விஜய் கைதியாக சிறையிலா?

458

கத்தி இந்த தீபாவளிக்கு ரசிகர்களை கவர வருகிறது. இப்படம் குறித்து பலத்த எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் சமீபத்தில் ருசிகர தகவல் ஒன்று வந்துள்ளது.

இப்படத்தில் விஜய், கைதியாக சிறையில் இருப்பது போல் ஒரு போஸ்டர் வந்துள்ளது. இந்த போஸ்டரை வைத்துக்கொண்டு விஜய், படத்தில் மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி, பின் தண்டனையை அனுபவித்து, கிளைமேக்ஸில் சிறையில் இருந்து வெளிவருவார் என அதற்குள் எல்லோரும் ஒரு கதை கட்ட, விடையை நாம் திரையில் தான் காண வேண்டும். இதை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

யாரோ ட்ரைலரில் இருந்து ஸ்கீரின் ஷாட் எடுத்தது போல் உள்ளது. தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

SHARE