பிரேசில் அதிபர் தேர்தலில் இழுபறி: 26-ந்திகதி மறுதேர்தல்

417

தென்அமெரிக்கா கண்டத்தில் உள்ள பிரேசில் நாட்டில் நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. அதில் ஆளும் இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சி வேட்பாளராக அதிபர் டில்மா ரூசோப் மீண்டும் போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து மத்திய உரிமை கட்சி சார்பில் ஏசியோ நெவெஸ் மற்றும் சோசலிஸ்ட் கட்சி சார்பில் மரினா சில்வா ஆகியோர் போட்டியிட்டனர்.

முன்னதாக சோசலிஸ்ட் கட்சி வேட்பாளராக எட்யூர்போ கம்போஸ் போட்டியிட்டார். கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த விமான விபத்தில் அவர் மரணம் அடைந்தார். அதை தொடர்ந்து மரினா சில்வா சோசலிஸ்ட் கட்சி வேட்பாளரானார்.

ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. அதில் 14 கோடியே 20 லட்சம் பேர் வாக்களித்தனர். அதன் பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

94 சதவீத ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் அதிபர் டில்மா ரூசோப் 42 சதவீதம் ஓட்டுகள் பெற்றிருந்தார். இவருக்கு அடுத்தபடியாக நெவெஸ் 34 சதவீதம் வாக்குகள் வாங்கியிருந்தார்.

இவர்களுக்கு அடுத்த படியாக சோசலிஸ்ட் கட்சி வேட்பாளரும் சுற்றுப்புற சூழல் ஆர்வலருமான மரினா சில்வாவுக்கு 21 சதவீத ஓட்டுகளே கிடைத்தன. இந்த தேர்தலில் வெற்றிக்கு தேவையான 50 சதவீத ஓட்டுகள் கிடைக்காததால் இழுபறி நீடிக்கிறது.

பிரேசில் அரசியல் சட்டப்படி தேர்தலில் 50 சதவீதத்துக்கு மேல் ஓட்டுகள் பெறுபவரே அதிபராக முடியும். எனவே மறுதேர்தல் வருகிற 26–ந்  திகதி நடக்கிறது.

அதில் அதிபர் டில்மா ரூசோப்பும், நெவாசும் போட்டியிடுகின்றனர். தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவர்கள் கடந்த 12 ஆண்டுகளாக அதிபராக இருந்து வருகின்றனர்.

டில்மா ரூசோப் கடந்த 2010–ம் ஆண்டு அதிபரானார். தொழிலாளர் கட்சியின் நிறுவனர் லூயிஷ் இனாசியோ லுலாடா சில்வா பாப்புலாரிட்டி அடிப்படையில் கடந்த தேர்தலில் மிக எளிதாக வெற்றி பெற்றார்.

SHARE