தொலைந்து போனதாக கருதப்பட்ட சந்திரயான் -1 செயற்கை கோளானது தற்போது நிலவை சுற்றி வருவது நாசா விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளித்துறையிலிந்து நிலவினை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட முதல் செயற்கை கோள் சந்திரயான் -1 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 2008 அக்டோபர்-22 ம் திகதி அனுப்பப்பட்டது.
2009 ஆகஸ்டு-29 க்குள் அதாவது ஏவப்பட்ட ஓரு ஆண்டுக்குள் சந்திரயானுடனான தகவல் தொடர்பினை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இழந்தது.
இதற்கிடையில் தொலைந்து போனதாக கருதப்பட்ட விண்கலமானது நிலவின் மேற்பரப்பில் 200கி.மீ. தொலைவில் சுற்றி வருவதை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ஆனால், நிலவின் சுற்றுவட்டபாதையில் நிலவானது இருந்தாலும் அதனுடன் தொடர்பு கொள்ள இயலாது. அது விண்வெளி குப்பையாகவே கருதப்படும் என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டாஅவது நிலவு பயணமாக சந்திரயான் -2 அடுத்த ஆண்டு ஏவப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.