முக்கியத்துவம் குறைந்ததால் ரீ என்ட்ரி அஞ்சலி வருத்தம் 

429


ரீ என்ட்ரி ஆகும் படத்தில் திரிஷாவை தொடர்ந்து மற்றொரு ஹீரோயினும் நடிப்பதால் வருத்தம் அடைந்தார் அஞ்சலி.சித்தி பாரதிதேவி, டைரக்டர் களஞ்சியம் ஆகியோருடன் மோதல் ஏற்பட்டதையடுத்து நடிகை அஞ்சலி ஆந்திராவுக்கு சென்று தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். சுமார் 1 வருட இடைவெளிக்கு பிறகு தமிழில் ரீ என்ட்ரி ஆகிறார். ஜெயம் ரவி ஜோடியாக அஞ்சலி நடிக்கும் இப்படத்தை சுராஜ் டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பில் அஞ்சலி கலந்துகொண்டு நடித்தார். சில நாட்களுக்கு பிறகு திரிஷா இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ரீ என்ட்ரி படம் தனி ஹீரோயின் படமாக அமையாமல் போனதால் அஞ்சலி வருத்தம் அடைந்தாராம். தற்போது மற்றொரு ஹீரோயினாக பூர்ணாவும் இதில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இது அஞ்சலிக்கு மேலும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படத்தில் இடம்பெறும் ஜெயம் ரவியின் அறிமுக காட்சி பாடலில் பூர்ணா குத்தாட்டம் போட்டிருக்கிறார். திருவிழா பாடலாக அமைந்த இப்பாடலுக்கு தமன் இசை அமைத்திருக்கிறார். சமீபத்தில் இப்பாடல் காட்சி படமாக்கப்பட்டது. காமெடி வேடத்தில் சூரி நடிக்கிறார். முதன்முறையாக இப்படம் மூலம் ஜெயம் ரவியுடன் இணைகிறார் அஞ்சலி

 

SHARE