செவ்வாய் கிரகத்தில் என்னவெல்லாம் உள்ளது தெரியுமா?

278

செவ்வாய் கிரத்தை தத்ரூபமாக நமது கண் முன்னே கொண்டு வந்துள்ளார் பின்லாந்தின் திரைப்பட கலைஞர் ஒருவர்.

நாசா இதுவரை வெளியிட்டுள்ள புகைப்பட தொகுப்பை மொத்தமாக சேகரித்து செவ்வாய் கிரகத்தின் அழகை தத்ரூபமாக 3 நிமிடங்களில் பதிவு செய்துள்ளார் பின்லாந்தின் திரைப்பட கலைஞர் ஒருவர்.

குறித்த காணொளியானது செவ்வாய் கிரகத்தின் மீது ஒரு விமானத்தில் பறந்து செல்லும் போது தென்படும் காட்சிகள் நமக்குள் ஏற்படுத்தும் பூரிப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்கிறார் திரைப்பட கலைஞர் Jan Fröjdman.

செவ்வாய் கிரகத்தில் பார்வையிட வேண்டிய ஏராளமான பகுதிகள் இருப்பதாக வியந்து கூறும் Fröjdman இந்த வாழ்நாளில் இதுபோன்ற ஒரு தொகுப்பை காண முடியுமா என்பது சந்தேகமே என தெரிவித்துள்ளார்.

 

கடந்த 2006 ஆம் ஆண்டில் இருந்தே செவ்வாய் கிரகத்தில் இருந்து அதி துல்லியமான புகைப்படங்களை அங்கிருந்து அனுப்பி வருகிறது. இதுவரை சுமார் 50,000 புகைப்படங்களின் தொகுப்பை பூமிக்கும் அனுப்பியுள்ளது.

குறித்த புகைப்படங்களின் தொகுப்பை சிரமம் பாராமல் எவ்வித மென்பொருளும் பயன்படுத்தாமல் சிறப்பாக தொகுத்துள்ளார் திரைப்படக்கலைஞர் Jan Fröjdman.

செவ்வாய் கிரகம் மொன்னொரு காலத்தில் பெருங்கடல்களால் சூழப்பட்டிருந்ததாம். பல பிரதேசங்கள் பனிப்படலத்தால் மூடப்பட்டிருந்ததாம் மட்டுமின்றி நெருப்பை உமிழும் எரிமலைகளும் ஏராளம் உள்ளன.

தற்போது கண்கவரும் புகைப்படங்களை தொகுத்து முப்பரிமாணத்தில் கணொளி ஒன்றை வெளியிட்டு அசத்தியுள்ளார் Jan Fröjdman.

மே

SHARE