கடல் கடந்த கடத்தல்! 

399



பணத்துக்காகவும், பழி வாங்குவதற்காகவும் பெண்களைக் கடத்துவது பற்றி நடக்கும் சம்பவங்களை உள்ளது உள்ளபடி என்ற கோணத்தில் சொல்லும் படம்தான் ‘யாவும் வசப்படும்’. கனடாவைச் சேர்ந்த விஜித் இதன் நாயகன். பிரான்ஸைச் சேர்ந்த தில்மிகா நாயகி. இவர்களைத் தவிர பாலா, வைபவி என்ற ஜோடியும் இருக்கிறார்களாம்.

தீபச் செல்வன் பாடல்களுக்கு ஆர்.கே. சுந்தர் இசையமைத்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் புதியவன். க்ரைம் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தின் முழுப் படப் பிடிப்பும் லண்டனில் நடந்துள்ளது. ஒரு பாடல் காட்சியை அவசரமாக படமாக்க வேண்டிய சூழ்நிலை இருந்ததால் ‘ஸ்கைப்’ மூலம் நடனம் சொல்லிக் கொடுத்தாராம் நடன இயக்குனர் எஸ்.எல்.பாலாஜி

 

SHARE