தேசிய விருது குறித்து சத்யராஜ்!

588

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் சத்யராஜும் ஒருவர். இவர் சமீப காலமால பல படங்களில் நல்ல கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதுகுறித்து பூஜை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அவரே மனம் திறந்துள்ளார்.

இதில் பேசிய அவர் ‘ ‘தலைவா’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ராஜா ராணி’ மற்றும் ‘சிகரம் தொடு’ போன்ற படங்களில் எனது கேரக்டர்களுக்கு அதிக பாராட்டு கிடைத்தது. அந்த விதத்தில் பூஜை படமும் அப்படி ஒரு படமாக தான் எனக்கு அமையும் என நம்புகிறேன்.

‘அவன் இவன்’ படத்துல விஷால் கண்ணை அப்படி வைச்சுக்கிட்டு நடித்தது எவ்வளவு கஷ்டம் என்று எல்லாருக்கும் தெரியும். அந்தப்படத்தில் சண்டைக்காட்சிகளில் எல்லாம் அவ்வளவு கஷ்டப்பட்டு நடித்திருப்பார். ‘அவன் இவன்’ படத்திற்காக விஷாலுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு.

தேசிய விருது கிடைத்தால், கமல் சாருக்கு கிடைத்தது நமக்கும் கிடைச்சிருக்கு என்று சந்தோஷப்பட்டு கொள்ளலாம். கிடைக்கவில்லை என்றால் சிவாஜி சாருக்கே கிடைக்கவில்லை, நமக்கு எங்கே கிடைக்கப்போகிறது. நடிப்புக்கே நடிப்பு சொல்லிக் கொடுத்த சிவாஜிக்கே தேசிய விருது கிடைக்கவில்லை, என்று கூறி மனதிற்கு தைரியம் சொல்லி கொள்ளலாம்’ என்று கூறியுள்ளார்.

 

SHARE