நடிகர் மகேஷ்பாபுவுடன் நடிக்கும் ரஜினி!

384

rajinikanth-mahesh-babu004தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து புது படத்தில் ரஜினி நடிக்கிறார். இந்தி, படங்களில் இரண்டு கதாநாயகர்கள் இணைந்து நடிப்பது வழக்கமாக இருக்கிறது. மலையாள படங்களிலும் சேர்ந்து நடிக்கிறார்கள். ஆனால் தமிழ், தெலுங்கு படங்களில் ஒன்றாக நடிக்க தயக்கம் காட்டுகிறார்கள்.

முன்னணி ஹீரோக்களை ஒரே படத்தில் நடிக்க வைக்க கதைகளுடன் பல இயக்குனர்கள் தயாராக உள்ளனர். ரஜினியும், கமலும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. படத்துக்கு ஆகும் செலவு, சம்பளம் போன்றவற்றை காரணம் காட்டி நடிக்க மறுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுடன் நடிக்க ரஜினி சம்மதித்து உள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளரும் மகேஷ்பாபுவின் உறவினருமான சூரிய நாராயாணராவ் இரண்டு கதாநாயகர்களை வைத்து படம் எடுக்கிறார். இப்படத்துக்கு மகேஷ்பாபு ஏற்கனவே தேர்வாகியுள்ளார். அவருடன் இன்னொரு நாயகனாக ரஜினியை நடிக்க வைக்க வேண்டும் என்று விருப்பப்பட்டார்.

லிங்கா, படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு நேரில் சென்று ரஜினியை சந்தித்து இது குறித்து பேசினார். ரஜினியும் இப்படத்தில் நடிக்க சம்மதித்து விட்டார். இதனை சூரியநாராயணராவே தெரிவித்தார். லிங்கா படத்தில் ரஜினி பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த படத்தை முடித்து விட்டு மகேஷ்பாபு படத்துக்கு செல்கிறார்.

 

SHARE