கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுள் கூகுள் மேப் சேவையும் ஒன்றாகும்.
இச் சேவையானது இன்று பல மில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இதற்கு பிரதான காரணமாக அமைவது துல்லியமான முறையில் இடங்களையும், பாதைகளையும் தெரிவிக்கக்கூடியதாக இருத்தல் ஆகும்.
எனினும் இவ்வாறான பயணங்களின் போது ஏற்படும் ஆபத்துக்களிலிருந்து தப்பிப்பதற்கும், பயணங்களை நண்பர்களுக்கு தெரிவித்து மகிழ்ச்சியடைவதற்கும் புதிய வசதி ஒன்றினை கூகுள் தர முன்வந்துள்ளது.
இதன் ஊடாக பயணங்கள் மற்றும் இடங்கள் தொடர்பான தகவல்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும்.
இவ் வசதியினை Android மற்றும் iOS சாதனங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.
இதற்கு மேலாக இணையத்தளத்தினூடாகவும், டெக்ஸ்டாப் கணினிகளின் ஊடாகவும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.