வடமாகாண எல்லைக்குட்பட்ட கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் கடற்றொழில் செய்ய இடமளிக்கப்படமாட்டாது-கடற்றொழில் அமைச்சர் பா.டெனீஸ்வரன்.

522

fish

வடமாகாண எல்லைக்குட்பட்ட கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் கடற்றொழில் செய்ய இடமளிக்கப்படமாட்டாது. மீறி செய்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண கடற்றொழில் அமைச்சர் பா.டெனீஸ்வரன் எச்சரித்துள்ளார்.

DSC01554 455d

அதற்காக எவ்வாறான எதிர்ப்புக்கள் வந்தாலும் அவற்றைக் கண்டு பின்வாங்கப்போவதில்லை எனவும் அவர் கூறினார். வல்வெட்டித்துறை பகுதியில் இழுவைப்படகு மூலமாக கடற்றொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதியைவழங்குமாறுகோரி நானை திங்கட்கிழமை உண்ணாவிரதப் போராத்தில் ஈடுபடவுள்ளனர் என இழுவைப்படகு தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் – வல்வெட்டித்துறை இழுவைப்படகு தொழிலாளர்கள் எம்மோடு பல தடவைகள் பேசினார்கள். ஒரு தடவை முதலமைச்சரும் சந்திப்பில் இருந்தார். சட்டத்திற்கு மாறான எந்தவொரு கடற்றொழிலுக்கும் வடமாகாண கடற்பரப்பில் இடமில்லை என அவர்களுக்கு மிகத் தெளிவாகக் கூறிவிட்டோம்.

இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளினால் எங்கள் மக்கள் எவ்வாறான பாதிப்புக்களை எதிர்கொள்கின்றார்கள்? அதனால் எத்தயை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பது தொடர்பாக நாங்கள் அனைவரும் அறிந்திருக்கின்றோம். அதேபோன்று அதற்கு எதிர்ப்பும் நாங்கள் தெரிவிக்கின்றோம். இந்நிலையில் நாமே அதனை எப்படி செய்யலாம்? அதேபோன்று மன்னார் மற்றும் நீர்கொழும்பு பகுதியில் இவ்வாறு செய்யப்படுவதாக கூறப்படுகின்து. ஆனால் அதில் உன்மையில்லை. இந்தப் பகுதிகளுக்கு நான் சென்று பார்த்திருக்கின்றேன். என்பதையும் நான் தெளிவாகவே கூறியிருக்கின்றேன்.

அதற்குப் பின்னர் மன்னாரிலும் என்னை வந்து சந்தித்துப் பேசினார்கள். அப்போதும் நான் அதையே கூறினேன். இந்நிலையில் நேற்று எனக்கு தொலைபேசியில் அழைப்பு எடுத்து நாங்கள் உண்ணா விரதப்போராட்டம் நடத்தப்போகின்றோம் என கூறுகின்றார்கள். அப்படியானால் செய்யுங்கள் எனக் கூறிவிட்டேன். நாங்கள் அவர்களுக்கு சாதகமாக செயற்படவில்லை என அவர்கள் நினைக்கிறார்கள். அது உன்மையில்லை. மாவட்டத்தில் 16 ஆயிரம் கடற்றொழிலாளர்கள் குடும்பங்கள் உள்ளன.

இவர்களில் 15ஆயிரம் வரையான குடும்பங்கள் ஏழை கடற்றொழிலாளர்கள். அவர்கள் அன்றாட கடற்றொழிலை நம்பி அதிக வசதிகள் கூட இல்லாமல் கடற்றொழில் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை நடத்துகின்றார் கள். எனவே நாம் இந்த 23 இழுவைப்படகு தொழிலாளிகளை பார்ப்பதா? அல்லது 15ஆயிரம் ஏழை கடற்றொழிலாளர்களை பார்ப்பதா? இந்த நிலையில் நாம் 15ஆயிரம் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும். அவர்களுடைய எதிர்காலத்தையுமே நாங்கள் பார்க்கிறோம். இழுவைப் படகில் இடைமடி தொழில் செய்யப்போகின்றனர் என அவர்கள் கேட்கிறார்கள்.

அதுவும் தடைசெய்யப்பட்ட தொழில்தான். எனவே அது தடை செய்யப்பட்டதா? தடைசெய்யப்படவில்லையா? என்பது தொடர்பில் மீனவர்கள் நீதிமன்றத்தை நாடி முடிவெடுத்துக் கொள்ளலாம். சட்டத்திற்கு மாறான எந்தவொரு தொழிலுக்கும் இங்கே இடமில்லை. எங்களுடைய நிலைப்பாடு இதுதான். அவ்வாறு தாங்கள் செய்வோம். அதற்கு ஆதரவளிக்கவில்லை. என கூறி யாரேனும் எனக்கெதிராகவோ, அல்லது முதலமைச்சருக்கு எதிராகவே எதிர்ப்புக்களை முன்னெடுத்தால் அதனைக் கண்டு நாம் பின்வாங்கப்போவதில்லை. கடற்வளம்; எங்கள் சொத்து. அதனை அடுத்த சந்ததிக்கும் கொடுக்கும் கடமையை செய்வோம். –

SHARE