மஹிந்த அணியினரால் குழப்பம்! தென் மாகாண சபையில் அமளி துமளி

245

தென் மாகாண சபையில் அமளி துமளி நிலை ஏற்பட்டுள்ளது.

கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் குழுவொன்று இன்று தென் மாகாண சபைக்கு கறுப்பு பட்டி அணிந்துள்ள நிலையில் தென்மாகாண சபையினுள் பதற்ற நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

வட மத்திய மாகாண சபையின் அதிகார மாற்றத்தில் எதிர்ப்பு வெளியிடும் நோக்கில் தென் மாகாண சபை உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்து வந்துள்ளனர்.

இதேவேளை, முன்னணி உறுப்பினர் சன்ன சாலிய உண்டியலுடன் சபைக்கு வந்தமையால் மேலும் குழப்ப நிலை அதிகரித்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள், சபை நடுவிற்கு வந்து உண்டியலை பறிக்க முயற்சித்துள்ளனர்.

இதன்காரணமாக அவரை சபையில் இருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமையால் அங்கு அமளி துமளி நிலை ஏற்பட்டது.

 

 

 

 

SHARE