முஸ்லிம் தனித்­துவ அர­சி­யலின் உரு­வாக்கம்

326

முஸ்­லிம்­களின் அர­சியல் ,சமூக விடு­த­லைக்­காக அர­சி­யலில் இன்­னமும் இருக்­கிறோம் என சொல்லி வரு­கின்ற எந்த முஸ்லிம்  கட்­சி­களின் மீதான அர­சியல் விமர்­ச­ன­முமல்ல.

இலங்­கையில் முஸ்­லிம்­களின் தனித்­துவ அர­சியல் போக்­கு­களும் அது  கொண்டு வந்து நிறுத்தி இருக்­கின்ற அர­சியல் திசை­வழி குறித்தும் மட்­டுமே.

கட்சி ஆத­ரவு நிலைப்­பாடு ,தலை­மைத்­துவ விசு­வாசம், சொந்த நலன்கள் என்­ப­ன­வற்­றிற்கு  வெளியில் நின்று ஒரு கணம் சிந்­திப்­ப­தற்­கான வாய்ப்­பையும் கேள்­வி­க­ளையும்  பொது மக்­க­ளிடம் உரு­வாக்­கு­வதே இக்­கட்­டு­ரையின் நோக்­க­மாகும்.

2015ம் ஆண்டின் பொதுத் தேர்தல், இலங்கை முஸ்­லிம்­களின் தனித்­துவ அர­சி­யலை குழி தோண்டிப் புதைத்­து­விட்டு பேரி­ன­வாத கட்­சி­க­ளிடம் முஸ்லிம் மக்­களை கூட்டிக் கொடுக்கும் அர­சியல் வியா­பா­ரத்தின் அபத்­த­மான சூழ்­நி­லையை உரு­வாக்கி விட்­டுள்­ளது என்று சொல்­வது மிகை­யா­ன­தல்ல .

முஸ்­லிம்­க­ளுக்கு ஏன் அர­சியல் கட்­சிகள்/ இயக்­கங்கள்  ஏன் அவ­சியம்?

முஸ்­லிம்கள்  வெறு­மனே  முஸ்லிம் பெயர் தாங்­கி­யுள்ள கட்­சி­க­ளுக்கு ஏன் வாக்­க­ளிக்க வேண்டும்?  இந்த முஸ்லிம் கட்­சிகள் உண்­மையில் முஸ்­லிம்­களின் நல­னிலும் அர­சியல் சமூகப் பாது­காப்­பிலும் கொள்­கைப்­பற்று கொண்­ட­வர்­களா? எனும் கேள்­விகள் இன்று எந்த அளவு முக்­கி­யத்­து­வ­மா­ன­தாக இருக்­கி­றதோ அதே போல்  முஸ்­லிம்­களின் தனித்­துவ அர­சி­யலின் உரு­வாக்க கால­கட்­டத்தின்  அர­சியல் தேவை எது­வாக இருந்­தது?

எந்த நோக்­கத்­தினை முன்­நி­றுத்தி இலங்­கையின் தனித்­துவ முஸ்லிம் அர­சியல் போக்கு மேற்­கி­ளம்பி வந்­தது என்­கிற கேள்­வி­களும்   அர­சியல் வர­லாற்றின் உண்­மை­களும் மீளவும் இன்று நமக்கு முக்­கி­யத்­து­வ­மா­ன­தாக மாறி  இருக்­கி­றது.

முஸ்­லிம்­களின் தனித்த அர­சியல் பாதை புறப்­பட்ட கதை­யையும் அதன் வர­லாற்றுத் தேவை­யையும்  பார்ப்­போ­மானால் கொஞ்சம் நாம் காலத்­தினை பின்­னோக்கிப் பார்த்து  அதில் “நன­விடை தோய்தல்” வேண்டும்.

1985ம் ஆண்டு கால­கட்­டத்தில் இந்த முஸ்லிம்  தனித்­துவ அர­சி­ய­லுக்­காக உழைத்து, தம்மை அர்ப்­ப­ணித்த பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் இன்­னமும் இரத்­தமும் சதை­யு­மாக  நம்­மி­டையே வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றனர்.

அந்த அர­சியல் ஆறு இன்று பின்­னோக்கிப் பாய்ந்து  , அன்று எந்த அர­சியல் போக்கை நிரா­க­ரித்து தனித்­துவப் பாதை போட்டு பயணம் தொடங்­கி­னோமோ , அந்த பய­ணத்­தினை வழி நாடாத்­தி­யவர்­க­ளா­லேயே  மீண்டும் பேரி­ன­வாத கட்­சி­க­ளிடம் கொண்டு வந்து சேர்க்­கப்­பட்­டி­ருக்­கிறோம் என்­பது  நமக்கு எவ்­வ­ளவு பெரிய தோல்­வியை தந்­தி­ருக்­கி­றது  என்­பதை உணர்­வதும் அது­பற்­றிய அர­சியல் தெளிவைப் பெறு­வதும் முக்­கி­ய­மா­னது என எண்­ணு­கின்ற பிரி­வி­ன­ருடன் , அவர்­களின் நெஞ்­சத்­திற்கு நெருக்­க­மாக நின்று சில விட­யங்­களை பேச வேண்­டு­மென  நினைக்கிறேன்.

இன்­றைய இந்த  சிதைவு நிலையை முஸ்லிம்  தனித்­துவ அர­சி­யலில் நம்­பிக்கை கொண்ட மக்கள் பிரி­வினர் மத்­தியில்  அதிக  கவ­னத்தில் கொள்ள வேண்­டிய ஒரு  முக்­கி­ய­மான அர­சியல் அம்­ச­மாக எடுத்து ஆழ­மாக விவா­திக்­கப்­ப­டு­வது மிக அவ­சி­ய­மா­ன­தாக மாறி விட்­டுள்­ளதை இந்த பொதுத்­தேர்தல்  நம் கண்  முன் ஏற்­ப­டுத்தி விட்­டுள்­ளதை காண்­கிறோம்

முஸ்லிம் தனித்­துவ அர­சி­யலின் உரு­வாக்கம்
1977ம் ஆண்டு அதி­கா­ரத்­திற்கு வந்த ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்­கத்தின் கொள்­கைகள் இலங்­கையில் வாழும் சிறு­பான்மை மக்­க­ளையும் , வறிய கிரா­மப்­புற மக்­க­ளையும் மிக மோச­மாகப் பாதித்­தது.

சிறு­பான்மை மக்கள்  விரோத கொள்­கை­களை காணி, கல்வி, பொரு­ளா­தாரம்  போன்ற துறை­களில் ஐக்­கிய தேசியக் கட்சி துல்­லி­ய­மாகப் பிர­யோ­கித்­தது. பண்­டா­ர­நா­யக்க போன்ற சிங்­கள தேசி­ய­வா­தி­களின் சிங்­களக் குடி­யேற்றம் , சிங்­கள மொழிக்­கொள்­கை­களை அப்­ப­டியே  ஐக்­கிய தேசியக் கட்சி தொடர்ந்­தது.

இதனால் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் பாதிக்­கப்­பட்­டதைப் போன்றே வடக்கு கிழக்கு வாழ் முஸ்­லிம்­களும் பாதிக்­கப்­பட்­டனர்.

அக்­கா­ல­கட்­டத்தில் இப்­பி­ராந்­தி­யத்தில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யிலும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யிலும் முஸ்லிம் பிர­தி­நி­திகள் பாரா­ளு­மன்­றத்தில் இருந்­தனர்.

சம்­மாந்­துறை  அப்துல் மஜீத், கல்­முனை மன்சூர், ஏறாவூர் பரீத் மீரா­லெப்பை, மூதூர் மஜீத் , திரு­மலை மஹ்ரூப் போன்­ற­வர்கள்  தாம் அங்கம் வகிக்கும் அர­சாங்­கத்­திற்கு ஊடாக முஸ்லிம் மக்­க­ளுக்கு அபி­வி­ருத்தி, வேலை­வாய்ப்பு மற்றும் சிறிய முன்­னேற்­றங்­களை பெற்றுக் கொடுக்க கூடி­ய­வர்­க­ளாக இருந்­தார்­களே தவிர ,இப்­பி­ராந்­தி­யங்­களில் வாழ்­கின்ற முஸ்லிம் மக்­களின் அர­சியல் சமூக உரி­மை­களை பேரி­ன­வாத கட்­சி­க­ளிடம் தட்டிக் கேட்கும் குர­லற்ற பிர­தி­நி­தி­க­ளாக வே இருந்­தார்கள். இதனால் முஸ்­லிம்­களின் உரி­மை­க­ளுக்­காக பேரி­ன­வாதத்  தலை­மை­க­ளுடன் அர­சியல் போராட்­டத்­தினை நடாத்தக் கூடிய தனித்­துவ முஸ்லிம் தலை­மையும், அதற்­கான அர­சியல் இயக்­கத்தின் தேவையும் உண­ரப்­பட்­டது.

அன்று கிழக்கு முஸ்லிம் பிர­தே­சங்­களில் ஆழ­மாகக் காலூன்றி இருந்த ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும்,  ஒர­ளவு செல்­வாக்குப் பெற்­றி­ருந்த சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்கும்  அதன் அர­சியல் பிரதி நிதித்­து­வத்­திற்கும் எதி­ரா­கவே இலங்கை முஸ்­லிம்­களின் தனித்­துவ அர­சியல் தொடங்­கி­யது. அந்த அர­சியல்  அன்று அதி­கா­ரத்தில் இருந்த  ஐக்­கிய தேசியக் கட்­சியை பிர­தான அர­சியல் எதி­ரி­யாக காட்­டி­யது.

1987 ஜுலை மாதம் ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்­கத்­திற்கும் இந்­தி­யா­வுக்­கு­மி­டையே கைச்­சாத்­தி­டப்­பட்ட இலங்கை இந்­திய உடன்­ப­டிக்கை முஸ்லிம் தனித்­துவ அர­சி­யலை மேலும் அடுத்­த­கட்­டத்­திற்கு முன் நகர்த்­தி­ய­துடன் ஐக்­கிய தேசி­யக்­கட்சி மீதான எதிர்ப்­பு­ணர்வை மேலும் ஆழப்­ப­டுத்­தி­யது.

வடக்கு கிழக்­கினை இணைத்­ததன் வழி­யாக வடக்கு கிழக்கு வாழ் முஸ்­லிம்­களின் அர­சியல், சமூக இருப்­பி­னையும் பாது­காப்­பி­னையும் காவு கொண்­ட­தாக அர­சியல் ரீதி­யாக  நம்­பிய இப்­பி­ராந்­தி­யங்­களில் வாழும்  பெரும்­பான்மை முஸ்­லிம்கள் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியை நிரா­க­ரித்­தார்கள்.

ஒப்­பீட்­ட­ளவில் தனிப்­பட்ட வகையில் மிக நல்ல மனி­தர்­க­ளாக இருந்த அன்­றைய பேரி­ன­வாதக் கட்­சி­களில் இருந்த முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் துரோ­கி­க­ளாக்­கப்­பட்­ட­துடன், இந்த நல்ல மனி­தர்கள் தீண்­டத்­த­கா­த­வர்­க­ளாக்­கப்­பட்டு சமூக செல்­வாக்கு தளத்தில் இருந்து தூக்கி வீசப்­பட்­டார்கள்.

சமாந்­தி­ர­மாக 1985க்குப்பின் தமிழ் ஆயுத இயக்­கங்­களின் நட­வ­டிக்­கைகள் வடக்கு கிழக்கு வாழ் முஸ்­லிம்­களை பாதிக்கத் தொடங்­கி­யது. இப்­பி­ராந்­தி­யத்தில் வாழும் முஸ்­லிம்கள் பாது­காப்­பில்­லாத நிலைக்கு படிப்­ப­டி­யாகத் தள்­ளப்­படத் தொடங்­கினர்.

தமிழ் மக்­களின் அர­சியல் விடு­தலைப் போராட்­டத்­திற்கு தமி­ழர்கள் தலைமை தாங்­கு­வதும் தமக்­கான அர­சி­யல்­கட்­சிகள்/  இயக்­கங்­களைக் கொண்­டி­ருப்­பது போன்று வடக்கு கிழக்கு வாழ் முஸ்­லிம்­க­ளையும் அர­சியல் ரீதி­யாகப் பிர­தி­நி­தித்­துவப் படுத்­து­வ­தற்கும் அவர்­க­ளது அபி­லா­சை­களை முன்­னி­லைப்­ப­டுத்­து­வ­தற்கும்  தனித்­து­வ­மான முஸ்லிம்  அர­சி­யலும் அதற்­கான கட்­சியும் தேவைப்­பட்­டது.   இந்தப் போக்கின் விளை­வாக தமது சொந்தப் பிர­தி­நி­தி­க­ளாக பேரி­ன­வாத கட்­சி­களில் இருந்த முஸ்லிம் பிர­தி­நி­திகள் மக்­களால் தோற்­க­டிக்­கப்­பட்­ட­துடன்,  பேரி­ன­வாத அர­சியல் கட்­சி­களும் முஸ்லிம் பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து  மங்கி வலு­வி­ழக்க வைக்­கப்­பட்­டது.

1981 இல் சமூக இயக்­க­மாக ஆரம்­பிக்­கப்­பட்ட சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் 1986இல் அர­சியல் கட்­சி­யாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டு 1988இல் தேர்தல் ஆணை­யா­ளரால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு 1989ம் ஆண்டு நடை­பெற்ற பாரா­ளு­மன்­றத்தில்  4  பிரதி நிதி­க­ளையும் பெற்றுக் கொண்­டது.

இந்தக் கட்சி முஸ்லிம் தனித்­துவ அர­சி­யலின் தலைமைப் பாத்­தி­ரத்­தினை வகிக்கத் தொடங்­கி­யது. 1980 தொடக்கம் 1990 வரை­யான ஒரு தசாப்­த­கால முஸ்லிம் தனித்­துவ அர­சி­யலின் சுருக்­க­மான  வரிகள் இவை.

 பின்­னான முஸ்லிம் காங்­கிரஸ்
முஸ்லிம் காங்­கிரஸ்  தலை­வரின் மர­ணத்தின் பின் முஸ்லிம் காங்­கிரஸ்  பல கட்­சி­களாப் பிரிந்­தது. காங்­கிரஸ்  எனும் தாய் இயக்­கத்தின் பெயரின் ஒரு பகு­தியைத் தாங்­கியும் , அஷ்ரப் அவர்­களின்  நிழற்­ப­டத்தை வைத்தும் ரிசாத் பதி­யுதீன் , அதா­உல்லாஹ் போன்றோர் தனிக்­கட்­சி­களை உரு­வாக்­கினர்.

ஒரு தேசிய தனித்­துவ அர­சியல் இயக்­கத்தின் பலத்­தினை உணர்ந்­ததும் , அதன் பின்னால் திரண்டு நின்ற மக்கள் சக்­தியின் வலி­மை­யையும் இவர்கள்  உணர்ந்­தி­ருந்­தனர்.

காங்­கிரஸ்  என்ற பெயரை  தாங்க மறுத்­த­வர்­களும், தேசியக் கட்­சி­களில் போய் சேர்ந்­த­வர்­களும் காணாமல் போயினர்.  ஹக்கீம் தலை­மை­யி­லான   சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ், ரிசாத் பதி­யுதீன் தலை­மை­யி­லான அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், அதா­உல்லாஹ் தலை­மை­யி­லான தேசிய காங்­கிரஸ் என்­பன கலைக்­கப்­பட்ட பாரா­ளு­மன்றம் வரை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைக் கொண்­டி­ருந்­த­துடன்  அர­சியல் தலை­மை­க­ளாவும் இருந்து வரு­கின்­றனர்.

இவர்கள் முஸ்லிம் மக்­களின் நலனும் உரி­மையும் காப்­பதே தமது இலட்­சியம் என்­கின்­றனர். தமக்கு வாக்­க­ளிப்­பதன் ஊடா­கவே முஸ்லிம் சமூ­கத்­திற்கு விடிவு என்­கின்­றனர். அதி­கா­ரத்­தினை அடைந்து கொள்­வ­தற்­காக மக்­களை கூறு போடு­கின்­றனர். ஒரு­வரை ஒருவர் தோற்­க­டிப்­பதே தமது அபி­லாசை என சொல்­வதை வச­தி­யாக மறைத்து, சமூக, மக்கள் அபி­லா­சை­க­ளாக திரித்து பொது மக்­களை நம்ப வைத்தும் வரு­கின்­றனர்.

எந்த நோக்­கத்­திற்­காக முஸ்லிம் தனித்­துவ அர­சியல் உரு­வாக்கம் கொண்­டதோ அந்த நோக்­கி­லி­ருந்து தடம் மாறி , ஒடுக்­கு­முறை பண்­பு­களைக் கொண்ட பேரி­ன­வாத அர­சியல் தலை­மை­களை அதி­கா­ரத்­திற்கு கொண்டு வரும் உள்ளூர் தர­கர்­க­ளாக இந்தக் கட்சித் தலை­வர்கள்  மாறி விட்­டனர்.

ஒரு சாரார் ஐக்­கிய தேசியக் கட்­சியை சார்ந்தும், இன்­னு­மொரு சாரார் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியை சார்ந்தும் தமது சொந்த அர­சியல் வாழ்வை திட்­ட­மி­டு­கின்­றனர். இதற்­காக, ஒரு தனித்­துவ அர­சியல் பாதையில் புறப்­பட்ட மக்­களை கட்­சி­களின் பெய­ரினைப் பயன்­ப­டுத்­தியும், அம்­மக்­களின் உண்­மை­யான அர­சியல் உணர்­வினை கப­டத்­த­ன­மாக ஏமாற்­றியும் வரு­கின்­றனர்.

பெறப்­ப­டு­கின்ற பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­களை வைத்து மாறி மாறி அதி­கா­ரத்­திற்கு வந்த ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­டமோ, சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சி­யி­டமோ  முஸ்லிம் சமூ­கத்தின்  மீதான அரச ஒடுக்­கு­மு­றையின் கொள்­கை­யிலோ செயற்­பாட்­டிலோ எந்த மாற்­றத்­தி­னையும் இவர்­களால் கொண்­டு­வர முடி­ய­வில்லை.

ஒரு சாரார் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் ஆட்­சிக்­கா­லத்தில்  வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்கள்  மீது  நடை­பெற்ற ஒடுக்­கு­தலை  மறைக்க முற்­ப­டு­கின்­றனர். இன்­னொரு சாரார் மகிந்­தவின் காலத்தில் நடந்­ததை திரி­ப­டைய வைக்கப் பார்க்­கின்­றனர். அதற்கும் தமக்கும் சம்­பந்­த­மில்லை என நிறுவப் பார்க்­கின்­றனர்.

மகிந்­தவின் ஆட்­சியில் இறு­தி­வரை மேற்­சொன்ன மூன்று கட்­சித்­த­லை­மை­களும் அமைச்­சர்­க­ளாக இருந்து, முண்டு கொடுத்துக் கொண்­டி­ருந்­தவர்கள்  அப்­பாவி முஸ்லிம் மக்­களின் அர­சியல் பல­வீ­னத்தால்,  தாம் தப்­பித்து விட்டோம் என நினைக்­கின்­றனர்.

இன்­றைய தேர்தல் கூட்­டுகள்
உல­கி­லெங்­குமே நிக­ழாத அர­சியல் அபத்த நாட­க­மொன்று வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்­க­ளிடம் காட்­சிக்கு வந்­தி­ருக்­கி­றது .அதா­உல்லாஹ்.ஹிஸ்­புல்லாஹ் போன்­ற­வர்கள் மகிந்­தவின் இருப்பும் செல்­வாக்கும் நாளுக்கு நாள் அசைக்க முடி­யாது வலுப் பெற்­று­வரும்  சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி தலைமை தாங்கும் கூட்டு முன்­ன­ணியில் தேர்தல் கேட்­கின்­றனர்.

சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் , அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஐக்­கிய தேசியக் கட்சி தலை­மையில் தேர்தலில் கேட்­கின்­றனர்.

ஒரு மாவட்­டத்தில் தனி­யா­கவும், இன்­னு­மொரு மாவட்­டத்தில் பிரிந்தும், மற்­று­மொரு மாவட்­டத்தில் அனை­வரும் ஒன்­றா­கவும் தேர்தல் கேட்­கின்­றனர்.

சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் , அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ்  தலை­மை­க­ளுக்கு தேசியத் தலைமை ஐக்­கிய தேசியக் கட்­சியும்  ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வும்தான்.

இதில் இவர்­க­ளுக்குள் கருத்து வேறு­பாடு இல்லை. ஆனால் வடக்கு கிழக்கு முஸ்லிம் பிர­தே­சங்­களில்  வாக்­கா­ளர்­க­ளா­கிய முஸ்­லிம்கள் சில மாவட்­டங்­களில் யானைக்கு புள்­ளடி போட வேண்டும் , சில மாவட்­டங்­களில் யானைக்கும் மயி­லுக்கும் புள்­ளடி போடு­வது துரோகம் மரத்­திற்கு போட­வேண்டும்,

சில மாவட்­டங்­களில் யானைக்கும் மரத்­திற்கும் புள்­ளடி போடு­வது துரோகம் மயி­லுக்கு புள்­ளடு போட­வேண்டும், திரு­மலை  போன்ற மாவட்­டத்­திலும், இந்த இரு கட்­சிகள்  ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து கேட்கும் வடக்கு கிழக்­குக்கு வெளி­யே­யான மாவட்­டங்­களில் யானைக்கு மட்டும் போட வேண்டும் . அதா­உல்லா, ஹிஸ்­புல்லா போன்­ற­வர்கள்  வெற்­றி­லைக்கு மட்டும் போட வேண்டும்.

இந்த  பேரி­ன­வாத சார்பு  அர­சியல் தனித்­துவ முஸ்லிம் அர­சி­யலை, முஸ்­லிம்­க­ளுக்­கான தேசிய அர­சியல் இயக்­கத்­தினை  எங்கு கொண்டு வந்து இப்­போது நிறுத்தி இருக்­கி­றது என்­ப­தனை மதிப்­பி­டு­வ­தற்கு இதனை விட அர­சியல் ஆதாரம் வேறு ஏதா­வது தேவை­யாக இருக்­கி­றதா அன்­பான முஸ்லிம் மக்­களே!

எந்த முஸ்லிம் அர­சியல் கட்­சிக்கும்   உறு­தி­யான கொள்­கை­களை  முன் வைத்து முஸ்லிம் மக்­களை அணி திரட்டி ஜே.வி. பி போன்று ஐக்­கிய தேசியக் கட்­சி­யையோ, சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சி­யையோ ஆதர்­ச­ன­மாகக் காட்­டாது  தனித்­து­வ­மாக இந்த தேர்­தலை முகம் கொள்ள முடி­ய­வில்லை.

குறைந்த பட்­ச­மா­வது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி போன்­றா­வது ஒடுக்­கப்­ப­டு­கின்ற மக்­க­ளுக்கு தலைமை தாங்­கு­கின்ற  கட்­சி­களின் அர­சியல் பண்­புடன்  தேர்தல்  கோரிக்­கையை அர­சியல் கோரிக்­கை­யாக்கி மக்கள்  ஆணை பெறு­வ­தற்கும்  அதனை மைய அர­சி­யலை நோக்­கிய அழுத்­த­மாக மாற்­று­வ­தற்கும் தனித்து வடக்கு கிழக்கில்  தேர்­தலில் போட்­டி­யி­டு­வற்கு முடி­ய­வில்லை.

இதுதான் உண்­மை­யென்றால் தனித்­துவ அர­சியல்,   தேசிய அர­சியல் இயக்கம், போன்ற கதை­யா­டல்­க­ளுக்கு இன்னும் அர்த்தம் உள்­ளதா?

அன்று இந்த ஐக்­கிய தேசியக் கட்­சி­யையும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சி­யையும் நிரா­க­ரித்து தனித்­துவ அர­சி­யலின் தேவையை முன் நிறுத்தி எழுந்த ஒரு அர­சியல் எழுச்சி ,சிதை­வ­டைந்து கூர்­மங்கி ஒடுக்­கு­வோரை தலை­மை­யாக ஏற்று சர­ணா­கதி அடைந்த தோல்­வியின் ஒரு பகுதி விளைவு இது. இந்த  ஏமாற்ற மிகு தோல்­வியின் கண்­ணீ­ரி­லி­ருந்து  முஸ்லிம்  தனித்­துவ அர­சியல் மீள உயிர்ப்­பிக்­குமா  என்­பதை சமூக சக்­தி­கள்தான் சொல்தல் வேண்டும்.

அர­சியல் அறி­வுள்ள, சமூக விடு­த­லையை முன்னிறுத்தி  திரட்சியுற்ற ஒரு மக்கள்  பிரிவினர் மத்தியில் மிக இலேசாக இப்படி ஒரு மோசடி நாடகத்தினை நடாத்த முடியுமாக இருப்பின் ஒன்று இந்த மக்கள்  மிகப் பலவீனமான அரசியல் அறிவு நிலையில் உள்ளார்கள் என்ற முடிவுக்கு நாம் வர வேண்டும் அல்லது ஏமாற்றும் இந்த தலைமைகள்  பலே கில்லாடிகளாக உள்ளனர் என்ற முடிவுக்கு வர வேண்டும். முஸ்லிம் வாக்காளர்களே உங்களிடம் ஒரு கேள்வியும் இல்லையா? .

அரசியல் என்பது வெறும் உணர்ச்சிமட்டுமல்ல அதில் அறிவும் தார்மீக ஆவேசமும் சரியினை, தவறினை பகுத்தறியும்  நுட்பமும் உள்ளது என்பதை நாம் இன்னும் அறிந்து கொள்ளவில்லையா? நாம் எல்லோருமே சேர்ந்து முஸ்லிம் தனித்துவ அரசியலை குழி தோண்டிப் புதைத்து கபுறை மூடி  விட்டு வந்து விட்டோமா?

இறைவா எதிரிகளை நான் பார்த்துக் கொள்வேன், நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று என்கிற ஒரு அர்த்தமுள்ள வாசகம் உள்ளது.

இன்றைய முஸ்லிம் அரசியலைப் பொறுத்தவரை சமூகத்திற்கு வெளியிலிருந்து வருகின்ற ஒடுக்குமுறையையும் எதிர் நிலைப்பாட்டையும் முகம் கொள்ள முஸ்லிம் சமூகம் தயாராக உள்ளது, ஆனால் சமூகத்தினை காப்பாற்றப் போகிறோம் எனச் சொல்லும் இந்த ஏமாற்றமிகு  தலைமைகளிடமிருந்து சமூகத்தினை காப்பாற்ற நாம் இறைவனைத்தான் துணைக்கு அழைக்க வேண்டியுள்ளதுடன்,  முஸ்லிம் சிவில் சமூக மட்டத்தில் கோட்பாட்டு ரீதியான  அரசியல் முன்னெடுப்பினையும் அரசியல் மயப்படுத்தலையும் கட்சி நலன்களுக்கு வெளியே நின்று சமூக சக்திகள்   முன்னெடுக்க வேண்டிய தேவையுமுள்ளது.

SHARE