சூர்யாவுடன் மீண்டும் இணையும் ஹரி!

414

தாமிரபரணி படத்தையடுத்து விஷாலை வைத்து ஹரி இயக்கியுள்ள படம் பூஜை. விஷாலுடன் ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்த படத்தையடுத்து மீண்டும் சூர்யாவை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கப்போவதாக டைரக்டர் ஹரி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், இந்த படத்தையடுத்து மீண்டும் சூர்யாவை இயக்குகிறேன். அவரிடம் இரண்டு ஆக்சன் கதைகள் சொல்லியிருக்கிறேன். இரண்டு கதைகளுமே எனக்கு பிடித்த கதைகள்தான். ஆனால் அந்த இரண்டில் சூர்யாவுக்கு எந்த கதை பிடிக்கிறதோ அதைதான் அடுத்து இயக்குவேன்.

மேலும், அடுத்து நான் சூர்யாவுடன் இணைவதால், அடுத்து இயக்குவது சிங்கம்-3 யா என்று கேட்கிறார்கள். ஆனால் இது வேறுமாதிரியான கதை. அதனால் இது சிங்கம் படத்தின் தொடர்ச்சியா? இல்லையா? என்பதை இப்போது எதுவும் சொல்ல முடியாது. அடுத்தபடியாக அந்த ஸ்கிரிப்டுக்காக உட்காரும்போது கதையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அது சிங்கம்-3 படமா? இல்லை வேறு படமா? என்பது தெரியும் என்கிறார்.

 

SHARE