க்குகளுக்கு பாலமாக இருக்கும் எனவும் BSNL தலைவர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 5G தொழில்நுட்பம் சார்ந்த செயல் விளக்கம், அதிவேக டேட்டா பயன்பாடு, இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் செயலிகள் உள்ளிட்டவற்றை இணைந்து வழங்குவது உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.

SHARE