அதிகாரத்தை கைப்பற்றுவது குறித்து கூட்டமைப்புடன் பேசமாட்டோம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி

428

அதிகாரத்தைக் கைப்பற்றுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசப்போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

இரண்டு கட்சிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

தமிழ் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட உள்ளது.

குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் காணி மற்றும் பாடசாலை பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளது.

கடந்த வாரம் இந்த சந்திப்பு நடத்தப்படவிருந்தது.  எனினும் தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த சந்திப்பு நடத்தப்படவில்லை.

எதிர்வரும் வாரத்தில் கொழும்பில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்க உள்ளதாக ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் கூட்டாக இணைந்து வடக்கு கிழக்கு மாகாணங்களை மீளவும் இணைக்க முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து சுயாட்சி அதிகாரங்களை நிறுவும் முனைப்புக்களில் இரு கட்சிகளும் ஈடுபட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் முஸாம்மில் தெரிவித்துள்ளார்.

 

SHARE