அசுர வேகத்தில் பயனர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வரும் பேஸ்புக் நிறுவனமானது விரைவில் இரண்டு பில்லியனை எட்டவுள்ளது.
இந்நிலையில் பயனர்களை இலகுவாக கவர்வதற்கு பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருவதுடன் அவற்றில் மாற்றங்களையும் செய்து வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக நேரடி ஒளிபரப்பு வசதியிலும் மாற்றம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது.
அதாவது இதுவரை காலமும் மொபைல் சாதனங்களில் மட்டுமே பேஸ்புக்கின் ஊடாக நேரடியாக வீடியோக்களை ஒளிபரப்ப முடிந்தது.
ஆனால் தற்போது லேப்டொப் மற்றும் டெக்ஸ்டாப் சாதனங்களிலும் இவ் வசதியினைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் விஸ்தரிப்பு செய்யப்பட்டுள்ளது.
இது அனைத்து வகையான சாதனங்களிலும் பேஸ்புக்கினை பயன்படுத்தும் பயனர்களுக்கு ஒரு சிறந்த வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.