அஜீத் தற்போது கவுதம்மேனன் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கு அடுத்த படமாக வீரம் படத்தை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதற்காக கதை உள்ளிட்ட அத்தனை விஷயங்களுடனும் சிவா காத்திருக்கிறார். இதற்கிடையில் அஜீத்துடன் ஹன்சிகா நடிப்பதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் அதனை சிவா மறுக்கிறார். “படத்தின் பேப்பர் வேலைகள் முடிந்திருக்கிறது. லொக்கேஷன் பார்த்து வந்திருக்கிறேன். மற்ற எந்த விஷங்களும் இன்னும் முடிவாகவில்லை. டெக்னீஷியன்கள், ஆர்ட்டிஸ்டுகளும் முடிவாக வில்லை. ஹன்சிகா நடிப்பதாக வந்த தகவல்கள் உண்மையானதல்ல. ஹீரோயின் நான்கைந்து பேர் சாய்சில் இருக்கிறார்கள். யார் என்பதை முடிவு செய்யவில்லை” என்கிறார் சிவா.