சிறிசபாரத்தினத்தை புலிகள் சுட காரணம் இதுதான் இந்தியா அரசின் கைக்கூலிகளாக இருந்து தமிழீழ போராட்டத்தை காட்டிக் கொடுத்த ரெலோ என்று அறிவித்தார்கள் புலிகள்.

627

 

ரெலோ இயக்க தலைவர் சிறிசபாரத்தினத்தின் 31 வது நினைவு தினத்தில் தற்போதயதலைவர் செல்வம்அடைக்கலநாதன் உரையாற்றுகையில்-போரட்டத்தையும் போராளிகளையும் கொச்சைப்படுத்த வேண்டாம் அவர்கள் தியாகங்கள் மதிக்கதக்கது

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மறைந்த தலைவர் சிறீ சபாரத்தினம் அவர்களின் முப்பத்தியொராம் ஆண்டு நினைவஞ்சலி
இடம் – வவுனியா நகரசபை உள்ளக மண்டபம்.
காலம் – 06-05-2017 சனிக்கிழமை.
நேரம் – மாலை 3.30 மணி.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யேர்மன் மகளிர் அமைப்பின் நிதி அனுசரணையுடன் கிளிநொச்சியில் தையல் பயிற்சி நிறைவு செய்த 25 பேருக்கு சான்றிதழ்களும்,

சர்வதேச ஒருங்கிணைப்பு குழுவின் அனுசரணையில் இரண்டு அவயவங்களையும் இழந்த ஓமந்தையை சேர்ந்த சிவகுமாருக்கு விவசாயத்துக்கான (24,000/-) உதவிகளும் இன்றைய சிறி அண்ணா நினைவஞ்சலி நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டது

ரெலோவை தடைசெய்துவிட்டதாக புலிகள் இயக்கம் அறிவித்தது ஏனைய இயக்கங்களையும் யோசிக்க வைத்து விட்டது.

ஈ.பி.ஆர்.எல்.எஃப்., புளொட், ஈரோஸ் ஆகிய அமைப்புக்கள் தமக்கெதிராகவும் புலிகள் திரும்பலாம் என்று நினைக்கவே செய்தன.

ரெலோ இயக்கத்தை இந்தியாவின் கைக்கூலிகள் என்று கூறியே தமது தடைக்கான பிரசாரம் செய்தனர் புலிகள் இயக்கத்தினர்.

ரெலோவுக்கு அடுத்ததாக இந்திய அரசோடு நெருக்கமாக இருந்தது ஈ.பி.ஆர்.எல்.எப். எனவே, ரெலோமீது காட்டப்பட்ட குற்றச்சாட்டு தமக்கெதிராகவும் காட்டப்படலாம் என்று ஈ.பி.ஆர்.எல்.எப். நினைத்தது.

 

 

ஈ.பி.ஆர்.எல்.எப். செயலதிபர் க.பத்மநாபா அப்போது தமிழ்நாட்டில் இருந்து வந்து யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தார்.

ஈ.பி.ஆர்.எல்.எப். உள் பிரச்சனை காரணமாக இரண்டு துருவங்களாக இருந்தது. ஆனாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தார்கள்.

ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்புக்குள் பத்மநாபாவோடு நின்றவர்களுக்கு டக்ளஸ் தேவானந்தாவோடு இருந்தவர்கள் மீது ஒரு சந்தேகம் இருந்தது.

கிட்டுவோடு டக்ளஸ் தேவானந்தா நட்பாக இருப்பதால் ரெலோவுக்கு உதவி செய்ய விரும்பமாட்டார் என்நு நினைத்து விட்டார்கள். டக்ளஸ் தேவானந்தா தனது வாகனம் மூலமாகவே நூற்றுக்கும் மேற்பட்ட ரெலோ உறுப்பினர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று மானிப்பாயில் இருந்த பிரதான முகாமில் புகலிடம் கொடுத்து வைத்திருந்தார். அப்படிச் செய்தாலும்கூட ரெலோ தலைமைக்கு டக்ளஸ் தேவானந்தா பாதுகாப்புக் கொடுக்க விரும்பமாட்டார் என்றே ஈ.பி.ஆர்.எல்.எப்.க்குள் இருந்த மறுசாரார் நினைத்துக் கொண்டிருந்தனர்.

ரெலோவின் பிரதான முகாமில்தான் ரெலோத் தலைவர் சிறீசபாரெத்தினம் தங்கியிருந்தார்.

புலிகள் தாக்குதலை ஆரம்பித்த முதலாவது நாள் பிரதான முகாமில் இருந்த ரெலோ உறுப்பினர்கள் தீரத்துடன் சண்டையிட்டனர்.

முதலில் அது ஒரு தற்காலிக மோதல் என்றுதான் சிறீசபாரெத்தினமும் முதலில் நினைத்தார்.

சண்டை தொடர்ந்த தீவிரமும், கிடைத்த தகவல்களும் புலிகள் இறுதித் தாக்குதல் ஒன்றுக்கு தயாராகிவிட்டதை உணர்த்தத் தொடங்கின.

அதனால் சிறீசபாரெத்தினமும் தனது முக்கியமான பாதுகாவலர்களுடன் வேறு இடத்துக்கு தப்பிச்செல்ல தீர்மானித்தார்.

அதற்கிடையே சிறீசபாரெத்தினத்தின் நம்பிக்கையான ஆள் ஒருவர் மூலமாக பத்மநாபாவோடு தொடர்பு கொள்ளப்பட்டது.

ரெலோவோடு சேர்ந்து புலிகளுக்கு எதிராக ஈ.பி.ஆர்.எல்.எஃப். களத்தில் இறங்கியிருந்தால் மோதல் தீவிரமாகியிருக்கும்.

ஆனால், ஈ.பி.ஆர்.எல்.எப். உள்ளே இருபிரிவுகளாக இருந்தமையால் அதைப்பற்றி யோசிக்கவே இயலவில்லை.

சிறீசபாரெத்தினத்துக்கு பாதுகாப்பு வழங்க பத்மநாபா ஒப்புக்கொண்டார்.

கல்வியங்காட்டில் இருந்து சிறீசபாரெத்தினத்தை வெளியே கொண்டுவந்து பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பது.

பின்னர் தமிழ்நாட்டுக்கு பத்திரமாகக் கொண்டு செல்வது என்பதுதான் திட்டம்.

சிறீசபாரெத்தினம் தப்பிச் சென்றால் ஆபத்து. ரெலோ மீண்டும் பலமாகிவிடும். அதனால் சிறீசபாரெத்தினத்தை தப்பவிடக் கூடாது என்று புலிகள் உறுதியாக இருந்தார்கள்.

கல்வியங்காட்டிலிருந்து சிறீசபாரெத்தினம் தப்பிச்செல்ல முடியாதளவுக்கு புலிகள் இயக்க உறுப்பினர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்படியிருந்தும் சிறீசபாரெத்தினம் தனது நம்பகமான மெய்ப்பாதுகாவலர்களுடன் கல்வியங்காட்டில் இருந்து தப்பிவிட்டார்.

ரெலோவின் பிரதான முகாமை புலிகள் கைப்பற்றியபோது அங்கு சிறீசபாரெத்தினத்தை இறந்த உடல்கள் மத்தியில் தேடிப்பார்த்து ஏமாந்து போனார்கள்.

சிறீசபாரெத்தினம் ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்களால் கோண்டாவில் அன்னங்கை என்னுமிடத்தில் உள்ள வீடொன்றில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டார்.

ஆனால், இந்த விடயம் இராணுவத் தளபதியாக இருந்த டக்ளஸ் தேவானந்தாவுக்கு தெரியவே தெரியாது. டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்கச் சென்றார் கிட்டு.

“சிறீசபாரெத்தினத்துக்கு பாதுகாப்புக் கொடுத்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்.

“சாதாரண உறுப்பினர்களுக்கு பாதுகாப்புக் கொடுத்திருக்கிறோம். தலைமையில் உள்ளவர்களுக்கு பாதுகாப்புக் கொடுப்பது பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை. அவர்கள் கேட்டால் யோசிக்கலாம்.” என்றார் டக்ளஸ் தேவானந்தா. ரெலோவை தாம் ஏன் தடை செய்ய வேண்டி வந்தது என்று விளக்கினார் கிட்டு. “முதலில் ஒரு பாடம் படிப்பிக்கத்தான் நினைத்தோம். அவர்களிடம் இருந்து எதிர்ப்பு இல்லையென்பதால் பூரணமாக முடித்து விடலாம் என்று தீர்மானித்தோம்” என்று டக்ளஸ் தேவானந்தாவிடம் சொன்னார் கிட்டு.

 

ரெலோவின் முக்கிய உறுப்பினர்கள் பலர் புலிகளால் கைது செய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் மோகன். ஒபரோய் தேவனின் சகோதரர். பறுவா மோகன் என்றும் அவரை அழைப்பார்கள்.

அவர்மீது கிட்டுவுக்கு முன்னரே கோபம் இருந்தது. அதனால் தானே நேரடியாகச் சென்று மோகனை மரச்சட்டத்தால் அடித்து நொறுக்கினார்.

“சிறீசபாரெத்தினம் எங்கே?” என்று கேட்டு மோகனை துவைத்தெடுத்தார்கள்.

கைது செய்யப்பட்ட ரெலோ உறுப்பினர்கள் அனைவரையும் புலிகளது உளவுப்பிரிவினர் விசாரணை செய்தனர்.

விசாரணைக்குப் பொறுப்பாக இருந்தவர் வாசு. அவர்தான் அப்போது உளவுப்பிரிவுக்கு யாழ் மாவட்டத்தில் பொறுப்பாக இருந்தவர்.

வாசுவே நேரடியாக பலரை விசாரணை செய்தார். மரச்சட்டத்தால்தான் அடிப்பார். தலைகீழாகக் கட்டி தொங்கவிடப்பட்டவர்கள் மரச்சட்டத்தால் அடிவிழும்போது உரத்துக் கத்துவார்கள். ‘கத்தாதே’ என்று அடி தொடரும்.

 

புலிகளிடமும் பிடிபடாமல், ஏனைய இயக்கங்களிடமும் புகலிடம் கேட்காமல் பொதுமக்களது பாதுகாப்பில் பல ரெலோ உறுப்பினர்கள் உயிர் தப்பினார்கள்.

இயக்கங்கள் தமக்குள் சண்டை போடுவதை மக்கள் விரும்பவில்லை.

“எல்லோரும் எங்கள் பிள்ளைகள்தானே. போராட வந்தவர்கள்தானே” என்று சொல்லி தமது வீடுகளில் தங்கவைத்தார்கள்.

 

ஆனால் ரெலோ பலமாக இருந்தபோது அதனை விழுந்து விழுந்து ஆதரித்த சிலர் கட்சி மாறினார்கள்.

புலிகள் இயக்கத்தினருக்கு கொக்காகோலா கொடுத்து ரெலோ மீதான வெற்றியில் தமது மகிழ்ச்சியை அவர்கள் தெரிவித்ததுதான் வேடிக்கை.

 

உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன்.

யாழ்ப்பாணம் இருபாலை சந்திக்கருகில் ஒரு தேநீர் கடை இருந்தது. இந்தக் கடையில்தான் ரெலோ உறுப்பினர்கள் வாடிக்கையாக சாப்பிடுவார்கள்.

கூடக்குறைய கணக்குச் சொன்னாலும் பணம் கொடுத்துவிட்டுப் போவார்கள். அவரும் தன்னை ஒரு ரெலோ ஆதரவாளராகவே காட்டிக்கொண்டிருந்தார்.

ரெலோவை புலிகள் தாக்கிவிட்டு, இருபாலை சந்திக்கு அருகிலும் டயர் போட்டு கொளுத்திக்கொண்டிருந்தார்கள்.

ரெலோ உறுப்பினர்கள் டயரில் எரிந்து கொண்டிருந்தார்கள்.

 

அந்த தேநீர் கடை உரிமையாளர் என்ன செய்தார் தெரியுமா? புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு களைப்புத்தீரு சுடச்சுட தேநீர் தயாரித்து வழங்கிக்கொண்டிருந்தார்.

அதேவேளை மற்றொரு சம்பவம்

நல்லூரில் இருந்தது அவர்கள் வீடு. இரண்டு பிள்ளைகளும் புலிகள் இயக்கத்தில் இருந்தார்கள். மறைய இடம்தேடிச் சென்ற ரெலோ உறுப்பினர்களுக்கு அந்த விஷயம் தெரியாது.

தமது வீட்டில் அவர்களை தங்க வைத்தது அந்தக் குடும்பம்.

ரெலோ இயக்க உறுப்பினர்கள் இருவர் வீட்டில் மறைந்திருப்பது தமது பிள்ளைகளுக்கே தெரியாமல் பார்த்துக் கொண்டனர் அந்த வீட்டார்.

விடைபெறும்போதுதான் ரெலோ உறுப்பினர்களுக்கே விஷயம் தெரிந்தது. விழிகளில் கண்ணீரோடு நன்றி சொன்னர்கள். அதற்கு அந்த வீட்டார் சொன்னார்கள்: “தம்பிமார், நீங்களும் எங்கள் பிள்ளைகள்தானே”.

 

ரெலோவை சரணடையுமாறு புலிகள் தொடர்ந்து அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.

இலங்கை வானொலியில் பணியாற்றிய கே.எஸ்.ராஜா பணியால் விலக்கபட்டு யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தார்.

ரெலோவை சரணடையுமாறு ஒலிபெருக்கியில் அறிவிக்குமாறு கூறி கார் ஒன்றில் அவரை ஏற்றி விட்டார்கள் புலிகள். தனது வழக்கமான பாணியில் கே.எஸ். ராஜா அறிவிக்கத் தொடங்கினார்.

சிறீசபாரெத்தினத்தை பளையில் உள்ள தாழையடி கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டார் பத்மநாபா.

பளைக்கு செல்வதற்கு இடையில் புலிகளது சோதனை அரண்களை தாண்ட வேண்டியிருக்கும்.

யாழ்ப்பாணத்திலிருந்து சிறீசபாரெத்தினம் தப்பிச்சென்றுவிடலாம் என்பதால் யாழ்ப்பாணக் கடலோரங்களிலும், யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறும் தரைப்பாதைகளிலும் கடும் கண்காணிப்பில் ஈ.டுபட்டிருந்தனர்.

 

சகல வாகனங்களையும் மறித்து சோதனையிட்டனர்.

இடையில் ஒரு தடவை தாழையடிக் கடற்கரையில் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் படகு ஒன்று தமிழ்நாட்டுக்கு செல்ல ஆயத்தமானது.

ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்களோடு, ரெலோ உறுப்பினர்களும் படகில் ஏற்றப்பட்டனர். புலிகளுக்கு எப்படியோ செய்தி கிடைத்துவிட்டது.

குறிப்பிட்ட இடத்துக்கு வந்த புலிகள் அந்த படகில் இருப்பவர்களை பார்க்க வேண்டும் என்று கேட்டார்கள். ‘முடியாது’ என்று மறுத்துவிட்டது ஈ.பி.ஆர்.எல்.எப்.

அதே தாழையடி கடல் மார்க்கமாகத்தான் சிறீசபாரெத்தினத்தையும் ஏற்றி அனுப்பத் திட்டமிடப்பட்டது.

 

ஒரு சவப்பெட்டி செய்து, அதற்குள் சிறீசபாரெத்தினத்தை படுக்கவைத்து கொண்டு செல்ல ஏற்பாடு நடந்தது. சவப்பெட்டியும் தயாராகிவிட்டது.

இடையில் புலிகள் மறித்தால் தமது உறுப்பினரது உடலைக் கொண்டு செல்வதாகக் கூறிவிடலாம் என்பதுதான் நோக்கம்.

இந்த ஏற்பாடுகள் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தபோது, சிறீசபாரெத்தினம் தங்கியிருந்த இடத்தை புலிகள் கண்டுபிடித்து விட்டனர்.

கிட்டுவின் தலைமையில் சென்ற புலிகளது அணி கோண்டாவிலில் அன்னங்கையில் இருந்த வீட்டைச் சுற்றிவளைத்தது.

எதிர்த்துப் போராடுவதில் பலன் இல்லை. முதலில் நிலமையைச் சமாளிக்க வேண்டும் என்று சிறீசபாரெத்தினம் நினைத்தாரோ என்னவோ, வீட்டைவிட்டு வெளியே வந்தார்.

 

கிட்டுவை நோக்கி சிறீசபாரெத்தினம். “நாங்கள் பிரச்சனையைப் பேசித் தீர்கக்லாம்” என்று சொன்னார்.

கிட்டு பதிலேதும் சொல்லவில்லை. சுடத்தொடங்கினார்.

சிறீசபாரெத்தினமும் அவரது மெய்ப்பாதுகாவலர்களும் இரத்த வெள்ளத்தில் மிதந்தனர்.

சிறீசபாரெத்தினத்தின் உடலை தூக்கிக் கொண்டு புலிகள் சென்றுவிட்டனர்.

அதனையடுத்து ஒலிபெருக்கி பூட்டிய கார்களில் புலிகள் அறிவித்த செய்தி இது:

“இந்திய கைக்கூலிகளான ரெலோ இயக்கத் தலைவர் சிறீசபாரெத்தினம் இன்று நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்டார். ரேலோ உறுப்பினர்கள் எம்மிடம் வந்து சரணடைந்தால் மன்னிப்பு வழங்கப்படும்.”

சிறீசபாரெத்தினம் கொல்லப்பட்டதை ஏனைய இயக்கங்கள் யாவும் கண்டித்தன.

யாழ்ப்பாணத்தில் மானிப்பாயில் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கம் சவப்பெட்டி ஊர்வலம் ஒன்றை நடத்தியது. பல நூற்றுக்கணக்காக மக்கள் கலந்து கொண்டனர்.

 

சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள் என்பவற்றையும் ஈ.பி.ஆர்.எல்.எப். வெளியிட்டது.

ஏனைய இயக்கங்கள் பத்திரிகை அறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்ததோடு நிறுத்திக் கொண்டன.

தமிழ்நாட்டில் தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி சிறீசபாரெத்தினம் பலியான செய்தி கேட்டு அதிர்ந்து போனார்.

முரசொலி பத்திரிகையில் உடன்பிறப்புக்கு எழுதிய கடிதத்தில் “எனது நெஞ்சில் இருந்து இரத்தம் வடிகிறது” என்று தனது வேதனையை வடித்திருந்தார். புலிகளையும் கண்டித்திருந்தார்.

ரெலோ உறுப்பினர்களை டயரில் போட்டு எரித்தது ஏன்? என்று கிட்டுவிடம் பலரும் டேடார்கள்.

“சண்டைகளில் இது சகஜம். மறு தரப்பை அச்சமடையச் செய்வதற்கு இப்படியான சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும்.

இங்கே இது புது அனுபவம் என்பதால் அதிர்ச்சியடைகிறீர்கள்” என்று விளக்கம் சொன்னார் கிட்டு.

யாழ்ப்பாணம் நல்லூரில் புலிகள் ஒரு கண்காட்சி நடத்தினார்கள்.

ரெலோ பாவித்த வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன.

ரெலோவால் கொள்ளையிடப்பட்ட பொருட்கள் என்று தொலைக்காட்சி பெட்டிகள், வீடியோ டெக்குகள், தங்க நகைகள் போன்றவையும் வைக்கப்பட்டிருந்தன.

உரியவர்கள் வந்து அடையாளம் காட்டி பெற்றுச் செல்லலாம் என்று அறிவித்தார்கள்.

ரெலோவால் கொள்ளையிடப்பட்டதாக கூறி பார்வைக்கு வைக்கப்பட்ட பொருட்களில் ஒரு பகுதி புலிகள் இயக்கத்தின் வசம் இருந்தவை என்பது கிட்டுவுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்.

ரெலோ தடைசெய்யப்பட்டதையும், ரெலோ உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையையும் நியாயப்படுத்த புலிகள் செய்த ஏற்பாடுதான் அந்தக் கண்காட்சி.

ரெலோவின் கல்வியங்காட்டு முகாமில் பெருந்தொகையான ஆயுதங்கள் இருந்தன. அத்தனையையும் புலிகள் கைப்பற்றினார்கள்.

ஐந்து பிரதான இயக்கங்களில் ஒன்று அதிலொரு இயக்கத்தாலேயே தடை செய்யப்பட்டது,

நான்கு இயக்க ஒற்றுமையும் ஈழத் தேசியவிடுதலை முன்னணியும் (ENLF) ரெலோவுக்கு விதிக்கப்பட்ட தடையோடு முடிந்த கதையாகியது.

கைகோர்த்து நின்ற நான்கு இயக்க தலைவர்களில் ஒருவர் சக இயக்கத்தாலேயே கொல்லப்பட்டார்.

திருப்பமான மோதல்: 1986 ஏப்ரல் மாதம் புலிகள் இயக்கத்திற்கும் ரெலோவுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்தான் போராளி இயக்கங்களின் வரலாற்றில் திருப்பமாக அமைந்தது. அதுவரை எங்காவது ஒரு பகுதியில் நடைபெறும் மோதலோடு பூர்த்தியான இயக்க மோதல்கள் முதன் முதலாக முழு மோதலாக வெடித்தது அப்போது தான். புலிகள் இயக்கத்தின் கோப்பாய் பகுதி பொறுப்பாளர் லிங்கம். அவர் வல்வெட்டிதுறையைச் சேர்ந்தவர். தமது இயக்க சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த லிங்கத்தோடு ரெலோ இயக்க உறுப்பினர்கள் சிலருக்கு பிரச்சனை ஏற்பட்டது. பிரச்சனை முற்றியதால் ரெலோ உறுப்பினர்கள் துப்பாக்கிமுனையில் லிங்கத்தை தமது வாகனத்தில் கடத்திச் சென்றார்கள். சிறீசபாரெத்தினம் தங்கியிருந்த கல்வியங்காடு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார் லிங்கம். அங்குவைத்து லிஙகத்தை விசாரிக்க முற்பட்டனர் ரெலோ இயக்கத்தினர்.

லிங்கம் ஒத்துழைக்கவில்லை. அதேநேரம் லிங்கம் கடத்திச் செல்லப்பட்ட விடயத்தை அறிந்த புலிகள் ரெலோவோடு தொடர்பு கொண்டனர்.

லிங்கம் தப்பியோட முற்பட்டபோது நம்மவர்கள் சுடவேண்டியேற்பட்டது. அதனால் லிங்கம் இறந்துவிட்டார். என்று பதில் சொல்லப்பட்டது.

உடனடியாக செயலில் இறங்கினார்கள் புலிகள். ரெலோ இயக்க முகாம் ஒன்றுக்குள் புகுந்து பதிலடி நடவடிக்கையில் ஈடுபடுமாறு ஒரு குழுவை அனுப்பி வைத்தார் கிட்டு.

யாழ்ப்பாணம் பழைய பூங்காவீதியில் ரெலோ முகாம் ஒன்று இருந்தது. ஏனைய முகாம்களைவிட அதனைத் தாக்குவதுதான் சுலபமாக இருக்கும் என்று கிட்டு திட்டம் போட்டார்.

ரெலோ முகாம் ஒன்றை தாக்கிவிட்டு பின்னர் ரெலோவோடு பேச்சுக்குச் செல்லலாம் என்பதுதான் கிட்டுவின் திட்டம்.

திட்டப்படி பழைய பூங்காவீதி முகாம் புலிகளால் தாக்கப்பட்டது. ரெலோ உறுப்பினர்கள் பதிலடியில் ஈடுபடவில்லை. அதற்கு தயாராகவும் இருக்கவில்லை. லிங்கம் கடத்தப்பட்ட விவகாரமும் அங்கிருந்தவர்களுக்குத் தெரியாது.

முகாமிலிருந்த சிலர் கொல்லப்பட்டனர். முகாம் பொறுப்பாளர் உட்பட பலர் தப்பிச் சென்றனர்.

அந்த முகாமின் பொறுப்பாளரது மருமகன் ஒருவர் புலிகளிடம் சிக்கிவிட்டார். அவரது வயது 13. முதல்நாள்தான் மட்டக்களப்பிலிருந்து இருந்து தனது மாமனாரைக் காண வந்திருந்தார்.

அவரையும் ரெலோ இயக்க உறுப்பினர்கள் என்று நினைத்துவிட்டார்கள் புலிகள். ‘தனக்கு எதுவும் தெரியாது’ என்றான் சிறுவன். நம்பவில்லை.

வேன் ஒன்றுக்குள் போட்டு பூட்டி வெடி குண்டை வைத்தனர் புலிகள். வேன் சிதறியது. சிறுவனின் காலில் ஒரு பகுதி மரத்தில் போய் தொங்கியது.

பழைய பூங்காவீதி முகாமில் பதிலடி இருக்கவில்லை என்பதால் கிட்டு திட்டத்தை மாற்றிக் கொண்டார்.

ரெலோ முகாம்கள் அனைத்தையும் தாக்குமாறு சகல முகாம்களுக்கும் ‘வோக்கி’யில் உத்தரவு பிறப்பித்தார்.

திலீபன் தலைமையில் கல்வியங்காடு ரெலோ முகாம் நோக்கியும் ஒரு அணி சென்றது.

இந்தக் காலகட்டத்திலேயே புலிகள் தொலைத்தொடர்பு சாதன விடயத்தில் முன்னணியில் இருந்தனர். அநேகமாக சகல முகாம்களிலும் வோக்கிடோக்கி இருந்தது.

அதனால் உத்தரவுகளையும், உடனடித் தகவல்களையும் விரைவாகப் பரிமாற முடிந்தது.

ஏனைய இயக்கங்களிடம் தலைமையில் உள்ளவர்களுக்கு மட்டுமே வோக்கிடோக்கி இருந்தது.

பழைய பூங்காவீதி முகாம் தாக்கப்பட்ட செய்தியை அங்கிருந்து ஒருவர் தப்பி ஓடிவந்துதான் கல்வியங்காடு ரெலோ முகாமுக்கு தெரிவிக்க வேண்டியிருந்தது.

அதற்கிடையே கல்வியங்காட்டுப் பகுதியில் புலிகளது வியூகம் வகுக்கப்பட்டு விட்டது.

பழைய பூங்காவீதி முகாம் தாக்கப்பட்ட செய்தியை முதலிலேயே அறிந்திருந்தால் கல்வியங்காட்டில் பிரதான முகாமில் இருந்த ரெலோ உறுப்பினர்கள் முந்திக்கொண்டு பதிலடிக்கு தயாராகியிருப்பார்கள்.

ரெலோவின் பிரதான முகாமுக்கும், யாழ்ப்பாணத்தில் இருந்த ஏனைய ரெலோ முகாம்களுக்கும் இடையே வானொலித் தொடர்பு இருந்திருந்தால் பிரதான முகாமை நோக்கி அவர்கள் அழைத்திருக்கலாம்.

வானொலி தொடர்பு சாதனங்களின் பெறுமதியை அன்றுதான் ரெலோ உணர்ந்திருக்கும். முதலிலேயே உணர்ந்திருந்தால் ரெலோவாலும் வாங்க முடிந்திருக்கும்.

தமது முகாம்கள் தாக்கப்படும் விடயமே தெரியாமல் வீதிவழியாக வாகனங்களில் சென்று கொண்டிருந்த ரெலோ உறுப்பினர்கள் புலிகளால் சுட்டுத் தள்ளப்பட்டார்கள்.

ரெலோ வாகனம் ஒன்றை மறித்த புலிகள் “நீங்கள் எந்த இயக்கம்?” என்று கேட்டார்கள். புலிகள் தமது இயக்கத்திற்கு எதிராக தாக்குதலை ஆரம்பித்துவிட்டதை அவர்கள் அறியவில்லை.

“நாங்கள் ரெலோ…நீங்கள்?”

புலிகள் பதிலே சொல்லவில்லை.

கண்ணை மூடிக் கொண்டு சுட்டுத்தள்ளினார்கள். வேனில் இருந்தவர்கள் ஆறுபேரும் கொல்லப்பட்டார்கள்.

திருநெல்வேலிச் சந்தியில் மட்டும் முப்பதுக்கு மேற்பட்ட ரெலோ உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.

கல்வியங்காடு பிரதான முகாமில் இருந்து மட்டும் ரெலோ பதில் தாக்குதலில் ஈடுபட்டது. அதனால் பிரதான முகாமை புலிகள் நெருங்கிச் செல்ல முடியவில்லை.

பிரதான முகாமுக்கு வெளியிலிருந்து ஆட்பலம் வந்து சேராமல் புலிகள் வியூகம் அமைத்துக் கொண்டனர்.

அதேவேளை திருநெல்வேலிச் சந்தியில் சூடுபட்டு விழுந்து கிடந்த ரெலோ உறுப்பினர்களது உடல்களை ஒன்று சேர்த்தனர்.

சகல உறுப்பினர்களது உடல்களையும் ஒரே இடத்தில் குவித்து, அவற்றின்மீது டயர்களை போட்டு கொளுத்தினார்கள். கிட்டு, திலீபன் ஆகியோரது உத்தரவுப்படியே உடல்கள் டயர் போட்டு எரிக்கப்பட்டன.

சொக்கப்பானை எரிவது போல திருநெல்வேலி சந்தியில் தீயெழுந்து அப்பகுதியை சுடுகாடு போல மாற்றியிருந்தது.

தமது ஜீன்ஸ்களை முழங்கால்வரை மடித்துவிட்டுக்கொண்டு எரியும் நெருப்பில் உடல்களை தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தார்கள் புலிகள் இயக்க உறுப்பினர்கள்.

கல்வியங்காடு பிரதான முகாமைத்தவிர யாழ்ப்பாணத்தில் உள்ள சகல ரெலோ முகாம்களும் புலிகள் தாக்குதலை ஆரம்பித்த முதலாவது நாளே வீழ்ச்சியடைந்தன.

ரெலோ உறுப்பினர்களில் முகாம்களில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

குறிப்பாக மட்டக்களப்பு, திருகோணமலை பகுதியைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம்பேர்.

புலிகளால் ரெலோ முகாம்கள் தாக்கப்பட்டபோது தப்பியோடிய அவர்களுக்கு பாதைகள் தெரியவில்லை. யாரிடம் சென்று அடைக்கலம் கேட்பது என்றும் விளங்கவில்லை. புலிகளிடம் மாட்டிக் கொண்டார்கள்.

முதல் நாளன்று அப்படி மாட்டியவர்களில் கிட்டத்தட்ட நூறுபேர் வரை புலிகள் இயக்கத்தினரால் கொல்லப்பட்டனர்.

திருநெல்வேலி சந்தி தவிர இரு பாலைச் சந்திக்கு அருகாமையிலும் டயர்களில் பிணங்கள் எரிந்து கொண்டிருந்தன.

ரெலோ இயக்க முக்கியஸ்தர்கள் பலர் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்திடமும், ஈரோசிடமும் சென்று பாதுகாப்புக் கேட்டனர்.

கிட்டத்தட்ட நூறு ரெலோ உறுப்பினர்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப். முகாம்களிலும், 50ற்கு மேற்பட்டவர்கள் ஈரோஸ் இயக்க முகாம்களிலும் முதல் நாளன்று அடைக்கலம் பெற்றனர்.

ரெலோ உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டாம் என்று கிட்டு நேரில் சென்று டக்ளஸ் தேவானற்தாவிடம் கூறினார். பாதுகாப்பு கொடுப்பதன் மூலம் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்புக்கும், புலிகள் இயக்கத்திற்கும் இடையில் கசப்புகள் ஏற்படலாம் என்றார் கிட்டு.

எனினும் ஈ.பி.ஆர்.எல்.எப். ரெலோ உறுப்பினர்களுக்கு தொடர்ந்து புகலிடம் வழங்கியது. வெள்ளைக் கொடிகளை வீதிகளில் பறக்கவிட்டு சமாதானத்தை வலியுறுத்தியது ஈ.பி.ஆர்.எல்.எப்.

யாழ்ப்பாணம் நாவந்துறையில் இருந்த ரெலோ முகாமை தாக்குவதற்காகச் சென்ற புலிகள் இயக்கத்தினரை பொதுமக்கள் தடுத்தனர்.

பொதுமக்களுக்கும், புலிகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. முடிவில் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள் புலிகள். பொதுமக்களில் இருவர் கொல்லப்பட்டனர்.

ஆத்திரமடைந்த மக்கள் புலிகள் சென்ற வாகனங்களில் இரண்டை கொளுத்தினார்கள்.

திரும்பிச்சென்ற புலிகள் மீண்டும் வந்து வாகனத்தைக் கொளுத்தியவர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு கேட்டனர்.

இறந்தவர்களது உயிர்களை உங்களால் திருப்பித்தரமுடியுமா? என்று கேட்டனர் கூடியிருந்த மக்கள்.

பிரச்சனையை வளர்க்காமல் புலிகளது அணி திரும்பிச் சென்றது.

யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் புலிகள் இயக்கத்தினரால் ஊரடங்கு அறிவித்தல் செய்யப்பட்டது.

ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வாகனங்களில் ஊர் ஊராகச் சென்று, “ரெலோ இயக்க உறுப்பினர்கள் எம்மிடம் உடனடியாகச் சரணடைய வேண்டும். ரெலோ இயக்கத்தினருக்கு புகலிடம் வழங்குவோர் துரோகிகளாகக் கருதப்படுவார்கள்.

இந்திய அரசின் கைக்கூலிகளாக இருந்து தமிழீழ போராட்டத்தை காட்டிக் கொடுத்த ரெலோ இயக்கத்தை தடை செய்திருக்கிறோம்.” என்று அறிவித்தார்கள் புலிகள்.

ஈ.ழப் போராட்ட வரலாற்றில் இயக்கமொன்றை பிறிதொரு இயக்கம் தடைசெய்துவிட்டதாக அறிவித்தது அதுதான் முதல் தடவை.

சகோதர யுத்தம் என்கிற வசனம்தான். அதாவது விடுதலைப்புலிகள் செய்த சதோதர யுத்தத்தினால்தான் ஈழத்தமிழர்களின் இன்றைய நிலைமைக்கு காரணம் என்பது போலவே அவரது கருத்துக்கள் அமைந்திருக்கும் அது மட்டுமல்ல இன்னமும் தமிழகத்து தமிழர்களும் ஏன் தமிழகத்தின் பிரபல பத்திகைகள் கூட புலிகள்தான் வேண்டுமென்றே மற்றைய சகோதர இயக்கங்களை அழித்து விட்டனர் என்கிற ஒரு தவறான கருத்தையே கொண்டிருப்பதையும் காணலாம். சகோதர யுத்தம்உண்மையில் என்ன நடந்தது என்பதனை தமிழகத்து உறவுகளிற்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் இளையசமூதாயத்தினரிற்கும் முடிந்தளவு புரிய வைப்பதே என்னுடைய இந்தக்கட்டுரையாகும்.

சகோதர யுத்தம் பற்றி விரிவாக எழுதுவதானால் பல பக்கங்கள் தேவை எனவே சுருக்கமாக இரண்டு பாகங்களாக எழுத முயற்சிக்கிறேன். புலிகள் அமைப்பிலிருந்து முரண்பாடுகள் காரணமாக அதன் மத்திய குழுவிலிருந்து உமா மகேஸ்வரன் வெளியேற்றப்பட்டதும்.பின்னர் அவர் புதியபாதை என்னும் குழுவின் தலைவர் சுந்தரத்துடன் இணைந்து புளொட்(P.L.O.T )என்னும் அமைப்பினை தொடங்கி அதற்கு தலைவரான பின்னர். தமிழ்நாடு பாண்டிபஜாரில் பிரபாகரனிற்கும் உமா மகேஸ்வரனிற்கும் இடையில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவமே அன்றைய காலகட்டத்தில் பெரியதொரு சகோதர யுத்தமாகக் கருதப்பட்டது.

ஆனால் அந்தச் சம்பவம்தான் இந்திய மத்திய அரசிற்கு ஈழவிடுதலைப்போராட்டஇயக்கங்களுடனான தொடர்புகள் அமையவும் காரணமாயிருந்தது.ஆனால் காலப்போக்கில் புளொட் அமைப்பில் ஏற்பட்ட உள் முரண்பாடுகளினால் அந்தஇயக்கதினர் தாங்களே ஒருவரையொருவர் அடித்துக்கொண்டும் அழித்துக்கொண்டும் இறுதியாய் புளொட் உறுப்பனராலேயே அதன் தலைவர் உமாமகேஸ்வரனும் கொல்லப்பட்டுவிட்டார். ஆனால் கருணாநிதியும் வேறுசிலரும் சகோதர யுத்தம் என்று சொல்லிக்கொண்டிருப்பது ரெலோ(T.E.L.O )இயக்கத்தினை புலிகள் தடைசெய்ததனையே . இந்தியா உதவியும் பயிற்சியும் கொடுத்து வளர்த்த இயக்கங்களில் புலிகள் இந்தியா எமக்கு தமிழீழம் பெற்றுத்தரும் என்று கண்மூடித்தனமாக நம்பவில்லை அதேபோல இந்தியாவும் புலிகள் தாங்கள் சொல்வதெற்க்கெல்லாம் பிரபாகரன் தலையாட்டுவார் என்று நம்பவுமில்லை.இதனால் புலிகளிற்கும் இந்திய உளவுத்துறைக்கும் ஆரம்பகாலங்களிலிருந்தே ஒருவித பனிப்போர் நடந்துகொண்டேயிருந்தது.அதே நேரம் பிரபாகரளை தங்கள் தலையாட்டிப்பொம்மையாக்கியே தீருவது என்று கங்கணம்கட்டிக்கொண்டு இந்தியாவிலிருந்த புலிகளின் பயிற்சி முகாம்களை பலவந்தமாக மூடியும்.ஆயுதங்களை பறித்தும். புலிகளின் தொலைத்தொடர்பு கருவிகளை பறித்தும்.அன்ரன் பலசிங்கத்தை நாடு கடத்தியும் தொடர்ந்து பலவித நெருக்கடிகளை கொடுத்துவந்தனர்.

ஆனால் றோ அதிகாரிகள் எள் என்றதும் எண்ணெயாகி அவர்கள் உச்சந்தலையிலே உருகிவழிந்த ரெலோ தலைவரிற்கு வேண்டிய வசதிகளை றோ அதிகாரிகள் செய்தது மட்டுமல்ல . எண்பதுகளில் தமிழ்சினிமாவில் உச்சத்திலிருந்த இரண்டு பிரபல நடிகைகளையும் கொடுத்து மாமாவேலையும் செய்தனர். அதில் ஒருவர் இப்பொழுதும் சின்னத்திரையில் வில்லியாக வந்து பயமுறுத்திக்கொண்டிருக்கிறார். மற்றவர் காணாமல் போய்விட்டார்.இப்படி சிறீசபாரத்தினத்தை தங்கள் பிடிக்குள்ளேயே வைத்திருந்துகொண்டு தமிழீழத்திலும் புலிகள் அமைப்பிற்கு றோ அமைப்பு நெருக்கடிகளை கொடுக்கத்தொடங்கியது.இப்படி இந்தியாவின் செல்லப்பிள்ளையாய் மாறிவிட்ட சிறீசபாரத்தினத்தின் போக்கு பிடிக்காமல் ரெலோ அமைப்பின் முக்கிய இராணுவத்தளபதியாக இருந்த தாஸ் என்பவர் இயக்கத்திலிருந்து பிரிந்து போய்விடுவதென முடிவெடுத்தபொழுது அவரையும் அவரது முக்கியமான நண்பர்கள் 5 பேரையும் பேச்சுவார்த்தை நடத்தலாம் வாருங்களென்று அழைத்து யாழ் வைத்திய சாலையில் வைத்து சுட்டுக்கொன்றார்கள். அதே நேரம் புலிகளை எப்படியாவது வம்புச்சண்டைக்கிழுத்து புலிகளை அழித்துவிடும் றோவின் திட்டத்திற்கு சரியான சந்தர்ப்பம் பார்த்து ரெலோவும் ஈழத்தில் தாவடிப்பகுதியில் தமிழ்பாராழுமன்ற உறுப்பினர்களாகிய ஆலால சுந்தரம். மற்றும் தர்மலிங்கம் ஆகியோரை சுட்டுகொன்று விட்டு அதனை புலிகள் செய்தார்கள் என்று பிரச்சராப்படுத்தியது.

தொடச்சியாய் பலகொள்ளைகளை நடத்திக்கொண்டிருந்த (முக்கியமாக வாகனக்கொள்ளைகள்) ரெலோ உறுப்பினர்களிற்கு இடைஞ்சலாயிருந்த இரவு நேரக்காவல் கடைமையில் ரோந்து வரும் புலிகள் அமைப்பினரை கடத்துவது. துன்புறுத்துவது என்று தொடருந்துகொண்டிருந்ததபொழுது அவர்கள் எதிர்பார்த்த சர்ந்தர்ப்பமும் வந்தது. …….86 ம் ஆண்டு புலிகளிற்கும் இலங்கைக் கடற்படைக்கும் நடந்த ஒரு மோதலில் புலிகளின் தளபதியாகவிருந்த அருணாவும் வேறு சிலரும் இறந்து போய்விட்ட செய்தியறிந்து (அருணா அந்தத் தாக்குதலில் இறந்திருக்கவில்லையன்பது பின்னர்தெரியவந்தது) பொதுமக்கள் யாழ்குடாவெங்கும் வாழை தோரணம் கட்டி இறந்த போராளிகளின் உருவப்படங்களிற்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தார்கள். அருணாவின் ஊரான கல்வியங்காடுதான் சிறீசபாரத்தினத்தின் ஊருமாகும்.

கல்வியங்காட்டிலும் மக்கள் தோரணங்கள் கட்டி அருணாவின் உருவப்படங்களை வைந்து அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தவேளை அங்கு வந்த ரெலோ உறுப்பினர்கள் தோரணங்களை அறுத்தெறிந்து உருவப்படங்களையும் கிழித்தெறிந்து பொது மக்களையும் தாக்கியபொழுது அந்த இடத்திற்கு சென்று அவற்றை தடுக்க முயன்ற புலிஉறுப்பினர்களான முரளி என்பவரையும் மூத்த உறுப்பினரான பசீர்காக்காவையும் பலவந்தமாய் அடித்து இழுத்துச்சென்று தங்கள் முகாமில் அடைத்துவிட்டார்கள். இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் பொழுது சிறீசபாரத்தினம் அதேகல்வியங்காட்டிலுள்ள முகாமில்தான் இருந்தார். முரளியையும் காக்காவையும் அடைத்து வைத்து விட்டு அவர்களை மீட்க எப்படியும் புலிகள் தாக்குதலிற்கு தயாராக வருவார்கள் அவர்கள் மீது தாக்குதலை தொங்கி அப்படியே தொடர்ச்சியாய் புலிகளை அழித்துவிடலாமென்கிற திட்டத்துடன் ரெலோ அமைப்பினர் தாக்குதலிற்கு தயாரான நிலையிலேயே இருந்தனர். ஊர் நிமைமைகள் அன்றைய புலிகளின் யாழ் மாவட்ட தளபதியான கிட்டு உடனடியாக தலைமைக்கு தெரியப்படுத்தபட்டு முரளியையும் காக்காவையும் ஒரு தாக்குல் மூலம் மீட்கலாமா அல்லது பேச்சுவார்த்தைமூலம் தீர்க்கலாமா என ஆலோசனை கேட்டிருந்தார்.

பிரபாகரனும் நிலைமைய சிக்கலாக்கமால் பேசித்தீர்க்கலாமென்கிற முடிவுடன் பேச்சு வார்த்தைக்கு கிட்டுவை அனுப்பாமல் அப்பொழுது தமிழ்நாட்டின் மதுரை மாவட்ட புலிகளின் அலவலகத்திலிருந்த மூத்த உறுப்பினரும் சிறீசபாரத்தினத்திற்கு நன்கு பழக்கமான லிங்கத்தினை சிறீசபாரத்தினத்துடன் பேசுவதற்காக அனுப்பிவைத்தார். காரணம் கிட்டுகொஞ்சம் கோபக்காரர்.இப்படியான சந்தர்ப்பங்களில் அமைதியாகப்பேசமாட்டார். ஆனால் லிங்கம் எப்படிப்பட்ட சிக்கலான நிலைமையிலும் கோபப்படாமல் அமைதியாக பேசிகோபத்திலிருப்பவர்களையும் அமைதியாக்கி விடுவார். அதனால்தான் அவரிற்கு புலிகளின் மதுரை அலுவலகத்தினை நிருவகிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அவசரமாக மாதகலில் வந்திறங்கிய லிங்கம் மேலும் இருவரை அழைத்தகொண்டு ஆயுதங்கள் எதுவுமின்றி கல்வியங்காட்டில் சிறீசபாரத்தினம் இருந்த முகாமிற்கு சென்று அங்கு தன்னை அறிமுகப்படுத்தி சிறீயுடன் கதைக்கவேண்டும் எனகேட்டதுமே லிங்கத்தை நோக்கி துப்பாக்கி சடசடத்தது. லிங்கம் அந்தவிடத்திலேயே இறந்துபோக அவருடன் கூடசென்றவர்களால் லிங்கம் கொல்லப்பட்ட செய்தி கிட்டுவிற்கு அறிவிக்கப்பட்டது.

அதற்கு மேலும் ரெலோவுடன் பேசிப்பயனில்லையென்று தெரிந்துகொண்ட புலிகள் அதிரடியாக ரெலோவின்மீது தாக்குதலைத் தொடுத்து அவர்களால் அடைத்து வைக்கப்பட்டிருந்த முரளியையும் பசீர் காக்காவையும் மீட்டு இறுதியாய் சிறீசபாரத்தினமும் கொல்லப்பட்டதுடன் ரெலோவின் ஆதிக்கம் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இங்கு புலிகள் அமைப்பினரைப்போலவே ஆட்பலத்திலும் ஆயுதபலத்திலும் சமமாய் இருந்தவர்கள் எனக்கருதப்பட்ட ரெலோ அமைப்பு புலிகளால் சுலபமாக அழிக்கபட்டதற்கு என்ன காரணங்களென பார்த்தால்.

ரெலோ வினால் கொல்லப்பட்ட லிங்கம் அம்மான்

1)ரெலோ அமைப்பு தனக்கு பின்புலத்தில் இந்தியா இருக்கின்றதென்கிற தைரியத்தில் தன்னுடைய சக்தியை அளவுக்கு மீறியதாக கற்பனை செய்து கொண்டதனாலும் . அவர்களது அடாவடித்தனங்கள் அதிகரித்தமையாலும்.உதாரணமாக யாழ்குடாநாட்டில் ஒரு வீட்டிலாவது ஒரு வாகனம் உருப்படியாய் நிற்க முடியாது முக்கியமாய் மோட்டார்சைக்கிள்கள். அவற்றை உடனேயே கடத்திக்கொண்டு போய்விடுவார்கள் அவற்றை தமிழ்நாடுவரை கொண்டு சென்று அங்கு பெரும்பணக்காரர்களிற்கு விற்றுவிடுவார்கள். அடுத்தது தொடர்ச்சியாய் பல கொள்ளைகள். இதனால் மக்கள் மனங்களிலிருந்து அன்னியப்படத்தொடங்கினார்கள்.

2) புலிகளுடனான மோதலை வழிநடத்த சரியான அனுபவமுள்ள ஒரு வழிகாட்டி இல்லாததும் ஒருகாரணம். அவர்களிடமிருந்த தாக்குதல்களை வழிநடத்துவதில் சிறந்தவர்களான தாஸ் மற்றும் காளியையும் அவர்களே யாழ்வைத்திய சாலையில் வைத்து சுட்டுக்கொன்று தாங்களே தங்கள் தலையில் மண்ணள்ளிப்போட்டுக்கொண்டனர்.அது மட்டுமல்ல அதந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொது மக்கள் நடாத்திய ஊர்வலத்திலும் பகிரங்கமாக கண்மூடித்தனமாக சுட்டதிலும் ஒருவர் இறந்து போனது மக்களிற்கு ரெலோ மீதான கோபத்தினை அதிகரித்திருந்தது.

3) புலிகளிடம் இருந்த அளவு ஆயுத ஆட்பலம் இருந்திருந்தாலும் ரெலோ அமைப்பிடம் தொலைத்தொடர்பு வசதிகள் இருக்கவில்லை . அதனால் அவர்களால் உடனுக்குடன் தலைமைக்கும் மற்றவர்களிற்குமிடையினாலான செய்திகளை பரிமாறிக்கொள்ள முடியாமல் பல குழுக்களாக தனித்துப்போயிருந்தனர்.

4)புலிகளுடனான சண்டை தொடங்கியதும் அதனை முன்னின்று வழிநடத்தாமல் தான் எப்படியாவது தப்பித்து தமிழ்நாட்டிற்கு ஓடிவிட்டால் போதுமென்கிற நினைப்பில் சிறீ சபாரத்தினம் தலைமறைவாகியதும் மற்றைய ரெலோ அமைப்பினரிற்கு ஒரு சலிப்பை கொடுத்தது. அவர்களும் தாங்களும் ஆயுதங்களை போட்டு விட்டு எப்படியாவது தப்பியோடி விடலாமென முடிவெடுத்து ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் புளொட் இயக்க முகாம்களில் ஓடி ஒழிந்து கொண்டது.

5) எல்லாவற்றிற்கும் மேலாக அன்றைய காலகட்டத்தில் புலிகளும் ரெலோவும் இராணுவ ரீதியில் சமபலத்துடன் இருந்ததாகவே பலரும் எண்ணினர். ஆனால் ரொலோ அமைப்போ தாங்கள் புலிகளைவிட பலமாக இருப்பதாகவே எண்ணினர். அவர்களின் இந்த எண்ணம்தான் புலிகளை தொடர்ச்சியாய் வலுச்சண்டைக்கு இழுக்கக் காரணமாயிருந்தது. ஆனால் புலிகள் ஆரம்பம் முதற்கொண்டு இன்று வரை தங்கள் முழுமையான ஆயுத இராணுவபலம் இதுதானென்று வெளியில் காட்டிக்கொண்டதேயில்லை. அதுமட்டுமல்ல புலிகளின் யுத்தஅனுபவங்களும் அவர்களின் ஆன்ம பலமும்தான் வழைமைபோல ரெலோவுடனான யுத்தத்திலும் வெற்றிபெறவைத்தது.

இரணியன்

SHARE