பேஸ்புக் நிறுவனரான மார்க் சக்கர்பெர்க், பிரிசில்லா சான் என்ற தம்பதியினருக்கு மேக்ஸ் என்ற பெண் குழந்தை உள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறக்க இருப்பதாக மார்க் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து மார்க் பேஸ்புக்கில், பிரிசில்லா மீண்டும் கர்ப்பம் தரித்திருப்பதால், அந்த குழந்தை ஆரோக்கியமாகவும், பெண் குழந்தையாகவும் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
ஏனெனில் மேக்ஸு-க்கு தங்கை இருப்பதை விட பெரிய பரிசு வேறெதுவும் இல்லை. இதனால் மேக்ஸும் அவளும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருப்பார்கள்.
நான் மூன்று சகோதரிகளுடனும், பிரிசில்லா இரண்டு சகோதரிகளுடன் வளர்ந்தோம்.
புத்திக்கூர்மையும், வலிமையையும் மிக்க எங்களின் சகோதரிகள் எங்களுக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்தார்கள்.
அவர்கள் சகோதரிகளாக மட்டுமல்லாமல் சிறந்த நண்பர்களாகவும் இருந்ததால், அன்பு, கடின உழைப்பு போன்றவற்றின் முக்கியத்துவத்தை நாங்கள் தெரிந்துக் கொண்டோம்.
இது போன்ற சகோதரிகள், அம்மாக்கள், தோழிகள் என்று வலிமையான பெண்கள் நம்மைச் சுற்றி இருப்பதால் தான் நாம் சிறந்தவர்களாக இருக்கிறோம்.
எனவே எங்களுக்கு பிறக்க இருக்கும் செல்ல குழந்தையை வலிமை மிகுந்த பெண்ணாக வளர்க்க நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.