தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் நீண்ட நெடும் பயணத்தில் தமிழினம் கொடுத்த விலை மிகப்பெரியது.
விடுதலைப்பசிக்கு முன் சோற்றுப்பசி பெரிதல்ல என போராடிய இனத்திற்கு தேடற்கரிய தலைவன் கிடைத்தான். விடுதலைப்பயணம் வீச்சுக்கொண்டது.
கெரிலாப்படையணி மரபு வழி இராணுவமாய் பரிணமித்தது. வீரர்களின் வீரம் ,மக்களின் தியாகம், புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பு என விடுதலையின் விளிம்பில் நின்ற இனம் காட்டிக்கொடுப்பு, துரோக்தனம், வல்லரசுகளின் சதி என பல்வேறுகாரணங்களால் முள்ளிவாய்காலில் முடிவடைந்தது.
முள்ளிவாய்காலில் மே18 இல் விடுதலை வீரர்களின் துப்பாக்கிகள் மௌனித்தன. இறுதி யுத்ததில் மனிதப்பேர்அவலம் நடத்தது. அந்த கோர நாட்களின் வலிகள் தமிழினத்தை மட்டுமல்ல உலகில் மனிதம் உள்ள அனைவரையும் உறையவைத்தது.
மே 18 ஈழத்தில் குறிப்பாக வன்னி வாழ் மக்களின் மிகத்துயரமான நாள். மாவீரர் நாள், சுனாமி நினைவு நாளில் உறவுகள் ஒன்றுகூடி விளக்கேற்றி கண்ணீரால் தம் கவலைகளை கரைப்பார்கள் . அதே போன்றே மே 18 இலும் முள்ளிவாய்காலில் உறவுகள் ஒன்று கூடி ஒப்பாரிவைக்கும் நாளை தமிழ்தேசியக்கூட்டமைப்பு களியாட்ட விழாவாக்கி தமிழ்தேசிய உணர்வை சிதைக்க முனைகின்றது. குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா மேற்கொள்கின்றார்.
மாவை சேனாதிராஜா தமிழினத்தின் ஒரு கோடரிக் காம்பு. விடுதலைப் போராட்ட ஆரம்ப காலங்களில் தமிழின பற்றாளராக செயற்பட்டது உண்மைதான். பின்னர் சிறீலங்கா அரசாங்கத்திடம் விலைபோகிவிட்டார். சிறீலங்கா புலனாய்வு அமைப்பின் முகவராக அவரது செயற்பாடு அமைந்திருந்தது.
உலக அரசியல் ஒழுங்குக்கு அமைவாக தமிழீழ விடுதலைப்புலிகள் அரசியல் நீரோட்டத்தில் கலக்க வேண்டிய தேவையினால் மறப்போம்! மன்னிப்போம்! என்ற அடிப்படையில் தமிழ் தலைவர்கள் என தம்மைகூறிக்கொள்ளும் அரசியல்வாதிகளை தமிழ்தேசியக் கூட்டமைப்பு எனக் ஒழுங்குபடுத்திய விடயங்கள் நாம் அறிந்ததே.
குறிப்பாக மாவை சேனாதிராஜா ரணிலைப் போல் ஒரு தந்திரசாலி. இறுதியுத்தத்தில் விடுதலைப்புலிகள் சரண்அடைய முற்பட்டவேளை அதாவது அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் உள்ளிட்ட குழுவினரை சரணடைதலுக்கு மத்தியஸ்தம் வகிக்காமல் தொலைபேசியை அணைத்து விட்டு ஏ.சி அறைகளில் இருந்த கபடத்தனத்தை மறப்பதா?
இன்று முள்ளிவாக்கால் உணர்வை மூழ்கடிக்க செய்யும் முயற்சியை மன்னிப்பதா?
அக்கினிச்சிறகுகளுக்குள் அடைபட்டுள்ள இனத்திற்கு“ அக்கினி சிறகுகள்” என ஒர் அமைப்பை உருவாக்கி உதைபந்தாட்ட போட்டி என எம் மக்களை உதைக்கிறார் மாவை.
“அக்கினிச்சிறகுகள்“ அணி தமிழ்தேசப்பற்று அணி என காட்டிக்கொள்ள இன்று இவ் அணியைச்சேர்தவர்களை கிளிநொச்சியில் பயங்கரவாத புலனாய்வு அமைப்பு(ரீ.ஜ.டீ) விசாரித்தாக ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் சிறீலங்கா புலனாய்வின் மூத்த முகவர் மாவை.
இன்று (24) ஊடகவியலாளர்களை சந்தித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (சுரேஷ் அணி) இன் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகவியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது உண்மையில் போராடும் மக்களிற்காக குரல் கொடுப்பதும் அவர்களிற்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதும் தான் அந்த மக்கள் பிரதிநிதிகளின்; கடமையாகும்.அதனை விடுத்து மக்களினை மிரட்டுவதல்ல.
உண்மையில் மைத்திரி அரசிற்கும் மஹிந்த அரசிற்கும் என்ன வேறுபாடு என்பதை மாவை போன்றவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.மஹிந்த வந்தால் தமிழ் மக்களிற்கு ஏதும் இனி நடக்க எஞ்சியிருக்கவில்லை.சிலவேளை மாவை போன்றவர்கள் வகித்துவரும் பதவிகள் பறிபோகலாம்.
இதே போன்றே மிகப்பெரியதொரு விடுதலைப்போராட்டத்தின் முடிவினில் இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டும் காணாமல் போயுமுள்ள நிலையினில் அவர்களது உறவுகளுடன் இணைந்து துன்பத்தினில் பங்கெடுப்பதே பிரதானமாகும்.இதை விடுத்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பேரினில் நடத்தப்படும் உதைபந்தாட்ட களியாட்ட போட்டியினில் பங்கெடுத்து அதற்கும் மாவை சேனாதிராசா விளக்கமளித்துள்ளார்.
இவ்விளையாட்டுப்போட்டியின் பின்னணியினில் யாருள்ளார் என்பதனை நான் அறியேன்.உண்மையினில் மாவையின் மூளை கறள்கட்டிவிட்டதாவென்ற சந்தேகம் அவரது அண்மைய உரைகள் மூலம் எழுவதாகவும் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.
அண்மையில் விடுவிக்கப்பட்ட மாவிட்டபுரத்தில் மாவை சேனாதிராசா சுமார் மூன்றரை கோடி மதிப்பிலான பங்களா கட்டுமானத்தை வேகமாக மேற்கொண்டுவருகின்றார். ஏற்கனவே தமிழகம் மற்றும் கேரளாவிலுள்ள பங்களாக்களிற்கு மேலாக தற்போது மாவிட்டபுரத்தில் தனது கனவு இல்லத்தினை மாவை வேக வேகமாக கட்டிவருகின்றார்.
முள்ளிவாய்காலின் நினைவுகளில் நாம் நனையும் போது மாவை மாவிட்டபுர கனவு இல்லத்தை நோக்கி சிறகடித்துக் கொண்டிருப்பார். அவரது மாளிகையின் பெறுமதிக்கு எம் இனத்தில் உயிர்கள் விலையாகியது பலருக்கு புரியாத விடயம்.
தமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக விடுதலை புலிகளின் உயர்மட்டத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. வன்னி நிலப்பரப்பை முற்று முழுதாக சுற்றிவளைத்து தாக்குவதற்காக தமிழீழ தேசிய தலைவர் தாக்குதல் திட்டத்தை வகுத்து தளபதிகளுக்கு தலைவர் அத்திட்டத்தை விளங்கப்படுத்திய பின்பு தளபதிகள் விடுதலை புலிகளின் சிறப்பு படையணி போராளிகளுடன் அத் தாக்குதல் திட்டம் பற்றி விவரித்து கொண்டிருக்கும் போது. இந்திய சிங்கள படைகளுடன் போர் அந்த இடத்திலையே வெடித்துள்ளது.
ஆனந்தபுரத்தில் ஒன்று கூடிய தளபதிகள், போராளிகள் வன்னியை சுற்றி வளைத்து பாரியதொரு தாக்குதல் திட்டத்தை போராளிகளுக்கு விளங்கப்படுத்தி கொண்டிருக்கும் வேளையில் இந்திய, சிங்கள ஓநாய்கள் தளபதிகள் போராளிகள் ஒன்று கூடிய இடத்தை சட்லைட் மூலம் தெரிந்து கொண்டு அந்த இடத்தை நோக்கி வான்வெளி தாக்குதல்கள் உட்பட தரைவெளி தாக்குதல்களையும் ஆரம்பித்தார்கள். மூன்று முறை முன்னேறி வந்த இந்திய சிங்கள ஓநாய் படைகளை விடுதலை புலிகளின் சிறப்பு படையணி போராளிகள் களமாடி அந்த இடத்தில் இருந்து கிட்ட தட்ட 10 கிலோமீற்றர் வரை பின் நகர்த்தினார்கள்.
வான்வெளி தாக்குதல்கள், செல் குண்டு தாகுதல்களிற்கு மத்தியிலும் ஓநாய் படைகளுக்கு எதிராக பாரியதொரு முறியடிப்பு சமரை மேற்கொண்டு பல போராளிகளை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்திருந்தார்கள் விடுதலைப்புலிகளின் சிறப்பு படையணி போராளிகள். மூன்று முறை முன்னேறி வந்த இந்திய, சிங்கள ஓநாய் படைகளை திரத்தி ஓட ஓட விரட்டி அடித்த விடுதலை புலிகளின் சிறப்பு படையணி போராளிகள் மீது ஒரு சிறு நேர இடைவெளியின் பின்பு இந்திய, சிங்கள படைகள் விடுதலை புலிகளுடன் நேருக்கு, நேர் மோதி வெல்ல முடியாது என்கிற உண்மையை உணர்ந்த பின்பு தங்கள் உண்மையான சுய ரூபத்தை காட்டியுள்ளார்கள்.
அதாவது விடுதலை புலிகளின் சிறப்பு படையணி போராளிகள் மீது இந்த உலகத்தில் தடை செய்யப்பட்ட குண்டுகளான நச்சு வாயு குண்டுகளை வீசி இல்லாது அழித்தொழித்தார்கள் இந்திய,சிங்கள் கோழை படைகள். இந்த களத்தில் கிட்ட தட்ட விடுதலை புலிகளின் தாக்குதலில் இந்திய,சிங்கள கோழை படைகள் ஐய்யாயிரத்திற்கு மேலான கோழைகள் சாவடைந்துள்ளதாக அன்று விடுதலை புலிகளின் ஊடாக அமைச்சு தெரிவித்திருந்தது. இந்த சமர்க்களத்தின் பின்பு விடுதலை புலிகளின் இழப்பானது பல போராளிகள் உட்பட தளபதிகள் என பல பேரை இழந்து இருந்தார்கள்.
பல ஆயிரக்கணக்கான மக்கள் தினம் தினம் இறந்து கொண்டிருக்கையில் ஒரு பக்கம் போராளிகள் சிங்கள் இராணுவம் மீது தாக்குதல் நடத்தி கொண்டிருக்க இன்னொரு பக்கம் மருத்துவ போராளிகள், தமிழீழ காவல்துறை காயம்பட்ட மக்களை காப்பாற்றி கொண்டிருந்தார்கள். ஆனால் புலனாய்வு பிரிவு படை போராளிகள் மட்டும் தலைவரை காப்பாற்றும் நோக்கோடு பல திட்டங்களை புலனாய்வு பிரிவு தளபதிகளுடன் திட்டத்தை வகுத்து கொண்டிருந்தார்கள்.
ஆனால் தலைவர் இதற்கு மறுப்பு பல தடவை தெரிவித்திருந்த போதும் அதை தளபதிகள் ஏற்று கொள்ளவில்லை பல வாக்குவாதங்களிற்கு அப்பால் தான் தமிழீழ தேசிய தலைவருக்கு மயக்க மருந்து கொடுத்தே மே 10ம் திகதிக்கு முன்னமே தமிழீழ தேசிய தலைவரை வன்னியிலிருந்து கடல் மூலமாக பல நூறு புலனாய்வு பிரிவு போராளிகளுடன் கரும்புலி படகுகள் கடலில் சீறி பாய்ந்து கொண்டு இருக்கையில் கடலில் இந்திய, சிங்கள கடல் படைகள் கடலில் சுற்றி திரிந்த போதும் அவர்களின் கண்ணில் மண்ணை தூவி விட்டு தமிழீழ தேசிய தலைவரை வேறு ஒரு நாட்டிற்கு கடல் மூலமாக கடத்தி கொண்டு சென்றுள்ளார்கள்.
தேசிய தலைவரின் கட்டளைகளுக்கு ஏற்ப இறுதி வரை பல ஆயிரம் போராளிகள் சிங்கள இராணுவத்திற்கு எதிராக போராடி மடிந்தார்கள். இவர்களின் கனவை நிறைவேற்றுவது உலகத்தில் வாழும் ஒவ்வொரு தமிழனின் கடமை ஆகும். விடுதலை புலிகளின் வேவு படையணி போராளிகளால் உயிரோடு பிடிக்கப்பட்ட இந்திய இராணுவம்.
விடுதலை புலிகள் சிங்கள படைகளின் ஒரு இராணுவத்தளம் மீது தாக்குதல் தொடுக்க போகின்றார்கள் என்றால் அந்த இராணுவ தளத்தை ஒரு தடவைக்கு பல தடவை அந்த இராணுவ தளத்தினுள் சென்று அங்கே எந்த இடத்தில் எந்த ஆயுதம் இருக்கிறது அந்த இரணுவத்தளத்தில் எத்தனை இராணுவ வீரர்கள் இருக்கிறார்கள். அந்த இராணுவ தளத்தின் மீது தாக்குதல் தொடுத்தால் வேறு இராணுவ தளத்தில் இருந்து இராணுவம் எவ்வளவு நேரத்தில் எவ்வளவு இராணுவம் தாக்குதல் நடத்த போகும் தளம் மீது வருவார்கள் என்ற சகல கணிப்பையும் எடுத்து செல்வார்கள் தாக்குதல் நடத்த போகும் தளபதிகள், போராளிகளிடம்.
2006ம் ஆண்டு சிங்கள படைகள் வன்னி மீதான தாக்குதலை ஆரம்ப்பித்திருந்தார்கள். விடுதலை புலிகளின் முக்கியமான ஒரு சில இடங்களும் சிங்கள இராணுவத்தின் கைகளில் வீழ்ந்தது. அந்த இடங்களை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி முடிவு எடுக்கப்படுகிறது. வேவு படை போராளிகளும் ஆயத்தமாகிறார்கள் சிங்களம் புதிது புதிதாக அமைத்து இருக்கும் இராணுவம் தளத்தின் மீதான வேவு சம்மந்தப்பட்ட விடயங்களை எடுக்க சிங்கள இராணுவ தளத்தினுள் ஊடுருவுகிறார்கள்.
சிங்களம் புதிது புதிதாக அமைத்திருந்த இராணுவ தளத்தினுள் ஊடுருவிருந்த வேவு படை போராளிகள் அங்கு நின்ற ஒரு இராணுவத்தை உயிருடன் பிடித்து வருகிறர்கள். சிங்கத்தின் குகைக்குள் சென்ற புலிகள் அங்கு நின்ற இராணுவத்தையே உயிருடன் பிடித்து காடுகள் வழியாக கொண்டு செல்கிறார்கள் தளபதிகளிடம். அதிர்ச்சி அடைந்த வேவு படை போராளிகள் அவர்களிடம் சிக்கியது இந்திய இராணுவம். இந்திய இராணுவம் சிங்கள் இராணுவ உடை அணிந்து சிங்கள இராணுவ களமுனையில் நின்ற போது வேவு படையணி போராளிகளால் கடத்தி செல்லப்பட்டார்.
புலனாய்வு போராளிகளால் விசாரிக்கப்பட்ட போது புலிகளுக்கும், சிங்கள இராணுவத்திற்கும் சண்டைகள் ஆரம்பமாகி ஒரு சில மாதங்களில் மன்மோகன்சிங் இலங்கை வந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது மன்மோகன்சிங்குடன் வந்த ஆயிரக்கணக்கான இந்திய கோழை படைகள் மன்மோகன்சிங் போகும் போது அவருடன் திரும்ப செல்லவில்லை என்றும் அவருடன் வந்த ஆயிரக்கணக்கான இராணுவமும் சிங்கள படைகளுடன் விடுதலை புலிகளுடன் மோதுவதற்கு களமுனைக்கு அனுப்பப்பட்டதாக அந்த இந்திய இராணுவம் விடுதலை புலிகளால் விசாரிக்கப்பட்ட புலனாய்வு பிரிவு படை போராளிகளுக்கு தெரிவித்துள்ளார்…
தமிழீழத்தில் களத்தில் போராடிய தளபதிகள் , போராளிகள் என பல பேர் தற்போது புலம்பெயர் நாடுகளில் இலை மறை காயாக வாழ்ந்து வருகிறார்கள் தமிழீழ தேசிய தலைவரின் கட்டளையை எதிர் பார்த்து கொண்டு. நாம் ஒரு உன்னத இலட்சிய பாதையில் பயணித்து கொண்டிருக்கிறோம். அதை சென்றடையும் பாதை மாறலாமே தவிர நாம் செல்லும் இலக்கு மாறாது.