தீபாவளிக்கு விஜய்யின் கத்தி வரலேன்னா ஜெயம் ரவி வருவாராம்!

394

விஜய்யின் கத்தி தீபாவளிக்கு கண்டிப்பாக திரைக்கு வருகிறது என்று அந்த படநிறுவனத்திடமிருந்தே உறுதியான தகவல்கள் வெளியான பிறகும்கூட, ஒருவேளை வராமலும போகலாம் என்றொரு வதந்தி கோடம்பாக்கத்தில் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது.

இதற்கிடையே, சமீபத்தில் சென்சாருக்கும் படத்தை அனுப்பி யு சான்றிதழும் வாங்கி விட்டனர். ஆனபோதும், இன்னமும் படப்பிடிபபு நடப்பதாகவும், பின்னணி இசைக்கோர்ப்பு வேலைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் கத்தி வட்டாரத்தகவல் தெரிவிக்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கத்தி ஆடியோ விழாவுக்கு பிறகு அமைதி காத்து வந்த கத்திக்கு எதிரான தமிழ் அமைப்புகள் தற்போது மீண்டும் விழித்துள்ளன. படத்தை வெளியிடக்கூடாது என்று தியேட்டர்காரர்களிடம் முறையிடுவோம். அதையும் மீறி வெளியிட்டால் தியேட்டர்களுக்கு முன்பு போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், தீபாவளிக்கு கத்தி, பூஜை படங்கள் வருவதால் இந்த நேரத்தில் ஜெயம்ரவி நடித்துள்ள பூலோகத்தை இறக்கி விட வேண்டாம் என்று பின்வாங்கியிருந்த ஆஸ்கர் பிலிம்ஸ் தற்போது, ஒருவேளை கத்தி வரவில்லை என்றால், பூலோகத்தை ரிலீஸ் செய்து விட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறதாம்.

ஜெயம்ரவி இரட்டை வேடத்தில் நடித்துள்ள பூலோகம் படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கிறார். இந்த படம் ரிலீசுக்கு ரெடியாகி கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு மேலாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE