கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி கண்டறியும் சங்கம் எட்டு மாவட்ட பிரதிநிதிகள் இவர்களே போலி அமைப்புக்களும் இயங்குகின்றன மக்களே அவதானம்

350

 

காணமல் ஆக்கப்பட்டோர் அரசியல்கைதிகள் விடுதலை தொடர்பில் ஆயுதக் கட்சிகள் போராட்டங்களை நடத்த தகுதி அற்றவர்கள்

காணமல் ஆக்கப்பட்டோர் அரசியல்கைதிகள் விடுதலை தொடர்பில் ஆயுதக் கட்சிகள் போராட்டங்களை நடத்த தகுதி அற்றவர்கள் இவர்களினால் காணாமல் ஆக்கப்பட்டோர் ஆயிரக்கணக்கில் பதிவாகி உள்ளன மக்கள் போராட்டமே ஏற்புடையது.

காணமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உறவினர்கள் யாழில் ஆர்ப்பாட்டம், கிளிநொச்சியிலும் வவுனியாவிலும்தொடர்கின்றது.ஏன் எங்கெல்லாம் தமிழல்கள் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருவதாக அண்மையில் பல செய்திகள்

கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி கண்டறியும் சங்கம் எட்டு மாவட்ட பிரதிநிதிகள் இவர்களே போலி அமைப்புக்களும் இயங்குகின்றன மக்களே அவதானம்

வெளிவந்தவண்ணமுள்ளன. இது ஒரு புறமிருக்க, காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஜனாதிபதி ஆணைக்குழு முன் அளித்த சாட்சியங்களை அறியும் போது நெஞ்சு வெட்டித்து விடும் போல் உள்ளது. அந்தளவுக்கு எங்கள் மக்கள் தாங்கொணாத் துன்பங்களை தம் இதயங்களில் சுமந்து கொண்டுள்ளனர். இதேநேரம் அவர்கள் சாட்சியம் அளிக்கின்ற போது- கூறுகின்ற சம்பவங்களைப் பார்க்கின்றபோது எங்கள் தமிழினம் அநாதையாக நிற்கின்றதோ என்று எண்ணத் தோன்றும். இருந்தும் அரசியல் தலைமைகளின் எந்தவித பக்க பலமும் இல்லாத போதும் காணாமல்போன தங்கள் உறவுகளை மீட்டு எடுக்க வேண்டும் என்பதற்காக எந்த ஆபத்து வந்தாலும் அதற்கு அஞ்ச மாட்டோம் என்ற துணிச்சலோடு அளித்த சாட்சியங்கள் கண்டு அழுகையிலும் எம் நெஞ்சம் உயர்ந்து கொள்கிறது.

இவை எல்லாம் ஒருபுறம் நடந்து கொள்ளும் அதேநேரம், ஈழத்தமிழினத்தின் எதிர்காலம் என்பது இந்தியாவிடமும் அமெரிக்காவிடமும் இருப்பது தெரிகிறது. எனினும் இந்தியாவும் அமெரிக்காவும் எங்கள் விடயத்தில் ஒத்த தன்மையைக் கொண்டுள்ளனவா? என்பதுதான் இங்கு கேள்விக்குரியது. ஈழத்தமிழர்களின் விடயம் தொடர்பில் அமெரிக்காவும், இந்தியாவும் கவனம் கொண்டிருந்தாலும் இரண்டு நாடுகளையும் சமாளித்தல் என்பதில் தமிழ் அரசியல் தலைமைகள் வெற்றி கண்டால் மட் டுமே மக்கள் இலக்கு அடையப்படும். எனினும் தமிழ் அரசியல் தலைமைகளில் இருக்கக்கூடிய சிலர் அமெரிக்கா பக்கம் சாய்ந்து போவதாக இந்தியா கருதுவதும் தெரிகிறது. இதனால்தான் அமெரிக்கத் தூதுவரும் இந்தியத் தூதுவரும் அடுத்தடுத்து வடக்கின் முதலமைச்சரை சந்தித்துப் பேசியுள்ளனர்.

இந்தச் சந்திப்பில் அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர், வடக்கு மாகாண சபை முதலமைச்சரின் கருத்துக்கள் இறுக்கமானதாக இருப்பதாகக் கருதியுள்ளார். எதுவாயினும் கொழும்புத் தமிழ் அரசியல் தலைமையில் இருக்கக் கூடியவர்களில் ஒருவர் அமெரிக்கா பக்கமும் இன்னொருவர் இந்தியாவின் பக்கமுமாக நின்று கொண்டாலும் இருவரும் வடக்கின் முதல்வரை சுட்டிக்காட்டி அவரைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதை இரண்டு நாட்டுத் தூதுவர்களி டமும் தனித்தனியாகக் கருத்துரைத்திருப்பர் போலும். இந்த நிலையில் அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் வடக்கின் முதல்வரின் இறுக்கமான போக்கை மனக்கிலேசத்துடன் நோக்கியுள்ளார். அதேநேரம் இந்தியத் தூதுவர் வை.கே.சிங்கா வடக்கின் முதல்வரை கொழும்புத் தமிழ் அரசியல் தலைமையுடன் இணைந்து போகுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆக, இரண்டு நாட்டுத் தூதுவர்களும் தத்தம் நாடுகளின் பலத்தை இலங்காபுரியில் நிலை நிறுத்தும் பொருட்டு செயற்படுகின்றனர் என்பதே இறுதி முடிவாக இருக்கிறது. எதுவாயினும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற உரிமைகள், அபிலாசைகள் தொடர்பில் மக்களின் கருத்தை யார் வலியுறுத்துகின்றனரோ அவர்கள் பக்கம் தமது ஆதரவை தெரிவிக்க வேண்டிய கடப்பாட்டை உலக நாடுகள் கொள்ள வேண்டுமாயின் தமிழ் மக்களின் ஆதரவுடன் தீர்வுத் திட்ட வரைபு தயாரிக்கப்படுவது அவசியமாகும்.

தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சனை ஒரு தேசியப் பிரச்சனையெனத் தெரிவித்துள்ள அரசியல் கைதிகளை விடுவித்துக்கொள்வதற்கான தேசிய அமைப்பு அதனால் இந்தப் பிரச்சனைக்கு அரசியல் தீர்மானமொன்றை எடுத்து நிபந்தனைகள் இன்றி அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் வாடும் 160 அரசியல் கைதிகளை விடுவிக்கமாறு வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் போராட்டத்தை இன்று கொழும்பில் ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே அந்த அமைப்பின் தலைவர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் இந்தக் கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார்.

அந்த அமைப்பின் தலைவர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் மேலும் தொடர்ந்து உரையாற்றுகையில்,

அரசியல் கைதிகளின் பிரச்சினை ஒரு இனவாத பிரச்சினையாக சுட்டிக்காட்டபட்ட காலம் உண்டு. ஆனால் இது இனவாத பிரச்சினையல்ல மக்களுடைய தேசிய பிரச்சினை. இந்த நாட்டினுடைய அரசியல் பிரச்சினை.

????????????????????????????????????

எனவே இந்த அரசியல் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றால் முதலாவதாக சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்ற அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் என்பது தான் எமது கோரிக்கை.

இந்தநிலையில் 1971 ஆம் ஆண்டு தெற்கில் இடம்பெற்ற கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள். 1988, 1989 ஆம் ஆண்டுகளில் தெற்கில் கிளர்ச்சிகளில் ஈடுபட்டவர்கள், அக்கால அரசாங்கங்கள் அரசியல் தீர்மானம் எடுத்து விடுதலை செய்திருக்கின்றன.

அதுபோல் 1987 ஆம் ஆண்டு வடக்கின் அரசியலோடு சம்பந்தப்பட்டு இந்த அரசாங்க த்தினு டைய செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படட்டவர்கள் காவலிலிருந்தபோது அவர்கள் விடு தலை செய்யப்பட்டிருக்கிறார்கள் அரசியல் தீர்மானத்தின் அடிப்படையில்.

2001 ஆம் ஆண்டு 11 ஆயிரத்திற்கு அதிகமானோர் பல்வேறு முகாம்களில் இருந்திருந்தார்கள். அவர்கள் மீண்டும் விடுதலை செய்யப்பட்டு சமூகத்தில் குடும்பத்தோடு வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள். இவை எல்லாம் அரசியல் தீர்மானத்திற்கு ஊடாக எடுத்த செயற்பாடுகள்.

அதுமாத்திரமன்றி தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பிராதன பங்கு வகித்தவர் பிராந்திய கட்டளைத் தளபதியாக இருந்தவர் கடந்த கால அரசாங்கம் அவரை தம்மோடு இணைத்துக்கொண்டு தம்முடைய கட்சியின் உப தலைவர் பதவி கொடுத்து நாடாளுமன்ற அங்கத்துவ பதவி கொடுத்து அவரை அமைச்சராக்கி நாடாளுமன்றத்தை அலங்கரித்தது.

அதேபோன்று இந்த நாட்டிலே தளபதிகளாக இருந்தவர்கள் சுதந்திரமாக உலா விக்கொண்டி ருக்கினறார்கள். எனவே அவர்கள் மீண்டும் கைதுசெய்யப்படவேண்டும், நீதிமன்றத்தின் முன்னால் கொண்டு வரப்படவேண்டும் என்பது எனது கோரிக்கை அல்ல அவர்களுக்கு என்ன சுநத்திரம் இருக்கின்றதோ, எந்த சட்டத்தின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்களோ, அதனை சிறையில் வாடிக்கொண்டிருக்கும் 160 இற்கும் குறைவான சிறைக்கைதிகளுக்கும் கொடு ங்கள் என்று கூறுகின்றோம்.

யுத்தம் முந்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. நல்லாட்சி என்றும் நிலைமாறுகால நீதி எனவும் நல்லிணக்கம் எனவும் கூறிக்கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் நாட்டில் ஒரு உறுதியான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்றால் முதலாவது அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்.

இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தான் கைதுசெய்யப்ட்டிருக்கின்றார்கள் கட்டா யத்தின் பேரில் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்கு மூலங்கள் மூலம் இவர்கள் குற்றம்சும த்த ப்பட்டிருக்கின்றார்கள்.

எனவே இந்த அரசாங்கம் கூறுகின்றது பயங்கரவாத தடைச்சட்டம் சர்வதேச தரத்திற்கு அமைய கொண்டு வரப்பட்ட ஒன்றல்ல, இந்த பயங்கரவாத சட்டம் பல்வேறு விதமான குறைபாடுகள் நிறைந்த ஒன்றாக காணப்படுகின்றது. மனித உரிமைகளை மீறுகின்ற ஒன்றாக பயங்கரவாத சட்டம் காணப்படுகின்றது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பாக நாங்கள் கூறுகின்றோம், அது பயங்கரவாத சட்டம் என்று கூறுகின்றோம். ஓர் அரசாங்கம் பயங்கரவாத சட்டத்தை கொண்டு வந்து அரசாஙகம் அரச பயங்கரவாதத்தை நாடு முழுவதும் வியாபித்தது. தமிழ் மக்களை அழித்தது. கொன்றழித்தது.

அந்த சட்டத்திறகு எதிராக நின்றவர்கள் தான் அரசியல் கைதிகளாக சிறைக்கைதிகளாக சிறையில் வாடிக்கெண்டிருக்கின்றார்கள். அவர்கள்விடுதலை செய்யப்படவேண்டும்.

சர்வதேசதரத்திற்கு ஏற்ப பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டு வர அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது. சர்வதேச தரத்திற்கு ஏற்ப பயங்கரவாத தடைச்சட்டத்தை உருவாக்கப்பட வேண்டும். இந்த நாட்டினுடைய பொருளாதார அபிவிருத்தி என்றால் என்ன? நாட்டினுடைய அரசியல் செல் பயணம் என்றால் என்ன? அவை எல்லாம் நாட்டு மக்களுக்கு ஏற்றவையாகவில்லை.

ஏழை மக்களை ஒடுக்கப்பட்ட மக்களை இன்னும் இன்னும் ஒடுக்குகின்ற ஒன்றாகத்தான் இருக்கின்றது. அவை எல்லாவற்றிற்கும் எதிராக மக்கள் எழுகின்றபோது அவர்களை அடக்குவதற்காக சர்வதேச தரத்துடனான பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டு வரப்படவிருக்கின்றது.

அப்போது சர்வதேசம் மௌனித்துவிடும் சர்வதேசம் அமைதி காக்கும். மக்கள் கைது செய்கின்றபோது சர்வதேசம் அதற்கான அங்கீகாரத்தை வழங்கிவிடும்.

இப்போது இருக்கின்ற அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான குரலான நாங்கள் ஒழிக்காவிட்டால் எதிர்காலத்தில் இதைவிட பயங்கரமான ஒன்றிற்கு குரல் கொடுக்க வேண்டி ஏற்படும்.

அரசாங்கம் மக்களுக்கு எதிராக எடுக்கின்ற பொருளாதார திட்டங்களுக்கு எதிராக யாரெல்லாம் எழுகின்றார்களோ, எந்த அமைப்புக்கள் எழுகின்றனவோ அவைகளையெல்லாம் பயங்கரவாதியாக்க அரசாங்கம் ஆயத்தமாகின்றது.

இந்த நிலையில் நாம் எல்லாம் ஒன்றுசேர்வோம் நாமெல்லாம் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பு ஆரம்பித்திருக்கின்ற இந்த கையெழுத்து போராட்டம் நாடு முழுவதும் நடக்க விருக்கின்றது.

எனவே நாடு முழுவதும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவிருக்கின்ற வேளையில் உங்க ளுடைய ஒத்துழைப்பை எதிர்பார்த்திருக்கின்றோம்.

இலங்கையில் ஜனாதிபதி சிறிசேன தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என உறுதியளித்துள்ளார். எனினும் இதுவரையில் அதனை காணமுடியவில்லை. ஜனாதிபதியின் ஊசலாடும் திட்டம்  இன்னமும் தொடர்கின்றது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை முடிவு தென்படவில்லை.
இன்னமும் தெளிவாக தெரிவிப்பதானால் இலங்கையின் தற்போதைய அரசாங்கம் நிலைமாற்றுக்கால நீதி மற்றும் அதன் மாற்றங்கள் தொடர்பில் முக்கிய உறுதிமொழிகளை வழங்கியுள்ளது.
இந்த வாக்குறுதிகள் எப்போதாவது நிறைவேற்றப்பட்டால், அவை சிறிய சிறிய அளவிலேயே காணப்படும். இதேவேளை ஜெனீவாவில் தீர்மானத்திற்கு கொழும்பு இணை அனுசரனை வழங்கிய பின்னர் தொடர்ச்சியான மாற்றங்கள் நிகழ்வதை எம்மால் காணமுடியவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
உறுதிமொழிகள் மற்றும் நம்பிக்கைகளை பொறுத்தவரை நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வலுவான உரைகளை ஆற்றிவருகின்றார். (இவை பெருமளவிற்கு சர்வதேச சமூகத்திற்காக வடிவமைக்கப்பட்டவை). எனினும் அமைச்சர் மங்கள நாட்டை நிர்வகிக்கவில்லை என்பதும் அமைச்சரின் சீர்திருத்த நிகழ்ச்சிநிரல் அரசாங்கத்தின் முக்கிய நபர்களின் நிகழ்ச்சி நிரலுடன் (ஜனாதிபதி, பிரதமர்) பொருந்தவில்லை என்பதுமே இங்கு பிரச்சினையாகவுள்ளது.
துணிச்சலான சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கான அரசாங்கத்தின் திறன் குறித்த கவலைகள் ஆதாரமற்றவையல்ல, (குறிப்பாக பாரிய ஊழல் மற்றும் நிலைமாற்றுக்கால நீதி குறித்த விவகாரங்களை கையாள்வதற்கான அதன் திறன்) இதேவேளை இது தொடர்பான ஏனைய விடயங்கள் தொடர்பில் அதிக கவலைகொண்டுள்ள சர்வதேசசமூகத்தின் பிரதிநிதிகள் முக்கியமான விடயமொன்றை தவற விடுகின்றனர். அது அரசாங்கத்தின் நேர்மை தொடர்பானது. கொழும்பு தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து நேர்மையாகவுள்ளதா? ஜனாதிபதி சிறிசேனவும், பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவும் தங்கள் வார்த்தைகளை செயற்பாடுகளாக மாற்றுவதற்கு உண்மையில் தயராகயுள்ளனரா? அவர்கள் இதற்காக சிங்கள தேசியவாதத்தை எதிர்ப்பதற்கு தயாரா?
இலங்கையில் மாற்றங்கள் நிகழ்கின்றன என உலகம் நம்பவேண்டும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. எனினும் தமிழர்கள் சந்தேகத்திற்கு இடமான முறையில் தடுத்துவைக்கப்படுவது தொடர்கின்றது. அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிப்பது அல்லது நீதி விசாரணைக்கு உட்படுத்துவது என்பது மிகவும் கடினமான விடயமாக காணப்படும் என்பது உண்மைதான். எனினும் அரசாங்கம் முன்னெடுக்கவேண்டிய யுத்தம் குறித்த சீர்திருத்தங்களின் அடித்தளமாக இதுவே காணப்பட வேண்டும்.
தமிழ் அரசியல்கைதிகள் விவகாரத்தில் கொழும்பின் கோழைத்தனம். ஆழ்ந்த கவலையளிப்பதாக காணப்படுகின்றது. தமிழ் சமூகத்திற்கு அர்த்தபூர்வமான சலுகைகளை வழங்குவது என்பதை  அரசாங்கம் துணிச்சலான மாற்றங்களை தழுவதற்கு தயாராகயுள்ளதா என்பதே தீர்மானிக்கும். இந்த விடயத்தில் போலித்தனமான தீர்வுகள் வெற்றியளிக்காது.
இது இடம்பெறும்வரை சந்தேகங்களே வழமையான விடயமாக காணப்படும்.
கடந்த ஓரு வருட காலப்பகுதியில் சிறிசேன குறித்து நாங்கள் ஏதாவது அறிந்திருக்கின்றோம் என்றால், அவர் சிங்கள தேசியவாதி என்பதற்கான ஆதாரங்கள் அதிகமாக வெளிப்பட்டு உள்ளதையே நாங்கள் கண்ணுற்றுள்ளோம்.

SHARE