தமிழ் அர­சியல் கைதிகளின் உண்ணா விரதப் போர் ஆரம்பிக்கப்படுமானால் அது நாட்டுக்கோ ஆட்சியாளர்களுக்கோ ஆரோக்கியமாக அமைந்துவிடாது

331

 

தமிழ் அர­சியல் கைதிகள் விடு­தலை விவ­காரம் பல்­வேறு மாறு­பட்ட கருத்­துக்­க­ளையும் பிரச்­ச­னை­க­ளையும் உரு­வாக்­கி­ யி­ருக்கும் நிலையில் நவம்பர் 7 ஆம் திக­திக்கு முன் அவர்கள் விடு­தலை செய்­யப்­பட வேண்டும். இல்­லையேல் போராட்­ட த்­துக்கு களத்தில் இறங்­கு­வோ­மென கூட்­ட­மைப்பு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

இதே­வேளை தமிழ் கைதி­க­ளுக்கு பொது மன்­னிப்பு வழங்­க­மு­டி­யாது. வேண்­டு­மானால் அர­சியல் கைதி­க­ளுக்கு பிணை வழங்க முடி­யு­மென அர­சாங்கம் கூறிக்­கொண்­டி­ருக்­கி­றது.

இவ்­வகை முரண்­பா­டான கருத்­துக்கள் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­புக்கும் அர­சாங்­கத்­துக்­கு­மி­டையே கடந்த 10 மாதங்­க­ளுக்கு மேலாக வளர்ந்­து­ வரும் இணக்­கப்­பாட்­டுக்கு குந்­தகம் ஏற்­ப­டுத்­தி­வி­டு­மோ­வென்று எண்ணத் தோன்­று­கி­றது என்­பதை விட பயங்­கொள்ள வைக்­கி­றது.

கடந்த பல வரு­டங்­க­ளாக விசா­ர­ணை­யின்­றியும் வழக்குத் தாக்கல் செய்­யப்­ப­டா­மலும் விடு­விக்­கப்­ப­டா­மலும் இருக்கும் பல நூறு அர­சியல் கைதிகள் உட­ன­டி­யாக விடு­விக்­கப்­பட வேண்டும். குற்றம் காணப்­ப­டு­மானால் நீதி மன்­றுக்கு முன் கொண்டு செல்­லுங்கள்.

இல்­லை­யாயின் அவர்­களை விடு­வி­யுங்கள் என்ற நியா­ய­பூர்­வ­மான கோரிக்­கை­களை பல்­வேறு தரப்­பி­னரும் மனித உரிமை அமைப்­புக்களும், பொது அமைப்­புக்களும் முன்­வைத்து வந்­துள்­ளன. கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் இக்­கோ­ரிக்­கைகள் தீவி­ர­மாக முன்­வைக்­கப்­பட்டு வந்­துள்­ளன.

ஆட்­சி­மாற்­ற­மொன்று நிகழ்ந்­ததன் பின் னும் இக்­கோ­ரிக்­கைகள் இன்னும் தீவிரம் அடைந்து வருகின்றன. குறிப்பாக பொதுத் தேர்தல் முடி­வ­டைந்து தேசிய அர­சாங்­க­மொன்று உரு­வா­கிய நிலையில் தமக்கு விரைவில் நல்ல காலம் பிறக்கும் தாம் பொது மன்­னிப்பின் அடிப்­ப­டை­யிலோ அல்­லது விசா­ர­ணையின் சட்ட நீதிமுறையிலோ விடு­விக்­கப்­ப­டுவோம் என இலவு காத்த கிளிகள் போல் விடு­த­லைக்­காக காத்துக்கொண்டிருந்­த­வர்­க­ளுக்கு ஏமாற்றம் தந்த கார­ணத்­தி­னா­லேயே சிறைக்குள் இருந்த கைதிகள் தமது உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை ஆரம்­பித்­தி­ருந்­தார்கள்.

இவர்­களின் போராட்டம் நீதி­யா­னது நியா­யத்­தன்மை கொண்­டது என ஏற்­றுக்­கொண்­ட­த­னாலோ என்­னவோ ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எழுத்­து­மூல வாக்­கு­று­தி­யொன்றை கைதி­க­ளுக்கு வழங்­கி­யி­ருந்தார்.

உட­ன­டி­யாக நவம்பர் 7 ஆம் திக­திக்கு முன் அர­சியல் கைதி­களை விடு­விப்­பது தொடர்பில் தான் உறு­தி­யான நடவ­டிக்கை எடுப்பேன் என்ற எழுத்­து­மூல உத்­த­ர­வாதத்தை ஜனா­தி­பதி செய­லகம் ஊடாக நீதி­ய­மைச்­சுக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்டு  இந்த எழுத்­து­மூல உத்­த­ர­வாதம் சிறைச்­சா­லைகள் ஆணை­யாளர் ரோஹண புஷ்பகுமார­வுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டது.

ஜனா­தி­ப­தியின் எழுத்­து­மூல உத்­த­ர­வாதம் சிறைச்­சாலை ஆணை­யா­ளரால் மகஸின் சிறைச்­சா­லையில் போராட்­டத்தில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்த அர­சியல் கைதி­க­ளு க்கு படித்­துக்­காண்­பிக்­கப்­பட்­டது.

இந்த உத்­த­ர­வாத்தை ஏற்­றுக்­கொண்ட கைதிகள் தமது உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை 17.10.2015 அன்று இடைநி­றுத்திக் கொண்­டார்கள்.

இத்­த­ரு­ணத்தில் உடன் இருந்த எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் மற்றும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.ஏ.சுமந்­திரன், செல்வம் அடைக்­க­ல­நாதன், முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்பினர் அப்­பாத்­துரை விநா­ய­க­மூர்த்தி ஆகியோர் உடன் இருந்­த­துடன் இரா.சம்­பந்தன் கைதி­க­ளுக்கு மேலும் ஒரு உத்­த­ர­வா­தத்தை வழங்­கி­யுள்ளார்.

பாரிய குற்றம் இழைத்­த­வர்கள் தவிர ஏனைய அனை­வரும் நவம்பர் 7 ஆம் திக­திக்கு முன் விடுவிக்கப்படுவீர்கள். ஜனா­தி­ப­தியை நான் பூர­ண­மாக நம்­பு­கிறேன்.

உங்­களை விடு­விக்க நான் ஆவன செய்வேன் என இரா. சம்­பந்தன் பல­மான ஒரு வாக்­கு­று­தியை நல்­கி­யி­ருந்தார். இதை ஏற்றுக் கொண்­டதன் கார­ண­மா­கவே கைதிகள் தமது உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை இடை­நி­றுத்­தினர்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் கோரிக்­கை­களில் முதன்­மைப்­பட்டு நின்ற விவ­காரம் கைதி­க­ளுக்கு பொது மன்­னிப்பு வழங்­கப்­பட வேண்டும்.

மிக நீண்­ட­கா­ல­மாக சிறையில் வாடும் தமிழ்க் கைதிகள் இழைக்­காத குற்றத்துக்­கா­கவும் இழைத்த குற்­றத்­துக்கு மேலா­கவும் கால­வ­ரை­ய­றை­யற்ற தண்­ட­னையை அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

இவர்­க­ளுக்கு பொது­மன்­னிப்பு வழங்கி விடு­தலை செய்­யப்­ப­ட­வேண்­டு­மென்ற நியா­யத்தை அர­சாங்­கத்­துக்கு புகட்­டி­ய­துடன் வலி­யு­றுத்­தியும் வந்­துள்­ளனர்.

ஆனால் நாமொன்று நினைக்க அரசு ஒன்று நினைக்­கி­றது என்­பது போல் தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்கு பொதுமன்­னிப்பு வழங்­க­மு­டி­யாது. இதற்­கான சாத்­தி­யப்­பா­டுகள் இல்லை.

இதனால் சிறையில் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் விசாரணையின்றி உள்ள கைதி­க­ளையும் வழக்­குகள் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள கைதி­க­ளையும் பிணையில் விடு­விப்­பது என்ற தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அரசாங்கம் அறி­வித்­துள்­ளது.

கைதிகள் விடு­தலை தொடர்­பான உயர்­மட்ட கூட்டம் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மையில் கடந்த 19 ஆம் திகதி கூட்­டப்­பட்டு இதை­ய­டுத்து 26 ஆம் திகதி இரண்டாம் முறை கூட்­டப்­பட்டே மேற்­கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்­ளது.

கைதி­க­ளுக்கு பொது மன்­னிப்பு வழங்க முடி­யாது என்ற அர­சாங்­கத்தின் முடி­வா­னது தமிழ் மக்கள் மத்­தி­யிலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் விச­னத்தை ஊட்­டி­யி­ருக்­கி­றது என்­பது வெளிப்­ப­டை­யாக உண­ரப்­ப­டு­கி­றது.

index  தமிழ் அர­சியல் கைதிகள் விடு­தலை விவகாரம்: வேறுபாடு!!  (கட்டுரை) indexஇந்த விசன வீச்சை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் வெளிப்­ப­டை­யா­கவே கொட்டிக் காட்­டி­யி­ருக்­கிறார். தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விப்­பதில் எதி ர்ப்புத் தெரி­விக்கும் இன­வா­தி­களின் கருத்­துக்­க­ளுக்கும் அமைச்ச­ர­வையின் குழப்­பங்­க­ளுக்கும் நாம் பொறுப்­பல்ல.

எதிர்­வரும் 7 ஆம் திக­திக்குள் தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விப்­ப­தாக ஜனா­தி­ப­தியும் அர­சாங்­கமும் எமக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற வேண்டும். தவ­றினால் போராட்­டக்­க­ளத்தில் குதிப்போம் என சுமந்திரன் கட்­டியம் கூறி­யி­ருப்­பது கூட்­ட ­மைப்­பி­னரின் சீற்­றத்தை வெளிப்­ப­டுத்­து­வ­தா­கவே காட்­டு­கி­றது.

அது­மட்­டு­மன்றி கடந்த 10 மாதங்­க­ளுக்கு மேலாக கூட்­ட­மைப்­புக்கும் அர­சாங்­கத்­துக்­கு­மி­டையே ஏற்­பட்­டு­வரும் நெருக்­கப்­பாட்­டுக்கும் நல்­லி­ணக்­கத்­துக்கும் விரிசல் ஏற்­பட்­டு­வி­டுமோ மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறி­வி­டுமோ என்று எண்ண வைக்­கி­றது.

அர­சியல் கைதிகள் விவ­காரம் தொடர்பில் பார்க்கப் போனால் இந்த அர­சாங்­க­மா­னது மஹிந்த ராஜ­ப­க் ஷவின் எதேச்­ச­தி­கா ரப் போக்­கினை பின்­பற்றிக் கொண்­டி­ருக்­கி­றதா என்று சந்­தே­கப்­படும் அள­வுக்கு நிலை­மைகள் மாறிக்­கொண்­டி­ருப்­பதை அவ­தா­னிக்கக் கூடி­ய­தா­க­வுள்­ளது.

தேசிய அர­சாங்கம் நல்­லி­ணக்க அர­சாங்கம் என தமக்­குத்­தாமே பட்டம் சூட்டிக் கொண்­டி­ருக்கும் இந்த அரசாங்கமும் அதற்குள் பங்­கா­ளி­க­ளா­கவும் பிதா­ம­கர்­க­ளாக இருப்­போரும் அர­சியல் கைதிகள் விடு­தலை விவகா­ரத்தில் ஒன்­றுக்­கொன்று முர­ணான கருத்­துக்­களை முன்­வைப்­ப­துடன் அர­சாங்­கத்தின் நேர்த்­தன்­மைக்கு ஊறு­வி­ளை­விப்­ப­வர்­க­ளா­கவும் காணப்­ப­டு­கின்­றார்கள் என்ற விமர்­சனம் தமிழ் மக்கள் தரப்­பி­லி­ருந்து முன்­வைக்­கப்­ப­டு­கி­றது.

தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்கு பொது மன்­னிப்பு வழங்கி அவர்கள் விரைவில் விடு­விக்­கப்­பட வேண்­டு­மென மீள்கு­டி­யேற்றம் புனர்­வாழ்வு மற்றும் மத விவ­கார அமைச்சர் டி.எம். சுவா­மி­நா­தனால் அண்­மையில் நடை­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்தின் போது முன்­வைக்­கப்­பட்ட யோசனை அமைச்­ச­ர­வை­யினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த யோச­னையை முன் வைத்­த டி.எம்.சுவாமிநாதன் வேறு யாரு­மல்ல ஐ.தே.க.வின் அமைச்சர், நீண்­ட­கால உறுப்­பினர்.

இவர் முன்­வைத்த யோச­னைக்கு எதி ர்ப்பு தெரி­வித்­த­வர்கள் நீதி­ய­மைச்சர் விஜே­தாஸ ராஜ­பக் ஷ, மற்றும் ஜாதி­க­ஹெல உறு­மய கட்­சியின் செய­லாளர் சம்­பிக்க ரண­வக்க ஆகியோர்.

sampika ranavaka  தமிழ் அர­சியல் கைதிகள் விடு­தலை விவகாரம்: வேறுபாடு!!  (கட்டுரை) sampika ranavaka

சம்­பிக்க ரணவக்­க

சம்­பிக்க ரண­வக்­கவைப் பொறுத்­த­வரை அவ­ரு­டைய கடந்­த­கால அர­சியல் பாதை முழு­வ­திலும் தமிழ் மக் கள் விரோத நடை­போட்­ட­வ­ரா­க­வே­ இ­ருந்­துள்ளார் என்­பது உள்­ளங்­கையில் நெல்­லிக்­கனி போன்ற விடயம்.

ஆனால் நீதி­ய­மைச்­சரின் செயற்­பா­டுகள் தமிழ் மக்­களை ஆச்­ச­ரியம் அடை­ய­வைக்­கி­றது. ஜனா­தி­ப­தியின் அறிக்கை வெளி­வந்த மறு­க­ணமே நீதி­ய­மைச்சர் கூறிய கருத்து அவரின் உள்­ளார்ந்த நிலையை புட்டுக்காட்டுவதாக இருந்­துள்­ளது.

இதே­போன்றே அர­சியல் கைதி­களை விரைவில் நீதி­மன்ற நட­வ­டிக்­கைக்கு உட்­ப­டுத்த அர­சாங்கம் தீர்மானித்துள்­ளது.

அந்த வகையில் குற்­ற­மற்­ற­வர்­களை விடு­தலை செய்­யவும் பாரிய குற்­றச்­சாட்­டுக்கள் உள்­ள­வர்­களை சட்டநடவ­டிக்­கைக்கு உட்­ப­டுத்­தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­ மான ராஜித சேனா­ரட்ன முன்பு கூறி­யி­ருந்தார் இப்­பொ­ழுது அர­சியல் கைதி­க­ளுக்கு பொது மன்­னிப்பு வழங்கினால் சங்கடங்கள் ஏற்­ப­டு­மெனத் தட்­டிக்­க­ழிக்­கிறார்.

இதே­வேளை அர­சியல் கைதி­க­ளுக்கு பொது மன்­னிப்பு வழங்க முடி­யாது. அவர்­க­ளுக்கு பொது மன்­னிப்பு வழங்­கினால் இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் பொது மன்­னிப்பு வழங்க வேண்­டி­வ­ரு­மென அமைச்சர் சம்­பிக்க ரணவக்கவும்திலக் மாரப்­ப­னவும் கூறி­யுள்­ளனர்.

இவர்­களின் கூற்­றா­னது மொட்டைத் தலைக்கும் முழங்­கா­லுக்கும் முடிச்­சுப்­போடும் விவ­கா­ர­மா­கவே நோக்­கப்­ப­டு­கி­றது.

பொது­வா­கவே தமிழ் மக்­க­ளு­டைய எவ்­வகை பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண அரசு முயற்சி செய்­கின்ற போதேல்லாம் ஆளும் அர­சாங்­கத்தை சேர்ந்த தமிழ் மக்கள் விரோத சக்­தி­களோ அல்­லது குழுக்­களோ அதற்கு வெளியே உள்ள இன­வாத குழுக்­களோ கட்­சி­களோ தமது எதிர்ப்பை லாவ­க­மாக வெளிக்­காட்­டு­வது இலங்­கையில் ஒரு புதி­ய வரலாறு அல்ல.

ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்தை ஏற்றுக் கொண்­ட­போது முன்னாள் ஜனா­தி­பதி சந்திரிகா குமா­ர­துங்க அர­சியல் தீர்வை முன்­வைக்க விழைந்த போது இவ்­வா­றான நிலைகள் சூழ்­கொண்டிருக்கின்­றன என்­பது பொது­வான உண்மை.

தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விப்­பதில் ஆளும் தேசிய அர­சாங்­கத்­துக்­குள்­ளேயே உடன்­பாடு காணப்படவில்லை.

அதற்கு வெளி­யேயும் இன­வாத சக்­திகள் எதிர்ப்புத் தெரி­விக்­கின்­றன என்­பதை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் மிக பூட­க­மாக தெளி­வு­ப­டுத்திக் காட்­டி­யுள் ளார்.

இலங்­கையில் இன்னும் (இந்த நல்­லாட்சி அர­சாங்­கத்­திலும்) இன­வாத குழுக்கள் மற்றும் கட்­சி­களின் முறுக்கு நிலைகள் இன்னும் அடக்கி வைக்­கப்­ப­ட­வில்­லை என்­ப­தற்கு உதா­ர­ணமாகத்தான் தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கத்தின் கரு த்து வெளிக்­காட்டி நிற்­கின்­றது.

சிறை­யி­லி­ருக்கும் புலி­களை விடு­வித்து நாட்டில் மீண்டும் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த அர­சாங்கம் முயற்சிக்கிறது.

இவர்­களை விடு­தலை செய்தால் புலி­க­ளுக்கு அர­சாங்­கமே அங்­கீ­காரம் கொடுப்­ப­தற்கு சம­மா­னது. இவர்­களை விடு­வித்தால் மீண்டும் ஐந்தாம் ஈழப்போர் ஆரம்­ப­மா கும் என தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத் தின் தலைவர் குண­தாஸ அம­ர­சே­கர அர­சாங்­கத்தை எச்­ச­ரித்­துள்ளார்.

இவற்­றை­யெல்லாம் ஒன்று கூட்டிப் பார்க்­கின்ற போது தமிழ் அர­சியல் கைதி கள் விடு­தலை விவ­கா­ரத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கருத்து ஒன்­றா­கவும் பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்­கவின் கருத்து வேறொன்­றா­கவும் அர­சாங்­கத்­துக்­குள்­ளேயும் வெளி­யேயும் இருக்­கின்ற இனத்­துவ விரோத சக்­திகள் மற்றொன்­றையும் போக்­காக கொண்­டி­ருப்­பதைக் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது.

இந்த முரண்­பட்ட போக்­குகள் சூழ்­நி­லை­க­ளுக்கு மத்­தியில் சம­நிலை காணப்­பட்டு தமிழ் அர­சியல் கைதிகள் விடு­தலை விவ­காரம் சுமு­க­நிலை பெறுமா என்­பது கேள்­விக்­கு­றி­யா­கவே மாறி­யுள்­ளது.

தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்கு பொது மன்­னிப்பு வழங்க முடி­யாது என அர­சாங் கம் எடுத்­தி­ருக்கும் தீர்மானமானது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு விச­னத்தை உண்டு பண்ணும் விவ­கா­ர­மா­கவே மாறியிருக்கிறது.

கடந்த 17ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கைதி­க­ளுக்கு எழுத்­து­மூல வாக்­கு­று­தியை வழங்கியதோடு கூட்­ட­மைப்­பினர் இவ்­வி­வ­கா­ரத்­ துக்கு நவம்பர் 7ஆம் திகதிக்கு முன் தீர்வு காணப்­படும் என்ற உத்­த­ர­வா­தத்தின் அடிப்­ப­டை­யி­லேயே கைதி­களின் தொடர் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை கூட்­ட­மைப்­பினர் நிறுத்தி வைத்­தார்கள்.

ஆனால் கடந்த 20 ஆம் திகதி பிரதமர் தலை­மையில் உயர்­மட்டக் குழு எடுத்த தீர்­மா­ன­மா­னது கூட்­ட­மைப்­புக்கு விச­னத்தை உண்டு பண்­ணி­யி­ருப்­ப­துடன் அர­சுக்கும் கூட்­ட­மைப்­புக்கும் இடை­யே­யுள்ள அர­சியல் மற்றும் புரிந்து­ணர்வு நிலையை பாதி க்கும் விட­ய­மாக ஆக்கி­யி­ருக்­கி­றது.

இது பற்றி சம்­பந்தன் கருத்துத் தெரி­விக்­கையில் ஜனா­தி­பதியே தமிழ் கைதிகள் விடு­தலை தொடர்­பாக வாக்குறு­தி­ய­ளித்­தி­ருந்தார். அவ்­வாக்­கு­று­தியைக் காப்­பாற்ற வேண்­டிய பொறுப்பு அவ­ருக்­கு­ரி­யது என தெளி­வாக விளக்­கி­யுள்ளார்.

இது பற்றி சம்­பந்தன் மேலும் விளக்­கு­கையில் நாடு முழு­வ­தி­லு­முள்ள 14 சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்கப்­பட்­டுள்ள 217 தமிழ் அர­சியல் கைதிகள் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை கடந்த 12ஆம் திகதி ஆரம்பித்தனர்.

கைதி­களின் விடு­தலை விவ­காரம் தொடர்பில் நவம்பர் 7 ஆம் திக­திக்கு முன்னர் நிரந்­தர தீர்வு பெற்றுத்தரப்படுமென ஜனா­தி­பதி உறு­தி­ய­ளித்­தி­ருந்தார்.

அவர் அதைக் காப்­பாற்­றுவார் என சம்­பந்தன் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­வித்­துள்ளார். இவ்­வா­றா­ன­தொரு விமர்சனத்துக்குரிய சூழ்நிலையில் நவம்பர் 7ஆம் திகதிக்கு முன் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவாரா அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான உயர்மட்டக் குழு எடுத்த தீர்மானத்துக்கு அமைய கைதிகள் பிணையில் விடுவிக்கப்படுவார்களா என்ப தெல்லாம் பிரச்சனைத்தளமாகவே மாறிக் கொண்டிருக்கிறது.

ஜனாதிபதி கூட்டமைப்புக்கும் சிறைக் கைதிகளுக்கும் அளித்த வாக்குறுதிகளின் படி நவம்பர் 7 ஆம் திகதிக்கு முன் கைதி கள் விடுதலை செய்யப்படாவிட்டால் ஏற்படக்கூடிய இரண்டு விளைவுகளுக்கு அரசு உடனடியாக முகங்கொடுக்க வேண் டிவரும் ஒன்று அரசியல் கைதிகள் முன்பு கூறியது போல் உண்ணாவிரதப் போராட்டம் 7 ஆம் திகதிக்குப் பின் தொட ங்கப்படும்.

இரண்டாவது விடயம் தமக்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறை வேற்றவில்லையென்ற கசப்புணர்வும் மனக்குன்றலும் கூட்டமைப்புக்கும் அர சுக்கு மிடையேயுள்ள நல்லிணக்கப் பாட்டையும் புரிந்துணர்வையும் நலிவடையச் செய்யக் கூடும்.

மீண்டுமொரு கைதிகளின் உண்ணா விரதப் போர் ஆரம்பிக்கப்படுமானால் அது நாட்டுக்கோ ஆட்சியாளர்களுக்கோ ஆரோக்கியமாக அமைந்துவிடாது என்பதும் எதிர்க்கொள்ளப்பட வேண் டிய விடயம்.

கடந்த 60 வருடத்துக்கு மேலான அரசியல் நகர்வில் தற்பொழுது ஏற்பட்டிருக்கும் சாதகமான சூழ்நிலையை இந்த ஆட்சியாளர்களும் தட்டிக் கழிப்பா ர்களானால் அது நாட்டுக்கு பேராபத்தாக முடிவதுடன் அரசியல் தீர்வொன்றை நோக்கி நகர்வதற்கும் இடைஞ்சலாக ஆகிவிடும்.

எவ்வாறு இருந்த போதிலும் தமிழ் மக்களுக்கு ஏமாற்றம் தரும் அரசாக இதுவும் மாறிவிடக்கூடாது என்பதே எல் லோருடைய எதிர்பார்ப்பாகும்.

– திருமலைநவம்

SHARE