இங்கிலாந்து வீரர்கள் மிரட்டப்படுகிறார்கள்: ஆன்டி பிளவர் மீது பீட்டர்சன் குற்றச்சாட்டு

469

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆசஸ் தொடரில் இங்கிலாந்து 0–5 என்ற கணக்கில் மோசமாக தோற்றது.

இதனால் இங்கிலாந்து அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதற்கு பலிகடாவாக கெவின் பீட்டர்சன் நீக்கம் செய்யப்பட்டார். அதற்கு காரணம் பயிற்சியாளர் ஆன்டிபிளவர் கேப்டன் குக் என்று தகவல் வெளியானது. அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் அவர் டெய்லி டெலிகிராப் பத்திரிகையில் அளித்த பேட்டியில் பயிற்சியாளர் ஆன்டி பிளவர், விக்கெட் கீப்பர் பிரையர் ஆகியோர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:–

நான் ஏன் அணியில் இருந்து நீக்கப்பட்டேன் என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். இங்கிலாந்து டிரஸ்சிங் ரூம்மில் சுமூகமான சூழ்நிலை இல்லை. அங்கு வீரர்களை திட்டுவது, மனரீதியாக காயப்படுத்துவது நடக்கிறது.

கேட்ச்சை தவற விடுவதற்காக சீனியர் பவுலர்கள், விக்கெட் கீப்பர் பிரையர் ஆகியோர் கடுமையான வார்த்தைகளால் திட்டுவார்கள்.

இதில் பயிற்சியாளர் ஆன்டி பிளவரின் செயல்பாடும் திருப்தியாக இல்லை. அவரும் கடுமையாக நடந்து கொண்டார்.

மன்னிப்பு கேட்க வலியுறுத்தியதால் டிரஸ்சிங் ரூம்மில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஏன் அவர்கள் கேட்ச்சை தவற விடவே மாட்டார்களா? ஏன் நீங்கள் பந்துகளை வெய்டாக வீசவே மாட்டார்களா?

விக்கெட் கீப்பர் பிரையர் தவறான அணுகுமுறை, சூழ்நிலை கொண்டுள்ளார். பயிற்சியாளர் ஆன்டி பிளவர் இங்கிலாந்து வீரர்களை மிரட்டி பயத்துடனேயே வைத்து இருக்கிறார்.

இவ்வாறு அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

SHARE