வாசனை உணர்வை இழக்க நேர்ந்தால் என்னவாகும் தெரியுமா?

220

\மூத்த குடிமக்கள் தங்களது வாசனை உணர்வை முழுவதுமாக இழக்க நேர்ந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் மரணம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

மூத்த குடிமக்களின் வாசனை உணர்வை கணக்கிட்டு அவர்களின் ஆரோக்கிய நிலையை உறுதிப்படுத்த முடியும் என புதிய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

1800 பேருக்கும் அதிகமான மக்களிடம் இதுகுறித்த ஆய்வு மேற்கொண்டதில், வாசனையை உணர்ந்துகொள்ள தத்தளிக்கும் மக்களில் அடுத்த 10 ஆண்டுகளில் மரணத்திற்கான அறிகுறிகள் தென்பட்டதாக தெரிய வந்துள்ளது.

ஆனால் இந்த புதிய ஆய்வுக்கும் dementia பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ஆராய்ச்சியாளரும் மருத்துவருமான onas Olofsson தெரிவித்துள்ளார். dementia நோயால் பாதிக்கப்பட்டாலும் வாசனை உணர்வு இருக்காது என முன்னர் ஆய்வாளர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் மருத்துவ ஆய்வரிக்கை ஒன்று குறித்த புதிய ஆய்வறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் 1174 இளைஞர்கள், 40 முதல் 90 வயதுடையவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

ஆய்வின் முடிவில் வாசனை உணர்வு அறவே இழந்துள்ள பெரும்பாலானவர்கள் அடுத்த 10 ஆண்டுகளில் மரணத்திற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

SHARE