புலனாய்வாளர்களின் கையில் எந்த நாடு தங்கியிருக்கிறதோ அந்த நாட்டை அசைக்க முடியாது

829

உலக வல்லரசு நாடுகள் தமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அந்நாட்டு புலனாய்வுக்கட்டமைப்பை பலப்படுத்தி வைத்திருக்கின்றன. குறிப்பாகச் சொல்லப்போனால் இஸ்ரேல், அமெரிக்கா, ரஷ்யா, ஸ்கொட்லாந்து இப்படி பலம்மிக்க புலனாய்வுநாடுகள் இடம்பெறுகின்றன. வீட்டோ அதி காரம் கொண்ட நாடுகளும் அந்நாட்டின் புலனாய்வுக்கட்டமைப்பிலேயே தங்கி யுள்ளது.

அதேபோன்று இலங்கை நாட்டையும் கூட அவ்வாறான ஒரு கட்டமைப்புக்குள் கொண்டுவருவதன் ஊடாக உலகளாவிய ரீதியில் தலைசிறந்த ஒரு தீவாக காணப்படுமே ஒழிய வேறு எந்த வகையிலும் அமையப்பெறமாட்டாது. உலகநாட்டில் இன்டர்போல், ஸ்கொட்லாந்து பொலிஸ் போன்ற உளவுப்பிரிவுகள் முக்கியத்துவம் வகிக்கின்றன. அதிலும் குறிப்பாக அமெரிக்காவைப் பொறுத்தவரையில் 52 மாநிலங்களில் 52 உளவுப்பிரிவுகள் இயங்கிவருகின்றன.

இப்படைப்பிரிவுகளின் கோட்வேட் அல்பாபீட்டா என்கின்ற அடிப்படையில் அமைகின்றது. 200 நாடுகளிலும் முதல்தரத்தில் அமெரிக்காவின் ஊஐயு இருப்பதுடன் ஸ்கொட்லாந்து பொலிஸ் 24மணிநேர உளவுநடவடிக்கையில் ஒரு விடயத்தை கண்டுபிடித்துக்கொடுக்கிறது. குறிப்பாக 200 நாடுகளிலும ஆசியப்பிராந்தியத்தில் மாத்திரமே புலனாய்வுக்கட்டமைப்பை மீறி ஜனாதிபதி அதிகாரத்தினை பயன்படுத்துகிறார்கள். இதனால் அந்நாட்டு புலனாய்வாளர்களினால் தமது செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாதுள்ளது. அந்நியநாட்டவர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கும் வசதியாக அமைகிறது.

இந்தியாவின் புலனாய்வில் தலைசிறந்த புலனாய்வுப்பிரிவாக ரோ செயற்படுகிறது. ரோவினு டைய புலனாய்வுக்கட்டமைப்பையே முறியடித்தவர்கள்தான் விடுதலைப் புலிகள். அல்பாபீட்டா கோட்வரிசையில் விடுதலைப்புலிகளினுடைய புலனாய்வுப் பிரிவினரின் பெயர் டெசி ஆகும். ராஜீவ்காந்தியை கொலைசெய்வதற்காக பயன்படுத்திய குறியீடு கஞ்சிகுடிச்சாறு ஆகும். கஞ்சிகுடிச்சாறு ஓவர் என்பது அவர் படுகொலை செய்யப்பட்டுவிட்டார் என்று அர்த்தமாகும்.

அவ்வாறிருக்கின்றபொழுது இலங்கையில் முப்படை அதிகாரங்களையும் தன்னகத்தே வைத்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அதிகாரத்தினை பயன்படுத்தி வெற்றி காண முடியும் என்பது பகற்கனவாகும். நாட்டின் புலனாய்வின் கட்டமைப்பை பலப்படுத்த வேண்டியதன் அவசியம் ஜனாதிபதி யின் கையில் தங்கியிருக்கின்றது. அதேநேரம் புலனாய்வுக் கட்டமைப்பின் ஆலோசனையின் படியே ஜனாதிபதியவர்கள் தனது நாளாந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். ஜனநாயக நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் ஊடாக புலனாய்வு நடவடிக்கைகளை புலனாய்வுத்துறையினரிடமே கைய ளிப்பது சிறந்ததொன்றாகும்.

இன்றைய காலகட்டத்தில் புலனாய்வாளர்கள் சுயாதீனமாக செயற்பட முடியாத நிலை இலங்கையில் உள்ளது. புலனாய்வாளர்கள் என்பது மக்களோடு ஒன்றிப்போகின்றவர்களாக இருக்கவேண்டும். அவர்கள் வேறு மக்கள் வேறு என பிரிப்பதன் ஊடாக வேவு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது மிகக்கடினமானதொன்றாகும். ஒசாமா பின்லேடனைப் பிடிப்பதற்கு 10 வருடங்களுக்கு முன்பதாகவே அமெரிக்க அரசினால் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. அதனூடாக பாகிஸ்தானுக்கு சென்று வெற்றிகரமாக தாக்குதலை நடாத்தி திரும்பினர் அமெரிக்க புலனாய்வுப்படையினர்.

உதாரணமாக சனல் 4 தொலைக்காட்சியினர் இலங்கைக்கு வந்தபொழுது இலங்கையரசு கையாண்ட விதம் தவறானதொன்றாகும். இதன் காரணமாக கெலம் மக்கரே தன்னுடைய நிகழ்ச்சி நிரல் தொடர்பாக கூறு கையில், இலங்கை தொடர்பில் தான் ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்படவில்லையென சனல் 4 தொலைக்காட்சியின் சுயாதீன ஊடகவி யலாளரும், போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படத்தின் இயக்குனருமான கெலும் மக்ரே தெரிவித்தார்.

ஒரு ஊடகவியலாளன் தனது கடமையை செய்ய வேண்டும். இலங்கை பிரச்சினையில் நான் செய்து வருவது சரியா னதே என்றார். இலங்கையின் இறுதிக்கட்ட போரில் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் அவர் இயக்கிய போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படம் இலங்கை உட்பட உலகம் முழுவதும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது.

பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு தொடர்பான செய்தி சேகரிப்புக்காக இலங்கை வந்த மக்ரே, விமான நிலையத்தில் அவருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை எதிர்கொண்டதுடன் வடபகுதிக்கு செல்ல அவர் மேற்கொண்ட முயற்சியின் போதும் இவ்வாறான எதிர்ப்பை எதிர் கொண்டார். கெலும் மக்ரே விடுதலைப்புலிகளிடம் சம்பளத்தை பெற்று வருவதாக சில ஆர்ப்பாட்டகாரர்கள் குற்றம் சுமத்தினர்.

இதற்கு பதிலளித்த மக்ரே இது ஆதாரமற்றதும் அடிப்படையற்றதுமான குற்றச்சாட்டு எனக் குறிப்பிட்டார். நான் முதலாவது காணொளி ஆவணப்படத்தை இலங்கையில் தயாரித்தேன். அதன் பின்னர் சில தகவல்களையும் காணொளி காட்சிகளையும் பெற்றேன் என்றார். இந்த காணொளிகள் உண்மையானது என்பதற்கு என்ன உத்தரவாதம் என எழுப்பட்ட கேள்விக்கு ஒன்றுக்கு பதிலளித்துள்ள மக்ரே, அது ஒளிப்பரப்படும் முன்னர் அதன் நம்பகத்தன்மை சரிபார்க்கப்பட்ட பின்னரே ஒளிப்பரப்பட்டது எனக் கூறினார்.

எனது இறுதி காணொளி ஆவணப்படம் பொதுநலவாய மாநாட்டுக்கு முன்னர் தயா ராகியது. எனினும், சோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் இது வெளியிடப்படவில்லை. ஒரு ஊடகவியலாளன் என்ற முறையில் எனது கடமைகளை முன்னெடுக்க இலங்கை வருவதற்கான வீசா வழங்கப்பட்டது. எனினும் வருகை தந்த நாள் முதல் புலனாய்வுதுறை மூலம் எனது நடவடிக்கைகள் கன்காணிக்கப்படுகின்றன. இது ஏமாற்றத்தை அளிக்கின்றது எனவும் கெலும் மக்ரே குறிப்பிட்டார்.

சனல்4 தொலைக்காட்சி நிறுவனத்துடன் இணைந்து இலங்கைக்கெதிரான செயற்பாடுகளில் ஈடுபடுவோரைக்குறிவைக்கும் செயற் பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இவ்வாறான கருத்துக்களையோ இவ்வாறான செயற்பாடுகளையோ கூறுவதற்கு கெலம் மக்கரேவிற்கு வாய்ப்பளித்ததும் இந்த அரசாங்கமே. ஒரு நாட்டின் புலனாய்வு என்பது தமது செயற்பாடுகளை இரகசிய மான முறையில் செயற்படுத்தியிருக்க வேண்டுமாயின் அவர்களோடு பல ஊடகவியலாளர்களையும் இணைத்தி ருக்கலாம் அதை விடுத்து ஆர்ப்பாட்டங்கள் செய்வது எந்தவித பயனும் அற்றது. இன்று சர்வதேச அள வில் இலங்கை தொடர்பாக பேசுவதும் இன்னும் பல சர்ச்சைகள் இருக்கின்றன. புலனாய்வினரின் செயற்பாடுகளை புலனாய்வினரிடமே விட்டுவிடுவதன் மூலம் அவர்களுடைய நடவடிக்கைகளை அவர்கள் திறம்படச் செய்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.

விடுதலைப்புலிகளின் போராட்டத்தை தோற்கடித்ததற்கு உலக நாடுகளின் பங்களிப்பு இருந்தாலும் கூட புலனாய்வுகளின் ஊடுருவலுக்கு அமெரிக்காவே மிகவும் உந்துசக்தியாக இருந்தது. இன்றைய காலகட்டத்தினை பொறுத்தவரையில் போராட்டம் என்பது இனி தலைதூக்குவதற்கு வாய்ப்புக்கள் குறைவு என்றே கூறலாம். இவ்வாறிருக்கின்றபொழுது இலங்கையரசாங்கம் புலனாய்வு கட்டமைப்பினரை வளர்த்தெடுக்கும் ஒரு கட்டாய நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றது. அவ்வாறு புலனாய்வுப்பிரிவினரை கட்டியெழுப்பாத பட்சத்தில் இந்த நாடு அமெரிக்காவின் காலணித்துவ நாடாகவோ அல்லது இந்தியா, சீனா போன்ற நாடுகளின் காலணித்துவ நாடாகவோ மாற்றம் பெறுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.

உலக வல்லரசுகள் எல்லாம் தமது புலனாய்வு நடவடிக்கைகளை கட்டியெழுப்புவதில் குறிக்கோளாக இருக்கின்றன. இலங்கையைப் பொறுத்தவரையில் பதவி ஆசையில் நாட்டை விற்கும் அளவிற்கு செயற்பட்டுவருகிறது என்பது மனவேதனைக்குரியதாகும். தற் பொழுது தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற அனைத்து இடங்களிலும் இலங்கை புலனாய்வாளர்களை அமர்த்தினாலும் கூட அவர்களினுடைய செயற்பாடுகள் வெற்றியளிக்காத நிலையே காணப்படுகின்றது. காரணம் சுயாதீனமாக புலனாய்வாளர்களினை செயற்படவிடாமையே காணமாகும்.

இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் எதிர்காலத்தில் புலிகள் தலைதூக்குவதற்கோ அன்றில் புரட்சி ஒன்று எழுவதற்கோ இடமளிக்கப்போவதில்லை என திடகாத்திரமாக தெரிவித்துள்ளனர். இதேநேரம் புலம்பெயர் நாடுகளில் புலிகளின் செயற்பாடுகள் இலங்கையின் இறைமைக்கு குந்தகமாகவே அமைகின்றது என்றும் அச்செயற்பாடுகள் இலங்கையின் நற்பெயருக்கு ஊறு விளைவிக்கின்றது எனவும் அரசு வெளிப்படையாகவே குற்றஞ்சுமத்தி வருகின்றது. .

இந்நிலையில் ஜெனிவாவில் இலங்கைப் புலனாய்வுத் துறையினர், கன்காணிப்பு நடவடிக்கைகளுக்காக ஜெனிவா சென்றடைந்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது. இலங்கை யிலிருந்து சென்றுள்ள அணியுடன் ஐரோப்பிய நாடுகளில் நிலைகொண்டுள்ள புலனாய்வு முகவர்களும் இணைந்துள்ளதாக கூறப்படுகின்றது. புலம்பெயர் நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து சென்றனர். இவர்களில் பலர் புலிகளுக்கு நிதி வழங்கியவர்கள் என்பதும் புலிகளின் ஊர்வலங்கள் மற்றும் செயற்பாடுகளில் பங்கெடுத்தவர்கள் என்பதும் தெட்டத்தெளிவாக தெரிந்திருந்தும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் 2009 மே இற்கு பின்னர் புலம்பெயர் தேசத்தில் செயற்படுகின்றவர்கள் இனங்காணப்பட்டு அவர்களது விபரம் நாட்டுக்குள் நுழைய முடியாதவர்களுக்கான கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறானவர்கள் சிலர் விமான நிலையத்தில் வைத்தே திருப்பி அனுப்பப்பட்ட சம்பவங்கள் குறிப்பிடத்தக்களவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் ஜெனிவாவில் களமிறங்கியுள்ள புலனாய்வாளர்கள் நிகழ்வுகளில் கலந்து கொள்கின்ற வர்களை துல்லியமாக இனங்கண்டு அவர்கள் மீதான அதி உச்ச நடவடிக்கைக்கு தயாராகலாம் என நம்பப்படுகின்றது. புலம்பெயர் புலிகள் பல பிரிவுகளாக பிளவுபட்டுள்ளனர். இவ்வாறு பிளவு பட்டுள்ள அநேகர் இலங்கை அரசுடன் ஏதோ ஒரு வழி யில் தொடர்புகளை பேணி வருகின்றனர். இவர்கள் தமது இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக மறு தரப்பை காட்டிக்கொடுத்தும் வருகின்றனர்.

இவ்வாறு இலங்கைப் புலனாய்வினரின் செயற்பாடுகள் இருந்தாலும் பெரியளவில் மாற்றம் ஒன்றை கொண்டுவருவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. எமது நாடு தொடர்பாகவும், பாதுகாப்பு சார்பாகவும் உரிய நடவடிக்கைளை எடுக்கவேண்டுமாயின் புலனாய்வுக் கட்டமைப்பினரை வளர்த்தெடுக்கவேண்டிய நிலைப் பாட்டிற்குள் மஹிந்த அரசாங்கம் காணப்படுகின்றது.

பல்வேறு புலனாய்வு அமைப்புக்கள் இலங்கையில் செயற்பட்டு வருகின்றன. இவர்களது தற்போதைய செயற்பாடுகள் நுற்றுக்கு 35வீதமாகவே காணப்படுகின்றது. விடுதலைப்புலிகளின் கட்டமைப்பு வெளிநாடுகளில் யுத்தத்தின் பின்னர் இயங்குவதற்கு காரணமாக அமைந்தவர்களும் இலங்கையரசே எனலாம். இனிவரும் காலங்களிலாவது புலனாய்வுக்கட்டமைப்பை கட்டி யெழுப்புவதன் ஊடாகவும், அவர்களின் கையில் அதிகாரங்களை வழங்குவதன் ஊடாகவும் சிறந்ததொரு புலனாய்வுக்கட்டமைப்பை உருவாக் கலாம். அது மட்டுமன்றி அந்நியருடைய காலணித்துவ நாடாக மாற்றம் பெறுவ தையும் தவிர்க்கலாம்.

 

 

pரி?னைஸ்ரீ27492சூளவாயளா.9தஆதவநுதுச.னிரக

SHARE