ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் பெற மறுத்த சரிதா தேவிக்கு தடை

440
ஆசிய விளையாட்டில் பெண்களுக்கான குத்துச்சண்டையில் லைட்வெயிட் பிரிவின் (57-60 கிலோ) அரை இறுதியில் அனுபவம் வாய்ந்த இந்தியாவின் சரிதாதேவியும், தென்கொரியாவின் ஜினா பார்க்கும் மோதினர். இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட போதிலும் துரதிர்ஷ்டவசமாக 0-3 என்ற கணக்கில் சரிதா தேவி வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டது. இந்த ஆட்டத்தில் நடுவர்களின் அதிகபட்ச கருணை ‘உள்ளூர் வாசி’ மீது விழுந்தது.  இதனையடுத்து தனக்கு அநீதி இழைக்கப்பட்டதை நினைத்து வேதனை தாங்காமல் சரிதா தேவி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

பின்னர் சரிதா தேவி பதக்கத்தை ஏற்க மறுத்துவிட்டார். பதக்கம் அளிக்கப்பட்ட அரங்கில் தொடர்ந்து அழுத வண்ணமே இருந்த சரிதா தேவி தனது பதக்கத்தையும் கொரிய வீராங்கனையிடமே கொடுத்தார். பதக்கம் உரிய அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. இந்த சம்பவம் அங்கு இருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக சரிதா குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் சரிதா தேவி குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்க தற்காலிக தடை விதிப்பதாக சர்வதேச குத்துச்சண்டை சங்கம் அறிவித்துள்ளது. இதனால் உலகக்கோப்பை குத்துச்சண்டை போட்டிகளில் சரிதா பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

SHARE