சிங்களத் தலைநகரை அதிரவைத்த மத்தியவங்கி மீதான குண்டுத்தாக்குதல்.!! ஈழத்து துரோணர்.!!

409

 

சிங்களத் தலைநகரை அதிரவைத்த
மத்தியவங்கி மீதான குண்டுத்தாக்குதல்.!!
ஈழத்து துரோணர்.!!
1995 அக்டோர் 17 அன்று வசாவிளான், அச்சுவேலி, புத்தூர் பகுதி ஊடாக பெரும் எடுப்பிலான கள முனையினையை எதிரி திறந்தான்.
சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையென பெயர் சூட்டி, மிகப் பெரும் வல் வளைப்பை தமிழர் நிலங்கள் மீது எதிரி மேற்கொண்டான். அதை எதிர்த்து புலிகளின் படையணிகளும் களத்தில் இறங்கின. கடும் சண்டை மூண்டது.!
புலிகளின் வீரம் மிக்க எதிர் தாக்குதலால் சிங்களப்படை திணறியது. இந்த தாக்குதலில் விளைவாக ஆயிரக்கணக்கில் எதிரி மாண்டும், காயப்பட்டுமிருந்தான்.
இப்படியே சிறுக சிறுக முன்னேறி தமிழர் நிலங்களை அழித்து, எம் மக்கள் சிறுக சிறுக சேர்த்த பல்லாயிரம் கோடி சொத்துகளை சூரையாடி, எம் மக்கள் மீது கண்மூடித்தனமான எறிகணை, மற்றும் விமானத்தாக்குதல்கள் மூலம் பல நூறு பேரை கொண்று குவித்து, தமிழரின் கலாசார மையமான யாழை அழித்து  வலிகாமத்தை கைப்பற்றியிருந்தான் எதிரி.!
எதிரி வலிகாமத்தை கைப்பற்றியதும் புலிகள் அங்கிருந்து பின் வாங்கும் போது, மக்களும் ஒரே ஒரு பாதையான நாவற்குழி பாலத்தின் ஊடாக, புலிகளுடன்  தென்மராட்சி நோக்கி இடம் பெயர்ந்தனர்.
ஒரேநாளின் ஐந்து லட்சம் மக்கள் வெளியேறி மக்களும் புலிகளும் வேறல்ல என்பதை சர்வதேசத்துக்கு நிருபித்து, அந்த வரலாற்றை பதிவு செய்தனர்.!
மக்கள் வெளியேறியதும், உடனே புலிகள் தொண்டைமானாற்றில் இருந்து வல்லைவெளி ஊடாக வாதரவத்தை நாவற்குழி வெளியை சூனியப் பிரதேசமாக விட்டு, அரியாலை வரை, மிகப்பெரும் மண்ணணையை உருவாக்கி இராணுவத்தை முன்னேறவிடாமல் தடுத்து வைத்திருந்தனர்.
இந்த அவலத்துக்கு பழிவாங்க தமிழர் தரப்பும் தயாரானது. “அவலத்தை தந்தவனுக்கே அதை திருப்பி கொடு” என்னும் தலைவரின் சிந்தனைக்கமைய, எதிரியின் தலைநகரிலேயே அவலத்தை விதைக்க சிலர் தயாராகினர்.
சிங்களத் தலைநகரில் குண்டு வெடிப்பென்பது அந்தநேரத்தில் சாதாரண விடையம். ஒரு குண்டு வெடிப்பு நடந்தால் அங்கு சிங்கள அரசின் முக்கிய இலக்கொன்று அழிக்கப்பட்டிருக்கும்.
ஆனால், இந்த முறை சிங்களத்தின் பொருளாதார மையமொன்று தாக்குதலாளிகளால் இலக்கு வைக்கப்பட்டது. இப்படி பொருளாதார மையங்கள் மீதான தாக்குதல் இலக்கு மூலம் சிங்கள அரசு ஆட்டம் காணும் என்பது தாக்குதலாளிகளின் கணிப்பு.
அதற்கமைய முக்கிய இலக்கு மீதான வேவுகள் எடுக்கப்பட்டு தாக்குதல் திட்டமும் தயாரானது. அதன் படி இந்த தாக்குதலுக்கு மூன்று பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். ஒருவர் தற்கொலை குண்டுதாரியாக வாகனத்தை செலுத்தி இலக்கை தகர்ப்பது.
ஏனைய இருவரும் சிங்களப் பாதுகாப்பு படையினரின் தாக்குதலிருந்து வெடிமருந்து நிரப்பிய வாகனத்தையும், அதை செலுத்தி செல்லும் தற்கொடையாளியையும் இலக்குவரை சென்று அதை அவர் தகர்க்கும்வரை, அவரை பாதுகாத்து சூட்டாதரவு வழங்கி, பாதுகாக்க வேண்டும்.
திட்டம் தயாராகி நடைமுறைக்கு ஆயத்தமாகி இருந்தனர் தாக்குதலாளிகள். 31 ஜனவரி 1996 (ஒரு புதன்கிழமை என்று நினைக்கின்றேன்) அன்றய பொழுது அமைதியாகவே விடிந்தது.
ஆனால், சிறு அணியை சேர்ந்தவர்கள் மட்டும் அமைதியின்றி இருந்தனர். அதுவரை சிங்கள உளவுத்துறைக்கு, அவர்கள் தலைநகரில் வைத்தே தண்ணி காட்டி, மணல் ஏற்றி இறக்கிக்கொண்டிருந்தது அந்த பார ஊர்தி.
அன்று மணலுக்கு பதிலாக 220kg உயிர்சக்தி வெடிமருந்தை சுமர்ந்தபடி, தன்னை அழிப்பதற்கு தயாரானது அந்த பார ஊர்தி.
வெடிமருந்து தொகுதியின் பொறிமுறை இறுதியாக சோதிக்கப்பட்டதும், அந்த மூன்று வீரர்களும் தயாராகினர்.
நண்பர்களை கட்டித்தழுவி விடை பெற்றதும் புன்னகையுடன் தமது இலக்கு நோக்கி நகர ஆரம்பித்தனர். கொழும்பு ஜம்பட்டா வீதியிலிருந்து அந்த நெருப்பு மனிதர்கள் தமது இறுதிப்பயணத்தை அன்று ஆரம்பித்திருந்தனர்.
திட்டத்தின் படி, காலை பிரதான வாயிலை தகர்த்தபடி உள்நுழைந்தது பாரஊர்தி. அதற்கு பாதுகாப்பாக சென்ற வீரர்களும் தாக்குதலில் இறங்கினர். சிங்களத்தின் முப்படையிலிருந்த யாருமே ஊகிக்க முடியாத அதிரடித்தாக்குதல் ஒன்று அங்கு அரங்கேறியது.
சரியாக காலை 10.45மணிபோல் சிங்களத்தலைநகரே அதிர்ந்தது. இதமான கடல்காற்றை சுவாசித்துக்கொண்டிருந்த அந்த இடமே கந்தகப்புகையால் இருண்டுபோனது. சிங்களம் மட்டுமின்றி முழு உலகமும் அதிர்ந்து போனது.
இப்படித்தானே எம் மக்களும், நீ யாழை பிடிக்கும் போது கதறினார்கள்.!
இப்படித்தானே நாமும் உயிரை இழந்து நடைப்பிணம் ஆனோம்.!
இப்படித்தானே பல ஆயிரம் கோடி சொத்துக்களை நாம் இழந்தோம்.!
ஆம், அன்று சிங்களத்தின் பொருளாதார இழப்பு மட்டும் 1500மில்லியன் ரூபாய்.!
சிங்களம் அன்று சுருண்டது. உடனேயே இந்த தாக்குதலை புலிகள் செய்ததாக குற்றம் சாட்டியது சிங்களம். அன்று அதை புலிகள் மறுத்திருந்தனர்.
அடுத்தநாள் இந்த தாக்குதலுக்கு “எல்லாளன் படை” உரிமை கோரியது.!
இந்த தாக்குதலில் ராஜு ,கிட்டு, ராஜ் என்ற மூன்று பேர் ஈடு பட்டதாக சிங்களம் அறிவித்திருந்தது.
அத்தோடு எல்லாளன் படையின் கூற்றை மறுத்த சிங்களம் மீண்டும் புலிகள்மீது குற்றம் சாட்டி தலைவர் உட்பட 6பேருக்கு 200வருட சிறைத்தண்டனை தீர்ப்பு வழங்கி இருந்தது.
இந்த தீர்ப்பை எம் மக்கள் நகைப்புக்கிடமாகவே பார்த்தனர். எது எப்படியோ “யார் செய்தார்களோ” தெரியவில்லை? “துன்பத்தை தந்தவனுக்கே, அந்த துன்பத்தை தமிழர் திருப்பி கொடுத்தனர் என்பதே வரலாறு.!!
SHARE