வவுனியா சிறையிலிருந்த புலி உறுப்பினர் தப்பியோட்டம்

698

ltte-flag2

சிறைச்சாலை காவலர்களின் பாதுகாப்பின் கீழ், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர் ஒருவர் நேற்றிரவு நேற்றிரவு 11 மணியளவில் (20) வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார், என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

, குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஜெயபாலன் ஸ்டென்லி ரமேஸ் (வயது 28) என்பவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஆயுதங்களை வைத்திருந்தார் மற்றும் கொள்ளைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்களின்; பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் இம்மாதம் முதலாம் திகதி, அர்சஸ் நோய் காரணமாக வவுனியா வைத்தியசாலையின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இச்சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர் என வவுனியா பொலிஸார் மேலும் கூறினர்.

 

 

SHARE