HP அறிமுகம் செய்துள்ள புதிய டேப்லட்

478

தரமான கணனிகளை உற்பத்தி செய்வதில் முன்னணியில் திகழும் HP நிறுவனம் HP 10 Plus எனும் புதிய Android 4.4 KitKat டேப்லட் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

279.99 டொலர்கள் பெறுமதியான இந்த டேப்லட் 10.1 அங்குல அளவுடையதும், 1900 X 1200 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

இது தவிர 1GHz வேகத்தில் செயல்படக்கூடிய Quad-Core Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினை உள்ளடக்கியுள்ளது.

மேலும் 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவும் தரப்பட்டுள்ளன.

SHARE