இலங்கையரசாங்கத்தினைப் பொறுத்தவரையில் இதற்கு எதிரான கோசங்கள் சர்வதேச மட்டத்தில் தற்பொழுது எழுப்பப்பட்டு வருகின்றது. அதற்கான கையெழுத்து வேட்டைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. தமிழ்மக்களின் உரிமைக்காக பேராடியவர்களே தமிழீழ விடுதலைப்புலிகள் என்பதனை இந்த தடைநீக்கம் எடுத்துக்காட்டுகின்றது. இவ்வறிவித்தலை ஜீரணித்துக்கொள்ளமுடியாத இலங்கையரசு இவ்வாறான நடமுறைகளில் இறங்கியுள்ளது. கடந்த காலங்களைப்பார்க்கின்றபொழுது ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப்புலிகளின் வளர்ச்சி மேலோங்கியிருந்தது மட்டுமல்லாது இந்தியாவில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் மிக வேகமாக அனைத்து இடங்களுக்கும் பரவத்தொடங்கியது. இந்தியாவின் தேவைக்கேற்ப தமிழீழ விடுதலைப்புலிகளை பயன்படுத்திவந்தபொழுது பல்வேறு இழப்புக்களை எமது தமிழினம் சந்திக்கநேர்ந்தது.
இதன் காரணமாக பிரபாகரன் ராஜீவ் காந்தியின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலைதோன்றியது. அதற்கு உடந்தையாக ரணசிங்க பிரேமதாஸவும் முன்னின்று செயற்பட்டார். அந்த காயமே இதுவரைக்கும் இந்தியா, தமிழீழ விடுதலைப்புலிகளை விரோதிகளாக பார்த்துவந்தது. தற்பொழுதுள்ள பா.ஜ.க அரசாங்கம் காங்கிரஸ் அரசிற்கு எதிரானவர்கள். ஆகவே விடுதலைப்புலிகளின் மீதுள்ள பயங்கரவாதச் தடைச்சட்டத்;தினை நீக்குவதற்கான வாய்ப்புக்கள் நூறு விகிதம் இருப்பதாக ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.