5ம் கட்ட ஈழப்போர் நெடுங்கேணி காட்டில் ஆரம்பம் – முறியடித்த இராணுவ புலனாய்வு

897

தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில் வெவ்வேறான பரிணாம வடிவில் விடுதலைப்புலிகளின் போராட்டங்கள் உருவெடுத்தன. அந்தவகையில் 1983 தொடக்கம் 1989 ஆம் ஆண்டுவரை 1ம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானது. ஆரம்பத்தில் கொரில்லாப்போர் நடவடிக்கையாகவே ஆரம்பித்தது. அக்காலகட்டத்தில் வாகனங்களுக்குப் பதிலாக துவிச்சக்கரவண்டிகளை பயன்படுத்தினர். இப்போரானது காடுகளிலும், வீடுகளிலும் தாக்குதல் நடத்தும் போர்பொறிமுறையாக இருந்தது.

விடுதலைப்புலிகளின் 2ம் கட்ட ஈழப்போரானது 1992-1994 வரை. தரைமார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் இவர்களுடைய படைநடவடிக்கைகள் வலுப் பெற்றிருந்தன. 3ம் கட்ட ஈழப்போரானது 1995-2001 வரையான காலப்பகுதியாகும். நிர்வாக கட்டமைப்புக்களுடன் வலிந்த தாக்குதல்களை தொடுக்கும் ஒரு அமைப்பாக பாரிய ஆளணித்துவங்களைக் கொண்ட படையாக பரிணாமம் பெற்றது. 4ம் கட்ட ஈழப்போரானது 2003-2009 வரை இடம்பெற்றது. இதில் விடுதலைப்புலிகளின் முப்படைகளும் பயன்படுத்தப்பட்டன. அதாவது கடல், வான், தரை இந்த 4ம் கட்ட ஈழப்போரின்போது போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், இலங்கை இராணுவத்தினர் பல்வேறு நாடுகளின் உதவிகளைப்பெற்று விடுதலைப்புலிகளை கடல், வான் மார்க்கமாக முறியடிக்கும் நோக்கங்களைக் முன்னெடுத்து ஈழப்போரை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

download (1)

இவ்வாறான நிலைமை இருந்துவந்தபொழுது, விடுத லைப்புலிகள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டுவிட்டார்கள். ஒருசிலர் புனர்வாழ்வழிக்கப்பட்டு தத்தம் பணி களை மேற்கொண்டுவருகின்றனர். மற்றுமொரு போரானது விடுதலைப்புலிகளினால் நடத்தப்படும் என்று இராணுவத்தரப்பினரும், அரசியல் வாதிகளும் எதிர்பார்க்காத விடயமாகும். அதற்கமையவே 2009-2014 ஆம் ஆண்டு ;காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் புலனாய்வு நடடிக்கைகள் தொடர்ச்சியாக இருந்தவண்ணமே இருந்தன. இவற்றை சரிசெய்துவந்த இலங்கையரசு நாடுகடந்த தமிழீழம் அதேபோன்று 16 விடுதலைப்புலிகளின் சர்வதேச அமைப்புக்கள் என்பவற்றை கட்டுப்பாட்டு நிலைக்கு கொண்டுவர முடியாத நிலையி லேயே இருந்தது. இவ்வாறிருக்கையில் விடுதலைப்புலிகளின் அடுத்த நிலை யில் உள்ள பலர் வெளிநாடுகளுக்கு கடல்மார்க்கமாக தப்பிச்சென்றனர். அவர்கள் தற்பொழுது அங்கிருந்துகொண்டு இங்குவருவது 5ம் கட்ட ஈழப்போரை கொரில்லா போரின் மூலம் தேவியன், கோபி, அப்பன் ஆகி யோரின் நெறிப்படுத்தலில் நெடுங்கேணி காட்டுப்பகுதியில் ஆரம்பித்து வைக்கவே.

5ம் கட்ட ஈழப்போரை எப்படி ஆரம்பிப்பது, அதனுடைய பின்னணியை பார்க்கின்றபொழுது விடுதலைப்புலிகளின் போராட்டம் நெடுங்கேணிப் பகுதியி லேயே வெடித்தது. கொரில்லாப்போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காலப் பகுதியில் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் போது நூற்றுக்கு மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர். இருப்பினும் பொலிஸ் ஊடகப்பேச்சாளரின் கருத்துப்படி, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப உதவி செய்தனர் எனக் கூறப்படும் 65 பேர் கடந்த 2 மாதங்களில் கைது செய்யப்பட்டனர்என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்திருக்கிறார். வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இவர்கள் கைது செய்யப்பட்டனர் எனவும் அதில் ஐவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். கைது செய்யப்பட்டுள்ள 10 பெண்களில் எண்மர் பூஸா முகாமிலும் இருவர் வவுனியா தடுப்பு முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவி யலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை புலிகள் இல்லை என்கிறார் பொலிஸ்மா அதிபர் இருக்கின்றார் என்கிறார் பாதுகாப்புச் செய லர். ஜெனிவா சர்வதேச விசாரணை மற்றும் நாட்டுக்குள் அரசாங்கம் மீது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விரக்தி போன்றவற்றால், ராஜபக்ஷ அரசாங்கம் குழப்பமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அரசாங்கம் விழுந்துள்ள பாதாளத்தில் இருந்து மீள ஒரே வழி மீண்டும் விடுத லைப் புலிகளை உருவாக்குவதே என அரசாங்கம் எண்ணி வருகிறது. இந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள நிலை மையில் இருந்து கடந்து செல்லவும், எதிராளிகளை கொலை செய்யவும் மக்களை ஒடுக்கி அடக்கவும் விடுதலைப் புலிகள் அமைப்பு இருக்கின்றது என்று காட்டும் அத்தியாவசியம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற புலனாய்வுப் பிரிவின் மீளாய்வுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் நாட்டில் இல்லை என பொலிஸார் கூறியிருந்தனர். ஆனால் விடுதலைப்புலிகள் நாட்டில் மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அதே கூட்டத்தில் கூறியுள்ளதாக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற புலனாய்வுப் பிரிவுகளின் மீளாய்வுக் கூட்டத்தில் முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர், அதிரடிப்படை அதிகாரிகள் என உயர் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அத்துடன் ஜனாதிபதி, பிர தமர், சபாநாயகர், பாதுகாப்புச் செயலா ளர் ஆகியோரின் பாதுகாப்பு பிரிவுகளை ஒன்றிணைத்து ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய புலனாய்வுப் பிரிவான உயர் புலனாய்வுப் பிரிவு என அழைக்கப்படும் பிரிவின் அதி காரிகளும் இதில் கலந்து கொண்டனர். கூட்டம் ஆரம்பிக்கும் முன்னர் அதாவது, கோத்தபாய ராஜபக்ஷ கூட்டத்திற்கு வருவதற்கு முன்னர், மேற்படி உயர் பாதுகாப்பு பிரிவினர் சிவப்பு நிற முத்திரை பதிக்கப்பட்ட ஆவணம் ஒன்றை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு விநியோகித்தனர்.
அதில் சில முக்கிய விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
1: பதுளை, ஹட்டன், நோர்வூட் தோட்டங்களில் விடுதலைப்புலிகள் புதிதாக உறுப்பினர்களை சேர்த்து மிகவும் இரகசியமான முறையில் ஒன்றிணைந்து வருகின்றனர்.
2: விடுதலை செய்யப்பட்ட மூன்று விடுதலைப்புலி உறுப்பினர்கள் பதுளை ஸ்பிரிங்வெளி தோட்டத்தில் இளைஞர்களை இயக்கத்தில் சேர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

3: பதுளை மாவட்டத்தில் எதிர்காலத்தில் மிகவும் ஆபத்தான, அபாயமான நிலைமை ஏற்படும் எனவும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்த மிகவும் இரகசியமான தகவல்கள் என்ற இந்த ஆவணம் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் விசேட குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.ஆவணம் விநியோகிக்கப்பட்ட பின்னர், கூட்டத்திற்கு வந்த பாதுகாப்புச் செயலா ளர், ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து உரையாற்றியதுடன் புலனாய்வுப் பிரிவுகளின் சகல பணிப்பாளர்களும் இந்த விடயங்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அதேவேளை கூட்டத்தில் உரையாற்றிய பொலிஸ் மா அதிபர் என். கே. இலங்ககோன், பதுளையில் பொலி ஸார் இரவு பகலாக பாதுகாப்பு பணி களில் ஈடுபடுவதாகவும், பாதுகாப்பு ரோந்து பணிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் பதுளையில் இப்படியான ஆபத்தான நிலைமை இருப்பது பற்றிய தகவல்கள் தமக்கு கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ்மா அதிபர் இவ்வாறு கூறியதை அடுத்து, கடும் கோபமுற்ற பாதுகாப்புச் செயலாளர், தனக்கு அது பற்றிய காரணங்களை அறிந்து கொள்ளும் தேவையில்லை எனவும் தான் வழங்கிய அறிக்கையை பின்பற்றுமாறும் கூறியுள்ளார். பொலிஸார் அலுவலகத்தில் இருந்து தகவல்களை திரட்டுவது போல் இராணுவத்தினர் தகவல்களை திரட்டுவதில்லை. அவர்கள் களத்தில் இறங்கி தகவல்களை திரட்டுவதாகவும் பாதுகாப்புச் செயலா ளர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய செயலர், அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் விரைவில் இலங்கைக்கு வரவுள்ளனர்.

அவர்கள் எமது துன்ப, துயரங்களை அறியவரப்போவதில்லை. விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு ஒக்சிஜன் கொடுக்கவே அவர்கள் வருகின்றனர். இதனால் இராணு வப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கும் தகவல்களை பின்பற்றி செயற்படுங்கள். இன்னும் இரண்டு வாரங்களில் பதுளை நிலைமைகளை சாட்சியங்களுடன் அறிந்து கொள்ள முடியும் எனவும் கோத்தபாய கூறியுள்ளார். எவ்வாறாயினும் புலனாய்வுப் பிரிவுகளின் மீளாய்வுக் கூட்டத்தில் விநியோகிக்கப்பட்ட ரகசிய மான புலனாய்வுத் தகவல்கள் எவ்வாறு திரட்டப்பட்டன என்ற விபரங்கள் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை என வும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறுதெரிவித்த ஓரிருநாட்களுக்குள் வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள வெடிவைத்தகல் கிராமத்தில் இடம் பெற்ற மோதலில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டவர்களின் சடலங்கள் பதவியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுவிடுதலைப்புலிகள் தான் என இலங்கையரசு ஒத்துக்கொண்டுள்ளது.

இதனை அடிப்படையாக்கொண்டே விடுதலைப்புலிகள் 5ம் கட்ட ஈழப்போரை நெடுங்கேணிப் பகுதியில் ஆரம்பித்தனர் என்று கூறமுடியும். விடுதலைப்புலிகள் அங்கு சுட்டுக்கொல்லப்படவில்லை என்றால் 5ம் கட்ட ஈழப்போர் ஆரம்பிக்கப்படவில்லை எனலாம். அப்பன், தேவியன் இருவரும் விடுதலைப்புலிகளின் ஆரம்ப முன்னிலை வீரர்களாவர். அப்பன் என்பவர் விடுதலைப்புலிகளின் புலனாய்வைச் சேர்ந்தவர். இவர் புலனாய்வாளர் என்று கூறப்படுகிறது. தேவியன் என்பவர் விடுதலைப்புலிகளின் விமானியும் கரும்புலியுமாவார். இது உறுதிப்படுத்தப்பட்ட தகவலாகும். இதனைவைத்து பார்க்கின்றபொழுது, 5ம் கட்ட போரானது ஆரம்பிக்கவில்லை என இராணுவமோ, ஏனைய தரப்பினரோ கூறமுடியாது. அல்லாது போனால் இராணுவத்தரப்பினர் இதனை பகிரங்கப்படுத்தாமல் மழுங்கடித்திருக்கவேண்டும். முப்படையும் இணைந்து இந்த விடுதலைப்புலிகளுக்காக பாரிய இராணுவ நடவடிக்கையை நடத்தியுள்ளனர்.
06 ஆம் பக்கம் பார்க்க…

இதுதொடர்பில் சர்வதேசமும் உற்றுநோககிக்கொணடிருக்கிறது. விடுதலைப்புலிகள் இல்லாத சூழ்நிலையில் எவ்வாறு அவர்கள் ஊடுருவியுள்ளனர். இது கோத்தபாயவின் கொலிவூட் நாடகம் என ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளது. உண்மையில் நடந்தது என்ன என்பது கோத்தபாயவுக்கே தெரியும். இதில் இன்னுமொரு விடயம். 5ம் கட்ட ஈழப்போரை ஆரம்பிக்கும் விடுதலைப்புலிகள் வெறும் 3 பேருடன் ஆரம்பித்திருக்கமாடட்டார்கள். இன்றும் இராணுவ புலனாய்வு நாட்டின் தேவை கருதி விடுதலைப்புலிகளை தேட வேண்டிய அவசியம் உள்ளது.

பாதுகாப்புச்செயலர் மேலே குறிப்பிட்டது போன்று அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் விரைவில் இலங்கைக்கு வரவுள்ளனர். அவர்கள் எமது துன்ப துயரங்களை அறியவரப் போவதில்லை. விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு ஒக்சிஜன் கொடுக்கவே அவர்கள் வருகின்றனர் என்பதாகும். இவ்வாறான நிலையில் யுத்தம் நிறைவடைந்து 5 வருடங்கள் நிறைவுற்றபோதிலும் எந்தவொரு முடிவுகளும் எட்டப்படாதவகையில் வெளிநாடுகளில் இயங்கிவரும் விடுதலைப்புலிகளுடன் இணைந்தே 5ம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகும் எனலாம்.

 

 

SHARE