வட மாகாண சபையினதும் விக்னேஸ்வரனதும் மர்ம உலகின் பின்னணி

334

கனடா விமான நிலையத்தில் விக்னேஸ்வரனுடன் நிமலன்

வட மாகாணத்தின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கடந்த காலங்களில் தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வாக்குவங்கி அரசியலுக்குள் நுளைக்கப்படுவதற்கு முன்பதாக, இலங்கைப் பேரினவாத அரசின் நம்பிக்கைக்குரிய பிரதிநிதியாகச் செயற்பட்ட விக்னேஸ்வரனின் திடீர் தேசியவாதத்தின் பின்புலம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருந்தது. தெற்காசியாவில் ஏகாதிபத்தியங்களின் ஈர்ப்பு மையமாக மாறியுள்ள இலங்கை அரசியலில் ‘தமிழ்த்’ தேசியவாதத்தை விக்னேஸ்வரன் கையகப்படுத்தியுள்ளதன் பின்புலத்தில் அமெரிக்க மற்றும் இந்திய அரசுகளின் பங்கையும் அவதானிக்க முடிகிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதி என்றும் , ஆன்மீகவாதி என்றும் ஆளுமை மிக்கவர் என்றும் அறிமுகப்படுத்தப்படும் விக்னேஸ்வரனையும், அவரூடாக வட மாகாண சபையையும் இயக்கிவருபவர் நிமலன்கார்த்திகேயன் என்ற அவுஸ்திரேலிய நபர் என்பதை மாகாண சபையின் ஏனைய உறுப்பினர்களும் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

பிரித்தானியாவில் விக்னேஸ்வரனுடன் நிமலன்

வட மாகாண சபையின் சுன்னாகம் புகழ் ஐங்கரநேசன் மற்றும் விக்னேஸ்வரனுடன் தொடர்புடைய நிமலன் கார்த்திகேயன் வாக்குப் பொறுக்குவதற்குக் கூட மக்களிடம் செல்லாத அன்னியமான நபர். மாகாண சபையின் முக்கிய முடிபுகளை மேற்கொள்ளவதற்கும், முக்கிய நியமனங்களைச் செய்வதற்கும் நிமலன் கார்த்திகேயன் நேரடியாகவே தலையிடுகிறார்.

விக்னேஸ்வரனின் அனைத்துப் பயணங்களிலும் நிழல் போலப் பின்தொடருந்து உலகம் சுற்றும் நிமலனுக்கு எங்கிருந்து பணம் சுரக்கிறது என்பதற்கு மாகாண சபையின் ஏனைய உறுப்பினர்களுக்குக் கூடத் தெரிவதில்லை.

கனேடிய உரையாடலில் விக்னேஸ்வரனுடன் நிமலன்

இலங்கை அரசினால் வழங்கப்படும் பண ஒதுக்கீட்டைக்கூடப் பயன்படுத்தாத முதலமைச்சரும் குழுவினரும், எதற்காக நிமலன் இயக்கத்தில் உலகம் சுற்றுகிறார்கள் என்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

பாலியல் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்ட சாமியார் பிரேமானந்தாவின் சீடப்பிள்ளையான விக்னேஸ்வரன், சிங்கள தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில், புலிகளின் ஒடுக்குமுறைக்குள் இருந்தமையாலேயே தாம் இதுவரை அரசியலில் ஈடுபடவில்லை என்றும், பிரித்தானியாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இயக்கங்கள் இருந்த காலத்தில் பேச்சுரிமை மறுக்கப்பட்டது என்றும் வெளிப்படையாக கூறினார்.

போராட்ட இயக்கங்களை மறுத்த விக்னேஸ்வரன், ராஜபக்ச முன்னிலையில் மட்டுமே சத்தியப்பிரமாணம் செய்வேன் என அடம் பிடித்து, அதயே நல்லிணக்கமும் என்றார்.

புலிகளின் தொடர்ச்சி தாமே என மார் தட்டிக்கொண்டு, தமிழ்த் தேசியத்தைப் கால்பந்தாட்ட கிளப் போன்று மாற்றி மாவீரர் நாள் உட்பட பல்வேறு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் புலம்பெயர் குழுக்கள் விக்னேஸ்வரனின் இக் கருத்துக்களைக் கண்டுகொள்வதில்லை.

கஜேந்திரகுமாரும் குழுவினரும் இரண்டு தேர்தல்களில் தோற்றுப்போன பின்னர், விக்னேஸ்வரன் மட்டுமே புலம்பெயர் குழுக்களின் வியாபாரத்திற்கு உள்ளூர் ஊன்று கோலாகும் நிலை தோன்றியதால் தமது வியாபாரத்தின் தாரக மந்திரமான விடுதலைப் புலிகளின் கடந்த காலத்தையே கேள்விக்கு உட்படுத்துவதைக் கூட அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

இவ்வாறான இக்கட்டான சூழல் நிமலன் கார்த்திகேயனின் தலையீட்டை இலகுபடுத்திற்று.
ஆயிரக்கணக்கான ஆயுதம் தாங்கிப் போராடிய போராளிகள் வடக்கிலும் கிழக்கிலும் வாழும் சூழலில், ஆயுதப் போராட்டமே வன்முறை என்ற கருத்தை சமுகத்தின் பொதுச் சிந்தனையாக்கி, இலங்கையின் பிரதான பிரச்சனை வெறும் மதங்களுக்கு இடையேயான மோதலாக உருவகப்படுத்த முயலும் சதியின் மூல கர்த்தாவாக நிமலனும், அவரால் எய்யப்படும் அம்பாக விக்னேஸ்வரும் செயற்படுகின்றனர்.

ஆர்மிதேஜ்

இந்த சூழலில் நிமலனின் பின்னணியில் யார் செயற்படுகின்றனர் என்ற ஆய்வு அவசியமானது. நிமலன் கார்த்திகேயன், நோர்வே அனுசரணையுடன் நடைபெற்ற பேச்சுகளின் போதே அரசிலுக்குள் அறிமுகமாகிறார். சுதா நடராஜன் போன்றவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிவந்த நிமலன், அமெரிக்காவிலிருந்து செயற்படும் பேர்ள் என்ற அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகிறார்.

வியட்னாமியப் போராட்டத்திலிருந்து ஈழப் போராட்டம் வரை அழிப்பதற்குத் துணை சென்ற ஆர்மிதேஜ், பேர்ள் அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகிறார். பேர்ள் அமைப்பின் உறுப்பினரான மரியோ அருட்பிரகாசம் என்ற தமிழர், சுதா நடராஜனின் தமிழ் கார்டியனின் ஆசிரியர் மட்டுமன்றி அமெரிக்க ராஜாங்க அமைச்சிலும் வேலை செய்கிறார்.

அவுஸ்திரேலியப் பிரசையான நிமலனுக்கு இப்போது அவசர அவசரமாக இலங்கைப் பிரசா உரிமை வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் இலங்கைக்குச் செல்லவிருக்கும் நிமலன், வட மாகாண சபை முதலமைச்சரின் செயலாளராகவோ அன்றி அதற்கு இணையான பதவியிலோ நியமிக்கப்படுவார்.

ராசைய்யா நிமலன் கார்த்திகேயன்
ராசைய்யா நிமலன் கார்த்திகேயன்

இன்று வடக்கு மாகாண சபையை நடத்துவது ஐங்கரநேசனும் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் என்றால் அது முழுதான உண்மையாகிவிடாது. இந்த இருவரின் பின்னணியிலும் விடுதலைப் புலிகளின் அழிவுடன் நேரடித் தொடர்புடைய அவுஸ்திரேலிய வாசியான தமிழர் ராசைய்யா நிமலன் கார்த்திகேயன் என்பவர் செயற்படுகிறார். வட மாகாண சபையின் வெற்றுத் தீர்மானங்கள், சுன்னாகம் நீலத்தடி நீரில்பிரச்சனையில் தொடர்புடைய அழிவுகள் உட்பட நிர்வாகிகளை நியமிப்பதிலும் நிமலன் கார்த்திகேயனை மீறி யாரும் எதுவும் செய்துவிட முடியாது.

இன்று புலம்பெயர் நாடுகளிலிருந்து நிகழ்த்தப்படும் அழிவுகளின் பின்னணியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான மேற்கு நாடுகளின் முகவர்களாகச் செயற்பட்ட பலர் செயற்படுகின்றனர். புலம்பெயர் நாடுகளில் தமது சொந்த நலன்களுக்காகவும், அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் சீரழிவு நடவடிக்கைகளுக்காகவும் பல்வேறு அளவுகளில் குழுக்களும் தனி நபர்களும் செயற்படுகின்றனர். இவர்களின் செயற்பாடுகளுக்காக பெரும் நிதி கொடுப்பனவுகளை மேற்கு ஏகாதிபத்தியங்கள் மேற்கொள்கின்றன.

அவுஸ்திரேலியாவிலிருந்து மட்டும் மூன்று வேறுபட்ட குழுக்கள் ஐங்கரநேசன் மற்றும் விக்னேஸ்வரன் ஊடாக அழிவுகளை ஏற்படுத்த முடுக்கிவிடப்பட்டுள்ளன. தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் அக்கறையுள்ளவர்களைத் தொடர்புகொண்டு அவர்களைத் திசைதிருப்புவது. புதிய முற்போக்கு ஜனநாயகக் குழுக்கள் தோன்றிவிடாமல் தடுப்பது, போராளிகளின் தகவல்களைச் சேகரித்து அவற்றை உளவு நிறுவனங்களிடம் ஒப்படைப்பது போன்ற நடவடிக்களிலிருந்து, கருத்துருவாக்கம் ஏற்படுத்துவது போன்றவை வரை இக் குழுக்களும் தனி நபர்களும் மேற்கொள்கின்றனர்.

போராட்டத்திலும் அரசியலும் அக்கறையுள்ள தனி நபர்களை தமது பண உதவியில் தங்கியிருக்கும் நிலையை ஏற்படுத்தும் இத் தனி நபர்களும் குழுக்களும் விக்னேஸ்வரனையும் ஐங்கரநேசனையும் விட ஆபத்தானவர்கள். முதமைச்சர் விக்னேஸ்வரன் நிமலன் என்ற முகம்தெரியாத ஐந்தாம் படை ஏஜன்ட் ஒருவரின் கைப்பொம்மையாகச் செயாற்படுகின்ற அளவிற்கு இக் குழுக்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
இலங்கை அரசிற்கு எதிரானவர்கள் போன்ற தோற்றப்ப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளும் இக் குழுகளும் தனி நபர்களும், தாம் பெற்றுக்கொள்ளும் பணத்திற்காக அமெரிக்கா போன்ற நாடுகள் ஊடாக இலங்கைப் பேரினவாத அரசிற்குச் சார்பாகச் செயற்படுகின்றனர்.

கொழும்பில் வசிக்கும் சட்டத்தரணி புவிகரன் என்பவரே தமிழ் மக்கள் பேரவை முன் மொழிந்த யாப்பு மாற்ற வரைபை எழுதினார் என கூறிய போதும், அத்தீர்மானம் அவுஸ்திரேலியாவில் நிமலன் கார்த்திகேயன் உட்பட்ட சிலரினாலேயே எழுதப்பட்டது. தவிர, வர்த்தமானியில் பிரசுரிகப்படாத முதலமைச்சரின் சட்டவிரோத நிர்வாக நியமனங்களின் பின்னால் நிமலன் கார்திகேயன் செயற்படுகிறார் என்பது ஆதாரபூர்வமாக நிறுவக்கூடிய உண்மை.
கடந்த மாதம் வட மாகண முதலமைச்சரால் உருவாக்கப்பட்ட பெண்கள் பிரச்சனை தொடர்பான அமைச்சுக் குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்ட விஜயலக்சுமி என்பவர் கனடாவில் வசிப்பவர். நிமலன் கார்த்திகேயன் மக்களின் வரிப்பணத்திலிருந்து பெர்ந்தொகைப் பணத்தை வாரியிறைத்து கனடாவிலிருந்து தனது அடிமையை இறக்குமதி செய்து இந்தப் பதவியை வழங்கியுள்ளார்.

தவிர, வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சர் அமைத்த போலி நிபுணர் குழு சுன்னாகம் நிலக்கீழ் நீரை மாசடையவில்லை என அறிவித்தது தெரிந்ததே, இப் போலி நிபுணர் குழுவின் அறிக்கைக்கு முன்பதாக அவுஸ்திரேலியாவிலிருந்து மற்றொரு போலி அறிக்கையும் ஐங்கரநேசனைக் காப்பாற்றும் நோக்கில் வெளியாகியிருந்தது, இந்த இரண்டு அழிவு நடவடிக்கைகளின் பின்னணியிலும் நிமலன் கார்த்திகேயனின் பங்கே பிரதானமானது,
பிரித்தனியாவிற்கு விக்னேஸ்வரன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது நிமலனை மீறி அவரை யாரும் தொடர்புகொள்ளக்கூட முடியவில்லை என்பது பலரின் குற்றச்சாட்டாகவிருந்தது, ஆனால் அதன் பின்னாலிருந்து பெரும் அழிவிற்கான திட்டமிடலை யாரும் கண்டுகொள்ளவில்லை.

அமரிக்கவிலிருந்து செயற்படும் இளம் வழக்குரைஞர் தாஷா மனோரஞ்சன், பிரித்தானியாவிலிருந்து கனடாவிற்குச் சென்று அமெரிக்க ராஜாங்கச் செயலகத்தில் தமிழ் அமைப்புக்களைக் கையாளும் நோக்கில் வேலைபார்க்கும் மரியோ அருள்தாஸ் போன்ற நிமலனுடன் இணைந்து செயற்படும் உளவு நிறுவன ஏஜன்டுகள் தொடர்பான முழுமையான விபரங்களையும், இவர்களின் மூளையாகச் செயற்படும் சுதா நடராஜா போன்றவர்கள் குறித்தும் விபரிப்பதற்கு முன்பதாக நிமலனின் பின்னணியை அறிந்துகொள்வது அவசியமானது.

United Nations Development Programme (UNDP) என்ற அமைப்பில் தொழில்ரீதியாக 2002 ஆம் ஆண்டு இணைந்துகொண்ட ராசையா நிமலன் கார்த்திகேயன் அதன் ஊடாகவே ஈழப் போராட்டத்தில் இணைப்பை ஏற்படுத்திக்கொள்கிறார். தன்னைத் தீவிர புலி ஆதரவாளராகக் காட்டிக்கொண்ட நிமலன் இலங்கை அரசுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணிக்கொள்வதற்கு UNDP ஐக் காரணம் காட்டினார்.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்களின் பின்னர் கிளிநொச்சியில் UNDP இன் திட்டமிடல் உதவி முகாமையாளராக நியமிக்கப்படுகிறார். 2003 ஆம் ஆண்டில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கொழும்புக் கிளையின் தலைவராகப் பொறுப்பேற்ற நிமலன், சுனாமிக் காலத்தில் வழங்கப்பட்ட நிதியை கையாணவர்களில் ஒருவர். பின்னதாக ராஜபக்ச அரசின் விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளின் போது சுதா நடராஜாவுடன் இணைந்து கலந்துகொண்ட நிமலன் அமெரிக்க உளவாளி ரிச்சார்ட் ஆர்மிதாஜுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி அவரின் நம்பிக்கைக்குரிய ஏஜண்டாக மாறினார்.

அமெரிக்காவின் துணை ராஜாங்கச் செயலாளராகவிருந்த ரிச்சார்ட் ஆர்மிதாஜ் என்ற பயங்கரவாதி, புலம்பெயர் நாடுகளிலிருந்த தனது முகவர்கள் ஊடாக விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான இடைவெளியை ஏற்படுத்திய பின்னர் இலங்கை அரசுடன் கைகோர்த்துக்கொண்டார். அவரால் பயிற்றுவிக்கப்பட்ட ஏஜண்டுகள் இன்றும் தேசியவாதிகள் என்ற வேடமணிந்து அழிவுகளைத் துரிதப்படுத்துகின்றனர்.

இன்று தமிழ்ப் பேசும் வட கிழக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணக்க அரசியல் என்ற அழிவு நடவடிக்கைகளின் பின்னால் அணிதிரட்டப்பட்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக மக்கள் சார்ந்த அமைப்புக்கள் தோன்றிவிடக் கூடாது என்ற நோக்கத்தில், எதிர்ப்புக் குழுக்களையும் தமது கட்டுப்பாட்டினுள் வைத்துக்கொள்வதற்கான அரசியல் நடவடிக்கையை அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் இலங்கை அரசுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. அதன் முகவர்களில் ஒருவரே இன்று வடமாகாண சபையை நடத்தும் ராசையா நிமலன் காfர்த்திகேயன். இவ்வாறான விசக் கிருமிகளை அன்னியப்படுத்துவதும் புதிய மக்கள் சார்ந்த அரசியலை முன்வைப்பதும் இன்றைய சமூக உணர்வுள்ள ஒவ்வொருவரதும் கடமை!

புலிகளையும் மக்களையும் அழித்த புலம்பெயர் குழுக்கள் நடத்திய கருத்தரங்கு!

richard_armitage_rajapaksaஈழப் போரட்டத்தின் எச்ச சொச்சங்களையும் அழிப்பதற்கான மேலதிக முயற்சிகள் புலம்பெயர் நாடுகளிலிருந்தே மேற்கொள்ளப்படுகின்றன என்பதற்கான ஆதாரங்கள் இப்போது வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்துள்ளன. வியற்னாமில் அமெரிக்க உளவாளியாகச் செயற்பட்டு அந்த மக்களின் போராட்டத்தை அழிக்க முற்பட்டவர் ரிச்சார்ட் ஆர்மிதாஜ். எழுபதுகளில் நிக்கரகுவா மக்களின் போராட்டத்தைச் சீர்குலைப்பதற்காக சண்டினிஸ்டா விடுதலை இயக்கத்திற்கு எதிராக கொண்டூராஸ் எதிர்ப்புரட்சிகர அமைப்பின் ஊடாக கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் ஆர்மிதாஜ்.
இந்த அமைப்பின் குண்டுவெடிப்பு நடவடிக்கைகள், போதைபொருள் கடத்தல் போன்ற குற்றச்செயல்களை வழி நடத்தியவர். வியட்னாமிய மொழியைச் சரளமாகப் பேசத்தெரிந்த ரிச்சார்ட் ஆர்மிதாஜ் இற்கு இப்போது தமிழ் மொழி தெரிந்திருக்குமா என்ற சந்தேகங்கள் எழுவது வழமையானதே.

முள்ளிவாய்க்கால் அழிவுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் புலம்பெயர் அமைப்புக்களுடன் நேரடியான தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட ஆர்மிதாஜ் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை இனவெறியாக மாற்றி இலங்கை அரசைப் பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டார்.

வணங்காமண் என்று பெயரிடப்பட்ட கப்பலை வன்னிக்கு அனுப்பிவைப்பதாக மக்களை ஏமாற்றிய முயற்சிகளின் பின்னணியில் ஆர்மிதாஜ் செயற்பட்டார். தெற்கில் சிங்களப் பகுதிகளில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்களின் பின்னணியில் ஆர்மிதாஜ் உடன் இணைந்து செயற்பட்ட புலம்பெயர் பினாமிகள் காணப்பட்டதாக ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இலங்கை அரசாங்கம் தெற்கிலிருந்து அமோக ஆதரவைப் பெற்றுக்கொண்டமைக்கு இக்குண்டு வெடிப்புக்களும் பிரதான காரணம்.

இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையை ஆரம்பத்துவைத்த முக்கிய நபர்களில் ஆர்மிதாஜ் பிரதானமானவராகச் செயற்பட்டார்.

ஐரோப்பாவில் அன்டன் பாலசிங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட சுதாகரன் நடராஜா ஆர்மிதாஜ் இன் செல்லப்பிள்ளை போன்று செயற்பட்டார்.

வன்னி மனிதப் படுகொலைகள் நிறைவுற்றதும் கோதாபயவிற்கு வாழ்த்துத் தெரிவித்து இலங்கை அரசுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட ஆர்மிதாஜ் 2011 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் அமெரிக்கப் பயணத்தின் போது உள்ளக ஆதரவை வழங்கினார்.

இரண்டு வாரங்களின் முன்னர் இலங்கை சென்ற ஆர்மிதாஜ், தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைவர்களைச் சந்தித்தார்.

armitage2001 ஆம் ஆண்டிற்கும் 2005 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் அமெரிக்க அரசின் துணை அரசதுறைச் செயலாளராகச் செயற்பட்ட ஆர்மிதாஜ், ஆர்மிதாஜ் இன்டர்னாசனல் என்ற அமைப்பின் தலைவராகச் செயற்பட்டுவருகின்றார். அழிவு நடக்கும் நாடுகளிலெல்லாம் தலைகாட்டும் ஆர்மிதாஜின் இன்றைய திட்டமிடல் தமிழ்ப் பேசும் மக்களைக் கையாள்வதும் அழிப்பதுமாகும். அதற்குப் புலம்பெயர் நாடுகளிலுள்ள தனி நபர்களும் அமைப்புக்களும் பயன்படுத்தப்படுகின்றன.

சுதாகரன் நடராஜா
சுதாகரன் நடராஜா

கடந்த மே மாதம் 11ம் திகதியன்று ஆர்மிதாஜ் இன்டர்னாசனல் ஐச் சேர்ந்த காரா புலு என்பவருடன் இணைந்து சுதகாரன் நடராஜா உட்பட பலர் கருத்தரங்கு ஒன்றை நிகழ்த்தினர். இலங்கையில் நீதியும் சமாதானமும் என்ற இக் கருத்தரங்கை ஆர்மிதாஜ் உடன் தொடர்புடைய தமிழ் தன்னார்வ நிறுவனமான பேர்ள் ஒழுங்கு செய்திருந்தது.

இதற்கு முன்பதாக ரீ.சீ.சீ அமைப்பின் ஆதரவில் சுதாகரன் நடராஜா ஏற்பாடு செய்திருந்த அமெரிக்க ஆதரவுக் கருத்தரங்கு ஒன்று லண்டனில் நடைபெற்றது.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் சர்வதேச ஊடகவியலாளர் சங்கம் நடத்திய விழா ஒன்றில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் சுதா நடராஜாவும் கலந்துகொண்டார்.

சீ.வீ.விக்னேஸ்வரனைப் பின்னணியிலிருந்து இயக்கும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த விமலன் என்பவர் பேர்ள் அமைப்புடன் இணைந்து செயற்படும் ஒரு நபர். தவிர, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40 வது ஆண்டு விழாவை நடத்திய குழுவினரிருந்த பலர் ஆர்மிதாஜ் வலைப்பின்னலில் இணைந்து செயற்படுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இலங்கையில் குறிப்பாக தமிழ்ப் பிரதேசங்களில் சுய நிர்ணைய உரிமையையும், மக்கள் சார்ந்த அரசியலையும் முன்வைத்து மக்களை அணிதிரட்டும் தந்திரோபாயம் அவசியமானது. அதற்கான முன்னணிப்படையாக கட்சிச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பப்படுவதும், அதனை சந்தர்ப்பவாத அரசியலிலிருந்து விடுவித்து முன் நகர்த்திச் செல்வதும் அவசியமானது. புலம்பெயர் நாடுகளில் புலிகள் இயக்கத்தின் சின்னங்களை முன்வைத்து அமெரிக்க – ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களுக்கு மக்களைக் காட்டிக்கொடுக்கும் குழுக்கள் அழிக்கப்படும் போதே புரட்சிகரக் கட்சியின் தோற்றம் சாத்தியமானது.

புலம்பெயர் குழுக்கள் அமெரிக்க அடிவருடிகளாகச் செயற்படுகின்றன. அமெரிக்கா இலங்கை அரசாங்கத்தை இயக்கிவருகிறது. ஆக, இன்று இலங்கை அரசாங்கத்தின் பின்னால் புலம்பெயர் குழுக்கள் அணிவகுத்துள்ளன. புலம்பெயர் குழுக்கள் கடந்த தசாப்தத்தில் ஏற்படுத்திய அழிவுகளிலிருந்து முற்போக்கு ஜனநாயக அரசியல் தளத்தை விடுவிப்பதும், அதனை மக்களின் விடுதலையை நோக்கி முன் நகர்த்துவதும் சமூகப்பற்றுள்ள ஒவ்வொரு மனிதனதும் வரலாற்றுக் கடமை!

சுழியோடி

SHARE