வீராட்கோலி 5–வது வீரராக ஆட வேண்டும்: கவாஸ்கர் வலியுறுத்தல்

444

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்டேன்களில் ஒருவர் வீராட் கோலி. சமீபகாலமாக அவரது பேட்டிங் மோசமாக இருந்து வருகிறது. ஆசிய கோப்பையில் சரியாக ஆடவில்லை.

அதை தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் வீராட் கோலி ஆட்டம் ஏமாற்றம் அளித்தது. 4 ஆட்டத்திலும் சேர்த்து 54 ரன்களே எடுத்தார்.

3–வது வீரராக களம் இறங்கும் அவர் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நேற்றைய முதல் போட்டியிலும் 2 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

வீராட் கோலியின் பேட்டிங் மிகப்பெரிய கவலையை அளிக்கிறது என்று முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:–

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து வீராட் கோலி மோசமாக ஆடி வருகிறார். இது கவலைக்குரியதாகும். இதற்கு பேட்டிங் தொழில்நுட்ப பிரச்சினை தான் உண்மையிலேயே காரணமாக இருக்கலாம்.

புதிய பந்தில் அவர் ஆப் ஸ்டம்புக்கு வெளியே சென்று ஆடும் விதம் தவறாக உள்ளது. இதனால் அவர் 4 அல்லது 5–வது வீரராக களம் இறங்க வேண்டும்.

இந்திய அணி நிர்வாகம் அவரது பேட்டிங் வரிசைக்கு பின்னுக்கு மாற்றுவது பற்றி பரிசீலிக்க வேண்டும். 5–வது வீரர் வரிசையில் வீராட் கோலியால் ரன் குவிக்க இயலும்.

பேட்டிங்குக்கு சாதகமான கொச்சி ஆடுகளத்தில் இந்திய அணி மோசமாக தோற்றது ஏமாற்றம் அளிக்கிறது.

இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

SHARE