எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்றுக்கு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலியுடன் சந்திப்பு நடத்தியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் இந்த ஆரம்ப கட்ட சந்திப்பு நடத்தப்பட்டது.
தேசிய சுதந்திர முன்னணி, லங்கா சமசமாஜ கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் போன்ற கட்சிகள் ஏற்கனவே ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய அரசியல் கட்சிகளின் ஆதரவினை திரட்டும் நோக்கில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவினை திரட்டும் நோக்கில் சில விசேட பிரதிநிதிகளை ஆளும் கட்சி நியமித்துள்ளது.
இதன் அடிப்படையில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சில கட்சிகள் ஏற்கனவே ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக நேரடியாக அறிவித்துள்ளன.
மேலும் சில கட்சிகள் ஆதரவளிப்பது குறித்து இறுதித் தீர்மானம் எதனையும் இதுவரையில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
– See more at: http://www.tamilwin.net/show-RUmszARdKXlw5.html#sthash.HShisUvl.dpuf