
காலி மாவட்ட அமைப்பாளர்களுடனான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொன்சேகா இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியாளர் தற்போதே வன்முறைகளை ஆரம்பித்துள்ளார்.
அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போதே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் இவ்வாறான சம்பவங்கள் வியாபிக்கத் தொடங்கியுள்ளது. இந்த விடயம் குறித்து மக்கள் தெளிவுடன் இருக்க வேண்டும்.
ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அடக்குமுறை அரசியவாதிகளை மக்கள் நிராகரிக்க வேண்டும்.
அவர்களுக்கு எந்தவித ஒத்துழைப்புக்களையும் மக்கள் வழங்கக் கூடாது என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.