உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் உரிமை சர்வதேசத்துக்கு கிடையாது: தமிழீழ விடுதலைப் புலிகளை மீள ஒருங்கிணையச் செய்ய ஊக்கமளிப்பதே இந்த நாடுகளின் நோக்கமாகஅமைந்துள்ளது.

434

இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்யும் உரிமை சர்வதேச சமூகத்திற்கு கிடையாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இத்தாலி வாழ் இலங்கை மக்களை சந்தித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புனித பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு உத்தியோகபூர்வமாக அழைக்கும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த இத்தாலிக்கு விஜயம் செய்துள்ளார்.

சில நாடுகள் இலங்கையில் ஸ்திரமற்ற நிலைமையை ஏற்படுத்தும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை மீள ஒருங்கிணையச் செய்ய ஊக்கமளிப்பதே இந்த நாடுகளின் நோக்கமாகஅமைந்துள்ளது.

உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்து நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த இடமளிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கை மக்கள் நாட்டுக்கு எதிரான போலிப் பிரச்சாரங்களை முறியடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமது ஆட்சிக் காலத்திலேயே அதிகளவு தேர்தல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் நாடு எவ்வளவு ஜனநாயகத்தை உடையது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா வாழ் இலங்கை பிரதிநிதிகளை சந்தித்த ஜனாதிபதி

ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இலங்கை மக்கள் அங்கம் வகிக்கும் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இத்தாலியில் நடைபெற்றுள்ளது.

ரோம் நகரின் கேவலியரி பிரதேசத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் பெரும் எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் கலந்து கொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, நோர்வே, சுவிஸர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து வந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

இலங்கையில் அமைதியின் ஸ்திரத்தன்மை, அபிவிருத்தி மற்றும் தேசிய நல்லிணக்கத்திற்காக ஜனாதிபதி முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என பிரதிநிதிகள் தெரிவித்ததாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

SHARE