வைக்கோல் பட்டடை நாய்: TNA கடும் கண்டனம்

510

வைக்கோல் பட்டடை நாய் போன்று வடக்கு மாகாணசபை செயல்படுகிறது என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விமர்சனத்துக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

கிளிநொச்சி வைபவம் ஒன்றில் பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு கூடுதல் நிதி வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

வடக்கு மாகாணசபைக்கும் போதிய நிதி ஒதுக்கப்பட்டு வருவதாகவும், அதனை அந்த மாகாண சபை முறையாக பயன்படுத்த தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

அத்துடன், வைக்கோல் பட்டடை நாய் போன்று மக்களுக்கு உரிய நலத்திட்டங்களை தாங்களும் செய்யாமல், அரசையும் செய்ய விடாமல் வடக்கு மாகாண அரசு தடுப்பதாக குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், ஜனாதிபதியின் மேற்படி பேச்சுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களையும்,  தமிழ் கலாச்சாரத்தையும் அழிக்கும் அவரோடு எவ்வாறு கைகோர்த்து செயல்பட முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

அனைத்து சமுதாயத்தினரையும் சமமாக பாவிக்க தவறும் ஜனாதிபதி, அனைவரும் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்று கூறுவது நகைப்புக்குரியது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

 

SHARE