ஐபோன்ல இந்த விடயத்தையெல்லாம் செய்யாதீங்க

174

ஐபோன் பயன்ப்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

ஐபோன் பழுதாகாமல் பாதுகாப்பாக வைத்திருக்க சில முக்கிய தவறுகளை நாம் செய்யக்கூடாது.

துடைப்பது

ஐபோன் டிஸ்ப்ளேவை, பலர் வீட்டு கண்ணாடி பொருட்களை பளபளப்பாக துடைக்க உதவும் நீர் வைத்து துடைப்பார்கள். அது தவறு.

செல்போனை சுத்தம் செய்ய பிரத்யோகமாக உள்ள பொருளை வைத்தே அதை செய்ய வேண்டும்.

இட வசதி

பலர் தங்களின் போனில் தேவையில்லாத மற்றும் அதிகம் உபயோகப்படுத்தாத ஆப்ஸ்களை வைத்திருப்பார்கள். இதை அழிப்பதன் மூலம் போனின் வேகத்தை அதிகமாக்கலாம்.

நோட்டிபிகேஷன்

ஐபோனில் இருக்கும் பல வித ஆப்ஸ்களுக்கு அடிக்கடி நோட்பிகேஷன்கள் வரும். அதை நிறுத்தினால் போன் பேட்டரியை சேமிக்கலாம்.

சார்ஜர்

பழுதடைந்த ஒயர் கொண்ட சார்ஜரை பயன்படுத்தக்கூடாது, அப்படி செய்தால் நெருப்பு பத்தி கொள்ளும் அபாயம் உண்டு.

அதிக நேரம் சார்ஜர் போடுவது

பலர் தங்கள் போனை இரவில் சார்ஜர் போட்டு விட்டு அப்படியே தூங்கி விடுவார்கள். இப்படி செய்தால் பேட்டரி விரைவில் செயலிழந்து விடும். ஐபோன் 30 நிமிடத்தில் முழு சார்ஜ் ஆகி விடும்.

போனை அணைத்து வைப்பது

ஐபோனை நாம் உபயோகப்படுத்தாத போது சுவிட்ச் ஆப் செய்வது நலம். இல்லையேல் அதிக சூடாகி விடும்.

SHARE