ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்குமா?

379
தமிழக முன்னாள் முதலவர் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள ஜாமீன் உள்ளிட்ட மனுக்கள் மீதான வக்கீல்களின் வாதம் ஆரம்பமாகியுள்ளது. ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி ஆஜராகி வாதிட்டு வருகிறார்.

 ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுதான் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அரசு தரப்பு வழக்கறிஞரின் கருத்தைக் கேட்கத் தேவையில்லை. அவசியமும் இல்லை. கேட்காமலேயே ஜாமீன் வழங்கலாம்.

ஜெயலலிதாவின் உடல் நிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் மாநில முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. ஜாமீன் வழங்கினால் அவர் எங்கும் ஓடி விட மாட்டார்.

ஜெயலலிதாவுக்கு தனி நீதிமன்றம் பிறப்பித்துள்ள தண்டனையை ரத்து செய்யக் கோரும் மனுவை விசாரிக்க தாமதம் ஏற்படும் என்பதால் முதலில் ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவர் நீதிபதி சந்திரசேகரா முன்பு வாதிட்டார்.

இதேவேளை ஜெயலலிதா தமிழகத்தில் செல்வாக்கு மிக்க தலைவர் என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் வாதிட்டார்.

நீதிபதி எச்சரிக்கை

ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஹைகோர்ட் மற்றும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலை அருகே அதிமுகவினர் குவிந்துள்ளனர்.

இதனால் அங்கு பதற்றம் நிலவுவதால் பாதுகாப்புக்காக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே ஜாமீன் வழக்கு விசாரணையின் போது, கோர்ட் வளாகத்தில் கூச்சலிட்ட அதிமுகவினரை வெளியேற்ற நீதிபதி உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

SHARE