இலங்கை தொடர்பில் அடுத்த வாரம் மீண்டும் ஆராய்கிறது ஐ.நா

415

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை குழு அடுத்த வாரம் இலங்கை தொடர்பான செயற்பாடுகளை மீண்டும் ஆய்வு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் செயலகத்தினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் குழு, ஜெனீவாவில் அடுத்த மாதம் 7 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை தமது அமர்வுகளை நடத்தவுள்ளது.

இந்தநிலையில் ஒக்டோபர் 7 ஆம் 8 ஆம் திகதிகளில் இலங்கை தொடர்பான செயற்பாடுகளை ஆய்வு செய்யவுள்ளதாக அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேபோன்று, புருண்டி, ஹேய்ட்டி, மொல்டா, மொன்டினோகுரோ ஆகிய நாடுகள் தொடர்பான ஆய்வுகளுக்கும் வேறு தினங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த குழு தேசிய மனிதவுரிமை அமைப்புகள் மற்றும் அரச சார்ப்பற்ற நிறுவனங்களின் அபிப்பிராயங்களையும் அறிந்து கொள்ளும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

போர் முடிந்து விட்டது! தமிழர்களின் போராட்டம் தொடர்கிறது: ஐ.நாவில் முக்கியஸ்தர்கள் எச்சரிக்கை

SHARE