இறுதியாக ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா.மனித உரிமை சபையின் 34வது கூட்டத் தொடர், சிறிலங்கா மீது 2015ம் ஆண்டு செப்டம்பர்மாதம்நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்குமேலும் இரு வருடகாலம் கொடுக்கப்பட்டுள்;ளது. அங்கு முக்கியபுள்ளிகள் ராஜதந்திரிகள்பிரசன்னமாகியிருந்த கூட்டங்கள்சந்திப்புக்களில், இரு வருடம் அல்லா மேலும் இருபது வருடங்கள்கொடுத்தாலும், சிறிலங்காவின் தற்போதைய அரசு அல்லா,எந்த அரசும்இவ் தீர்மானத்தின் முக்கிய சாரமான சர்வதேச நீதிபதிகள், வழக்குதொடுனர்கள், வழங்கறிஞர்கள் அடங்கிய போர் கிறீமினல்விசாரணையைமேற்கொள்ள போவதில்லை என்பதை திட்டவட்டமாகநான் மட்டுமல்லாது அங்கு வந்து இருந்த வேறு சில தமிழாகளும்; கூறியிருந்தார்கள். 2015ம் ஆண்டுசெப்டம்பர் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பொழுதே இதனதுசாரங்களை சிறிலங்கா ஒருபொழுதும் நடைமுறைப்படுத்தப்படுத்த போவதில்லை என்பதைஅன்றேகூறியிருந்தோம்.
அங்கு நடைபெற்ற ஓர் கூட்டத்தில், “தற்போதைய அரசாங்கம் ஓர் சிறுபான்மை அரசாங்கம், இதனால்எந்த அரசியல் யாப்பை புதிதாகவோ, மாற்றங்கள்செய்தோ பாரளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது”என்பதை எடுத்து கூறிய வேளையில், சிறிலங்கா அரச தரப்பினர் தாம் இன்று வரை நிறைவேற்றியவரவுசெலவு திட்டங்களிற்கு குறைந்தது 165 வாக்குகள் கிடைத்தாக கூறியிருந்தார்கள். மிகவும்வேடிக்கையான விடயம் என்னவெனில், வரவு செலவு திட்டத்திற்கானவாக்கெடுப்பையும், அரசியல்யாப்பிற்கான வாக்கெடுப்பிற்கான வாக்கெடுப்பையும் சமனாக இவ் அரசாங்கம் பார்ப்பது. அடுத்த வரவுசெலவு திட்டத்தில் –முன்னாள் ஜனதிபதிகள், பிரதமர்கள், அமைச்சர்கள் போன்றோரது ஊதியம், இளைபறிய பணம், விசேட சலுகைகளை பெரிதாக கூட்டினால், மகிந்த ராஜபக்சாஅணியினரும்அதற்கு வாக்களிப்பார்கள் என்பது இவர்களிற்கு தெரியாத விடயம் அல்லா. இப்படியாக கதைகளைகூறி சர்வதேசத்தை ஏமாற்றுகிறார்கள்.
அங்கு அமெரிக்கா, பிரித்தானியா, மொற்ரநீகிரோ, மசிடோனியா ஆகிய நாடுகளினால் கூட்டப்படட்வேறு ஒரு கூட்டத்தில், “1948ம் ஆண்டு முதல் தமிழர்களைஏமாற்றி மடையர்கள் ஆக்கிய சிறிலங்காஅரசுகள், தற்பொழுது உங்களை ஏமாற்ற ஆரம்பித்து விட்டார்களென” கூறியிருந்தேன்.
கடந்த 34வது கூட்டத் தொடரில் நடைபெற்ற பல விடயங்களை, ஐ.நா.விற்கு உள்ளீருந்தோரும், வெளியிலிருந்தவர்களும் அறிந்திருக்கவில்லை.
தமிழர் பரப்புரை
தமிழர்களது பரப்புரைவேலைகளை பொறுத்வரையில், 60-70 பேர் வரையில் உலகின் பலபகங்களிலிருந்து அங்கு பிரசன்னமாகியிருந்தனர். ஐ.நா.வில்உண்மையாக நேர்மையாக வேலைதிட்டங்களை நகர்த்தும் அமைப்புக்கள், ஒரு சிலருடன் தமது வேலை திட்டங்களை மிகவும்சாதுரீயமாகவும் நேர்த்தியாகவும்மேற்கொண்டனர். இங்கு ஐ.நா.வில் எண்ணிக்கை (Quntity) முக்கியம்அல்லா, தரம் (Quality) தான் முக்கியம் என்பது நிருபிக்கப்பட்டது. அதாவது, ஐ.நா.விற்குதமிழர் தரபில்பெரும் எண்ணிக்கையில் நாங்களும் ஐ.நா.மனித உரிமை சபைக்கு சென்றிருந்தோம் என்பதற்குமேலாக, தரமான ஒரு சிலர் அங்குசமூகமளித்தால் வேலை திட்டங்களை நகர்த்த முடியும் என்பதுஅங்கு நிருபிக்கப்பட்டது.
இங்கு ஓர் முக்கிய விடயத்தை குறிப்பிட விரும்புகிறேன். தமிழர் அமைப்பு ஒன்று, போர்குற்றவாளிகள் ஜெனிவாவிற்கு வந்தால் கைது செய்வோம் என ஊர்உலகம் எல்லாம் இணையதளங்களிலும் பத்திரிகைகளில் தம்பட்டம் அடித்துவிட்டு, போர் குற்றவழிகள் ஜெனிவாவிற்குவந்ததும், மௌனமாகி விட்டார்கள். இச்செயல், அவ் அமைப்பிற்கு மட்டுமல்லா உலகில் உள்ளஅத்தனை புலம் பெயர் அமைப்புகளிற்கு பெரும் இழுக்கை சம்பாதித்து கொடுத்துள்ளது.
ஐ.நா.விற்கு வருகை தந்திருந்த தமிழர்களில், தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்த தமிழர்களும்உள்ளடங்குவர். இதில் கடந்த சில வருடங்களாக தமிழீழ மக்களின்விடயங்களில், ஐ.நா.மனித உரிமைசபையில் பல தரப்பட்ட ஆக்கபூர்வமான உதவிகளை செய்துவருவது, டாக்டர் எஸ் ராமதாஸின் பசுமைதாயாகம் என்றஅமைப்பு என்பது குறிப்பிடதக்கது. இதில் விசேடமாக ஐ.நா.மனித உரிமை சபையில்டாக்டர் அன்புமணி ராமதாஸின் உரை என்பது மிகவும் பாரட்டுக்குரியது.இந்தியாவின் முன்னாள்சுகதார அமைச்சார் அன்புமணி ராமதாஸின் உரையை சபையில் கூடியிருந்தோர் மிகவும்அவதானமாக கேட்டிருந்ததை யாவரும்அவதானிக்க கூடியதாகவிருந்தது.
மிகவும் துணிச்சலான உரைகள்
தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்திருந்த சிலர் உணர்ச்சி எழுச்சி என்ற அடிப்படையில்காணப்பட்டார்களே தவிர, இவர்களால் மனித உரிமை சபையில் எதையும்பாதிக்கப்பட்ட தமிழீழமக்களுக்கு உருப்படியாக செய்ய முடியவில்லை. இவ் உணர்ச்சி பொங்கு தமிழ் நாட்டவர்கள், ஜெனிவா வந்து ஐ.நா.வில் எழுச்சியாககாணப்படுவதற்கு மேலாக, இவர்களால் தமிழ் நாட்டு மாநிலஅரசையோ அல்லது இந்தியா அரசையோ பாதிக்கப்பட்ட தமிழீழ மக்களிற்கு நீதி கிடைக்கும்வகையில்மாற்ற முடியவில்லை என்பது கவலைக்குரிய விடயம்.
ஐ.நா.மனித உரிமை சபையில் சிறிலங்கா விடயத்தில் ஆற்றப்பட்ட உரைகளில், தற்போதையசிறிலங்கா அரசு உருவாவதற்காக உழைத்த திருமதி நிமல்காபெர்ணான்டோ, காலாநிதி பாக்கியசோதிசரவணமுத்து ஆகிய இருவர்களின் உரைகள் மிகவும் துணிகரமானவை. இவர்கள் இருவரும்தற்போதைய அரசுடன்நட்பாக இருந்த பொழுதும். இருவரும் சிறிலங்காவின் தற்போதைய நிலைகளைஎந்த ஒளிப்பு மறைப்பின்றி வெளிப்படைய தற்போதைய அரசை சர்வதேசஅரங்கில் குறைகூறினார்கள்.
இவர்கள் இருவரும் தற்போதைய அரசின் அரசியல் தீர்வு, பொறுப்பு கூறல் ஆகிய விடயங்களில்எந்தவித நம்பக தன்மைகளும் காணக்கூடியதாக இல்லையெனகூறினார்கள்.
மனித உரிமை சபையில் துணிச்சலாக உரையாற்றிய நிமல்கா பெர்ணன்டோ, ஜெனிவாவிலிருந்துகொழும்பு சென்றடைந்ததும், இவர்; உண்மைகளையும்யாதார்த்தங்களை ஐ.நா.வில் கூறியதற்குஎதிராக கொழும்பில் அவரது வீட்டிற்கு முன்பாக சில பெண்கள் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டனர். அத்துடன் சிங்களதீவிரவாதிகளினால் நடத்தப்படும் பத்திரிகைகள், முகநூல்களில் மிகவும்கெவலமான முறையில் வஞ்சிக்கப்படுகின்றார்.
இவ் நிலையில், யாவரிடமும் எழும் கேள்வி என்னவெனில், தற்பொழுது சிறிலங்காவில் ஆட்சிசெய்பவர் யார்? முன்னாள் ஜனதிபதி ராஜபக்சாவும் அவரதுஆட்களுமா? இல்லையேல் ஜனதிபதிசிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுமா?
மனித உரிமை சபையில் போர் குற்றவாளிகள்
கடந்த 34வது கூட்டத் தொடரில் ஐ.நா.விற்குள் இருந்தோரும், வெளியிலிருந்தவர்களும்அறிந்திருக்காத விடயங்களை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
இளைபாறிய கடற்படை தளபதி சரத் விஜயசேகரா, இவரது கையாட்களான கீர்த்தி வர்ணகுலசுரிய, மட்டக்களப்பை சோர்ந்த போலபொடி ஜெகதிஸ்வரன் எனும்ஒட்டுக்குழு உறுப்பினர் ஆகியோருடன், ஐக்கிய அரபு நாட்டில் சார்ஜா என்னும் இடத்தை சார்ந்த ஓர் சிங்கள வர்த்தகரும் இம் முறை மனிதஉரிமை சபைக்குவருகை தந்திருந்தனர்.
இவ் 34வது கூட்டத் தொருக்கு இவர்கள் யாவரையும் அழைத்து வந்தவர், சஞ்சே எனப்படும்பங்காளதேசத்தை சார்ந்த ஓர் முன்னாள் புத்தபிக்கு. ஐ.நா.மனிதஉரிமை ஆணைக்;குழுவில் பங்குகொள்வதற்காக, சஞ்சே என்பவர் தொன்நூறுகளில் ஜெனிவா வருகை தந்திருந்தார். காலப்போக்கில், தனது புத்தபிக்குவின்உடைகளை களைந்து, திருமணம் செய்து, குடும்பம் பிள்ளைகளுடன்ஜெனிவாவில் வசித்து வருகிறார்.
மனித உரிமை சபை வேளைகளில், இந்தியாவின் மனித உரிமை மீறல்களை கண்டிப்பதற்காக, இந்தியாவிலிருந்து பாதிக்கப்பட்ட சிலரை ஜெனிவாவரவழைத்து, இந்தியாவிற்கு எதிராக உரையாற்றவைப்பதையே சஞ்சே தொழிலாக கொண்டுள்ளார். இவரது செயற்பாடுகளை ஆராயுமிடத்து, இவர்முற்றுமுழுதாக பாக்கிஸ்தானின் புலனாய்வு பிரிவின் பக்க பலத்துடனேயே ஐ.நா.வில் செயற்பாடுவதுதெளிவாகிறது. இதேவேளை, சிறிலங்காவிற்கு எதிரானதமிழரது செயற்பாடுகளை முழுதாகமுடக்குவதற்காகவும் சஞ்சே மனித உரிமை சபையில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் பின்ணனிகளை கொண்ட ஒருவரின் துணையுடன், கடந்த மனித உரிமை சபைக்குசிறிலங்காவின் போர்குற்றவாளிகளின் வருகை,சிறிலங்காவின் புலனாய்விற்கும், பாகிஸ்தானின்புலனாய்விற்கும் இடையில் காணப்படும் நெருங்கிய உறவுகள் நிருபிக்கப்படுவதுடன், பாகிஸ்தானின்புலனாய்விற்கும் சிறிலங்காவின் கூட்டு எதிர்கட்சியினருடனான மசவாசான உறவுகள்தெளிவாகின்றது.
நான்கு தூண் திட்டம்
எது என்னவானாலும், தெற்கில் உள்ள முன்னாள் ஆட்சியாளர்களாதும், தற்போதையஆட்சியாளர்களதும் எண்ணங்கள் செயற்பாடுகளைபிரதிபலிப்பதற்காகவே, போர் குற்றவாளிகள்ஜெனிவாவில் எதிர் பரப்புரை வேலைகள் என்ற பெயரில் மனித உரிமை சபையில்களமிறக்கப்பட்டுள்ளார்கள்.தெற்கின் அரசியல்வாதிகளின் நான்கு தூண் திட்டங்களான – பௌத்தமயம், குடியேற்றம், சிங்களமயம், இராணுவமயம் ஆகியவை தமிழர்களதுதாயாகபூமியானவடக்கு – கிழக்கில் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் வரை, சர்வதேச கமூதாயத்தை திசைதிருப்பி, கால நேரத்தை இழுதடிப்பதற்காகவேஇவை யாவும் நடைபெறுகின்றனா.
கிழக்கு மாகாணத்தில் அம்பாறையை சேர்ந்த சரத் விஜயசேகரா இளைபாறிய கடற்படை தளபதிஎன்பதற்கு மேலாக ஓர் தீவிர பௌத்த சிங்களவாதி. இவர்சர்வாதிகாரி மகிந்த ராஜபக்சாவிற்குநெருங்கியவர் என்பதுடன், இவருடைய துணைவியார் திருமதி கோத்தபாய ராஜபக்சாவின் உறவினர். இவர் கடந்தஅரசில், உதவி அமைச்சாராக கடமை புரிந்தவர்.
சரத் விஜயசேகராவின் கையாட்களில் ஒருவரான கீர்த்தி வர்ணகுலசுhரியா ஓர் தீவிர பௌத்தசிங்களவாதி. இனத்துவேசங்களை கக்கும் தீவிர சிங்களபத்திரிகையின் பந்தி எழுத்தாளர். ஐ.நா.மனிதஉரிமை சபையில் இவர் மீது எண்ணுகணக்கற்ற முறைபாடுகள் பதிவாகியுள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது.
இவ் சிங்கள பௌத்தவாதிகளுடன், கைகோர்த்து நிற்பவர் பிரபல ஒட்டுக்குழு அங்கத்தவரானமட்டக்களப்பை சேர்ந்த்த போலபொடி ஜெகதிஸ்வரன். இவர்கடமையாற்றாத ஒட்டுக்குழுவேகிடையாது. புளோட்டில் ஆரம்பமாகி அதனை தொடர்ந்து ஈ.பி.ஆர்.எல்.எப் பின் ராசிக்குழுவில்இருக்கும் வேளையிலும், அதன்பின்னரும் நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழர்களை கிழக்குமாகணத்தில் கொன்று குவித்தவர். ராசிக்குழுவின் பின்னர், ஈ.பி.டி.பிலும் அதனை தொடர்ந்து,கருணாபிள்ளையான் குழுவில் இருந்த வேளையில், பல முக்கிய புள்ளிகளின் படுகொலைகளின் முக்கியபங்காளி. இவர் தற்சமயத்தில் ஏதோ வகையில்சுவிஸ் நாட்டில் தஞ்சம் பெற்று வாழ்கிறார். இவரதுஉடல்பாதிக்கப்பட்ட காரணத்தினால் தற்பொழுது, சக்கர நாற்காலியில் நடமாடுகிறார். சிறிலங்காஅரசபுலனாய்வினரினால் இவர் சுவிஸ் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாக நம்பதகுந்த வட்டாரங்கள்கூறுகின்றனா.
மனித உரிமை சபைக்கு இவர் வருகை தந்திருந்த வேளையில், இவர் என்னை தன் அருகே வருமாறுஅழைத்தார். நான் இவ் ஒட்டுக்குழு நபரை இனம் கண்டகாரணத்தினால் தவிர்ந்து கொண்டேன்.
ஐக்கிய அரபு நாட்டில் சார்ஜா என்னும் இடத்திலிருந்து மனித உரிமை சபைக்கு வருகை தந்தசிங்களவர், அங்கு மகிந்த ராஜபக்சாவின் வர்த்தகங்களைகவனிப்பவராக நம்பப்படுகிறது.
பாகிஸ்தான்
இவ் மாபெரும் போர்குற்றவாளிகள், பாகிஸ்தானின் துணையுடன் தமது எதிர் பரப்புரைகளைகவனிப்பதற்கா களம் இறக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்களிடம்பலரால் கேட்கப்பட்ட பலபோர்குற்றம் பற்றிய வினக்களிற்கு இவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. தாம்பயங்கரவாதிகளை அழித்தாக மட்டும் வீரம்பேசினார்கள்;.
இவர்களின் வருகையை தொடர்ந்து மேலும் பல முன்னாள் படையினரும், ஓட்டு குழு உறுப்பினரும்தமது போர்குற்றங்களை நியாயப்படுத்துவதற்காகஎதிர்வரும் மனித உரிமை சபையின் கூட்டதொடர்களில் பங்குகொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனா.
கடந்த 33ம் கூட்டத் தொடர், அதாவது 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற கூட்டத்தொடரிற்கு, பாகிஸ்தானை தளமாக கொண்டு இயங்கும் அரசசார்பற்ற அமைப்பான ‘உலக முஸ்லீம்காங்கிரஸ்’ அன்றும் என்றும், இந்தியாவிற்கு எதிரான பரப்புரைகளையே மேற்கொள்பவர்கள். ஆனால்தற்பொழுதுவழமைக்கு மாறாக யாழ்பாணத்து முஸ்லீம்களை தம்முடன் இணைத்து பரப்புரைகளைஆரம்பித்துள்ளனர் என்பது வியப்பிற்குரியது.
இருபத்தி ஐந்து வருடங்களிற்கு முன் முஸ்லீம்கள் யாழ்பாணத்திலிருந் வெளியேற்றப்பட்டவேளையில், ஐ.நா.வில் மௌனம்காத்த உலக முஸ்லீம் காங்கிரஸ்,ஏதற்காக திடீரென யாழ்பாணத்துமுஸ்லீம்களை பரப்புரையில் ஈடுபடுமாறு வற்புறுத்தியுள்ளார்கள் என்ற கேள்வி இங்கு எழுகிறது.
யாதர்தம்; என்னவெனில், யாழ்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களிற்கு உலக ஆதரவுஉண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. மிக அண்மைகாலமாக, இந்திய மீதான உலக முஸ்லீம்காங்கிரஸின் பரப்புரைகள் பலமிழந்து வருவதை நிவர்த்தி செய்வதற்காகவே, யாழ்பாணத்துமுஸ்லீம்களின்அனுதபங்கள் கொள்வது போல் பாசங்கு செய்கிறது உலக முஸ்லீம் காங்கிரஸ். இவர்களுடனான நட்பு யாழ்பாணத்து முஸ்லீம்களிற்கு நிட்சயம் பாரீய பதிப்பைஏற்படுத்தும்.
இந்தியா
பிராந்தியா வல்லரசான இந்தியா இன்று சிறிலங்கா விடயத்தில் செல்லா காசாகியுள்ளதைஅவதானிக்க முடிகிறது. சுpறிலங்காவின் தற்போதைய அரசு, சீனாபாகிஸ்தானுடன் கொண்டுள்ளநெருங்கிய உறவினால், இந்தியா ஒன்றுமே செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கை வாழ் தமிழீழ மக்களிற்கு மட்டுமல்லாது, மலைநாட்டு தமிழர்களிற்கும் பலவிதப்பட்டவாக்குறுதிகளை கொடுத்துள்ள இந்தியாவின்வேண்டுகோள்களை சிறிலங்கா அரசுகள் அலட்சியம்செய்வதை யாவரும் அவதானிக்க முடிகிறது.
எது என்னவானாலும், தமிழீழ மக்களிற்கு 1987ம் ஆண்டு யூலை மாதம் இலங்கை–இந்தியா ஒப்பந்தம்மூலம் ஓர் நியாயமான அரசியல் தீர்வை பெற்றுகொடுப்பதாக வாக்குறுதி கொடுத்த இந்தியாவின்படைகளினால் மிகவும் மோசமாக வடக்கு கிழக்கு வாழ் மக்களிற்கு பாரீய இழப்புகளைஏற்படுத்தியஇந்தியா, இன்று இவ் மக்களிற்கு எதை பெற்று கொடுக்கவுள்ளார்கள்? தமிழீழ மக்களின்கவல் அரண்களாக விளங்கிய தமிழீழ விடுதலை புலிகள், இந்தியாவேஅழித்தார்கள் என்றகுற்றச்சாட்டிற்கு இந்தியா இன்றுவரை எந்தவித பதிலையும் கூறவில்லை.
கடந்த ஐ.நா.மனித உரிமை கூட்டத் தொடர் கூறும் செய்தி என்னவெனில், இலங்கைதீவில்நடைபெற்ற போர்களம், தற்பொழுது ஐ.நா.மனித உரிமை சபைக்குமாற்றப்பட்டுள்ளது என்பதே.
ஓரு புறம் புலம் பெயர் வாழ் அமைப்புக்கள், போர்குற்ற விசாரணைக்கும், அரசியல் தீர்விற்கும் சர்வதேசத்தை வேண்டி நிற்கிறார்கள். அதேவேளை, முன்னாள்சிறிலங்கா படையினர், ஒட்டுக்குழுஉறுப்பினர் தாம் பயங்கரவாத அமைப்பையே அழித்தோம் எனவும், மறுபுறம் யாழ்பாணத்துமுஸ்லீம்கள் தமக்கானநியாயத்தை தேடும் இடமாக ஐ.நா.மனித உரிமை சபை எதிர்காலத்தில்விளங்கவுள்ளது.
இவை மனித உரிமை சபைக்கு உள்ளும் வெளியிலும், இரத்த களரிகளை ஏற்படுத்துமா என்றவினாவிற்கு யார் பதில் கூறுவார்கள்?
எது என்னவானாலும், முன்னாள் படையினர், ஒட்டுக்குழு உறுப்பினர் யாழ்பாணத்து முஸ்லீம்களின்பரப்புரைகளிற்கு, முன்னாள் இன்னாள் அரசதரப்பினர்களின் ஆதரவும், பாகிஸ்தானின் ஆதரவும்உள்ளது என்பது தெளிவாகியுள்ளது.
அச்சம் என்பது மடைமையடா -அச்சாமை தமிழர் உடமையடா,ஆறிலும் சாவும் நாலிலும் சாவும் – தமிழர் தாயகம் காப்பது கடமையடா!
ச.வி.கிருபாகரன்
பிரான்ஸ்