பேட்டரியில் இருந்து நெருப்பு பற்றவைப்பது எப்படி தெரியுமா?

196

உணவு தயாரிப்பதற்கு மட்டுமின்றி அவசர காலங்களிலும் கூட நெருப்பு நமக்கு இன்றியமையாதது.

காட்டில் இரவு நேரத்தில் சிக்கி கொண்டால் விலங்குகளிடம் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வதற்கு நெருப்பு மிக அவசியம்.

அந்நேரத்தில் நெருப்பினை பற்ற வைப்பதற்கான உபகரணங்கள் நம்மிடம் ஏதும் இல்லை எனும் போது நம் மொபைல் போனின் பேட்டரியின் மூலமாக நெருப்பினை உருவாக்கலாம்.

ஆனால், இது சற்று ஆபத்தான முறை எனவே மிக அவசர காலங்களில் மட்டுமே இதனை மேற்கொள்ளவேண்டும்.

மேலும் இம்முறையின் போது விஷ வாயுகள் வெளியேறுவதால் மூக்கு, வாயினை துணிகொண்டு மூடி கொள்ளவேண்டும்.

வழிமுறைகள்

முதலில் எளிதில் எரியும் தன்மையுள்ள குச்சிகளை சேகரித்து கொள்ளவேண்டும். பின்னர், மொபைல்போனில் உள்ள லித்தியம் அயன் பேட்டரியின் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் முனைகளில் கூர்மையான பிளாஸ்டிக் பொருளை கொண்டு அழுத்தவேண்டும்.

அப்போது, அதிலிருந்து உருவாகும் பொறி கொண்டு பற்ற வைக்கலாம். ஆனால், இம்முறைக்கு சிறிதளவு சார்ஜாவது இருக்கவேண்டும்.

மற்றொரு முறையின் குச்சிகளை அடுக்கி அதற்கிடையில் பேட்டரியினை வைத்து கூர்மையான ஆயுதத்தினை வைத்து கிழிக்கவேண்டும். அப்போது பேட்டரி வெடித்து நெருப்பு உண்டாகும். இதன்மூலமாக நெருப்பினை பற்றவைக்கலாம்.

SHARE