ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் 7,000 பெண்களை பாலியல் அடிமையாக்கியுள்ளதாக ஐ.நா தகவல்
407
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் யாஸிதி இனப் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் அடிமைகளாக்கி விற்பனை செய்கின்றனர்.ஈராக் மற்றும் சிரியாவின் பல பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள், அங்குள்ள மலைப்பகுதிகளில் வாழும் சிறுபான்மையினமான யாஸிதி இனப்பெண்களை கடத்தி சென்றுள்ளனர்.
மேலும் தீவிரவாதிகளிடமிருந்து தப்பி சிஞ்சார் மலைப்பகுதியில் குடிபெயர்ந்த யாஸிதி பெண்கள் மற்றும் குழந்தைகள் சமீபத்தில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சிறைப்பிடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான யாஸிதி இனத்தைச் சேர்ந்த பெண்களையும், குழந்தைகளையும் தீவிரவாதிகள் முதலில் தங்களுக்கு பங்கு போட்டு கொண்டு தொடர்ந்து கற்பழிப்புகளை அரங்கேற்றி வந்துள்ளனர்.
இதனையடுத்து தங்களது ஆசை தணிந்த பின் அவர்கள் அனைவரையும் விபச்சார சந்தையில் விலைபேசி அதிக விலைக்கு விற்றுவிடுகின்றனர். இதுவரை தீவிரவாதிகள் 7,000 பெண்களை பாலியல் அடிமையாக்கியுள்ளதாக ஐ.நா தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.