அமெரிக்கா இலங்கை விடயத்தில் மென்மைப்போக்கு! ஜனாதிபதி கூறியதன் காரணம் குறித்து ஆராய்வு

393
இலங்கை விடயத்தில் அமெரிக்கா மென்மைப்போக்கை கடைப்பிடிப்பதாக ஜனாதிபதி கூறியமைக்கான காரணத்தை இலங்கையின் ஊடகம் ஒன்று ஆராய்ந்துள்ளத.

இதன்படி அமெரிக்காவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை சந்தித்த பின்னர் இந்தக் கருத்தை வெளியிட்டமை குறித்து குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஜோன் கெரியை சந்தித்த பின்னர் மஹிந்த ராஜபக்ச இந்தக் கருத்தை உடனடியாக வெளியிடவில்லை.

சஜின் வாஸ் குணவர்தன, கிறிஸ் நோனிஸை தாக்கிய பின்னர் அனைவரும் இலங்கைக்கு வந்த பின்னரே ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில் கிறிஸ் நோனிஸ் தாக்குதல் விடயத்தில் சஜின் வாஸ் மீது ஜனாதிபதி கோபமாக இருந்த போது அதனை சமாளிப்பதற்காக, அவர் தமது மடிக்கணணியுடன் அலரிமாளிகைக்கு சென்று ஜனாதிபதியிடம் சில ஆதாரங்களை காட்டியுள்ளார்.

இதில் இலங்கைக்கு சார்பாக நடந்து கொள்ளும் அமெரிக்க பொதுஉறவு நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை அடுத்து தற்போது மேற்கத்தைய நாடுகள் இலங்கையின் மனித உரிமைகளை பற்றி அதிகமாக பேசுவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இது அப்படியே கைவிடப்படும் அல்லது மறைந்து போகும் என்று அவர் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளார்.

இதனை வைத்துக்கொண்டே ஜனாதிபதியும் அமெரிக்கா, இலங்கை விடயத்தில் மென்மைப்போக்கை கடைப்பிடிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த விடயத்தை அமெரிக்கா மறுத்தமையும், பின்னர் இலங்கை வெளியுறவுத்துறை ஜனாதிபதி அப்படிக் கூறவில்லை என்று மறுத்தமையும் குறிப்பிடத்தக்க செய்திகளாகும்.

 

SHARE