பாதுகாப்பு படையினர் மக்களின் அன்றாட செயற்பாடுகளின் தொடர்பில் உளவு பார்க்கவில்லை சிலர் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக கிளிநொச்சி பாதுகாப்பு படையனி கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த தெரிவிக்கின்றார்.
பயங்கரவாத செயற்பாடுகள் அரச விரோத நடவடிக்கைகளையே சுற்றி வளைப்பது பாதுகாப்பு பிரிவின் கடமை இதில் சிவில் பிரஜைகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. இனவாதத்தை தூண்டுவது போன்ற செயற்பாடுகளில் யாராவது செயற்படுகின்றனரா என்பதில் நாங்கள் இன்னும் விழிப்பாக இருக்கின்றோம்.
மாற்று சிந்தனைக் கொண்ட பூசகர் ஒருவர் இனவாதத்தை தூண்டும் வகையில் எழுதிய கவிதை புத்தகத்தை வடபகுதி பாடசாலைகளுக்கு விநியோகிக்க வடமாகாண சபை உறுப்பினர்கள் சிலர் அரசை கோரியுள்ளனர்.
படையினர் இந்த பிரதேசத்தில் பாரிய சமாதானம் மற்றும் ஒருமைப்பாட்டை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் பாதுகாப்பு படையினரை இந்தப்பகுதியிலிருந்து வெளியேற்ற கூட்டமைப்பு கோரிக்கை வைக்கின்றனர் ஆனால் வடக்கில் படையினர் தொடர்ந்து இருக்கவே மக்கள் வாக்களிப்பார்கள் என்றும் தெரிவிக்கின்றார்.