இதற்கான விளக்கம் மற்றும் அறிவித்தலை சட்டமா அதிபர் அலுவலகம் மூலம் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தல் குறித்து ஜனநாயகக் கட்சியின் செயலாளர் சுனில் மானவடுவுக்கு சற்று முன்னர் தேர்தல் ஆணையாளர் தெரியப்படுத்தியுள்ளார்.
சரத் பொன்சேகாவுக்கு மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வெள்ளைக் கொடி சம்பவம் தொடர்பான வழக்கு மற்றும் இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பவற்றின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவித்தல் கிடைத்தவுடன் சரத் பொன்சேகா உடனடியாக தனக்கு நெருக்கமானவர்களுடன் முக்கிய ஆலோசனையொன்றில் தற்போது ஈடுபட்டுள்ளார்.
பெரும்பாலும் நாளை அவர் இது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, இது தொடர்பில் விளக்கமளிக்கக் கூடும் என்று அவரது கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான வழக்கில் மூன்று வருட சிறைத்தண்டனையும், அதற்கு முன்னர் இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் அவருக்கு 30 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தீர்ப்புகளின் காரணமாக சுமார் மூன்று வருடங்கள் சரத் பொன்சேகா சிறைத்தண்டனையை அனுபவித்திருந்தார். எனினும் அவரது சிறைத்தண்டனை முடிவடைவதற்கு இரண்டு மாதங்கள் இருக்கையில் அரசியலமைப்பின் 34வது பிரிவின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பொதுமன்னிப்பின் கீழ் சரத் பொன்சேகாவை விடுதலை செய்திருந்தார்.