கூட்டமைப்பு தமிழீழத்தைக் கோரவில்லை: மஹிந்த ராஜபக்ச நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டும்- சுமந்திரன் எம்.பி

544
M.A.Sumanthiran-300-newsதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டை பிரிப்பதற்கு எவ்வித தயார் நிலைகளையும் மேற்கொள்ளவில்லை. எனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரியுள்ளார்.

தமிழீழத்தை கைவிட்டால் தாம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை கைவிடுவதாக ஜனாதிபதி கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று கிளிநொச்சியில் வைத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள சுமந்திரன்,

கூட்டமைப்பை பொறுத்தவரை அது அதிகார பரலாக்கலை வலியுறுத்தி வருகிறது. அதுவும் ஐக்கிய இலங்கைக்குள் அது இடம்பெற வேண்டும் என்று அது கோருகிறது.

அது ஒருபோதும் தனிநாட்டை கோரவில்லை என்று சுமந்திரன் குறிப்பிட்டார்.

Mahinda Sampanthan Sumanthiran

 

 

SHARE