மனித புதைகுழிகளது எச்சங்கள் இரவோடிரவாக அகற்றப்பட்டமை தொடர்பான திடுக்கிடும் தகவல்கள்.

619

வரணிப் புதைகுழிகள் மூடப்பட்டன!! இரவுபகலாக கனரக வாகனங்கள் சகிதம் லங்கை இராணுவத்தின் தென்மராட்சியின் முக்கிய படைத்தளமாக இருந்ததும் முன்னைய முன்னரங்க நிலையான முகமாலைக்கான விநியோக தளமாகவும் இருந்த வரணிப் புதைகுழிகள் மூடப்பட்டன. இரவுபகலாக கனரக வாகனங்கள் சகிதம் மூடப்பட்டன. படைத்தளத்தினிலிருந்த பாரிய வெளியாகியுள்ளது.

இது தொடர்பினில் மேலும் தெரியவருகையினில் 1996ம் ஆண்டு யாழ்.குடாநாடு படையினரால் கைப்பற்றப்பட்ட வேளையினில் பருத்தித்துறை – கொடிகாமம் வீதியினில் வரணியினில் பெருமளவு நிலப்பரப்பினை ஆக்கிரமித்து 522 வது படைத்தளம் அமைக்கப்பட்டிருந்தது. அதற்காக பிரதான வீதியும் துண்டிக்கப்பட்டதுடன் அங்கிருந்த பெருமளவு பொதுமக்களது வீடுகளும் சுவீகரிக்கப்பட்டிருந்தது.யாழ்.குடாநாடு கைப்பற்றப்பட்டது முதல் தென்மராட்சிப்பகுதியினில் இடம்பெற்ற கைதுகள் மற்றும் காணமல் போதல்களது மையமாக இப்படைத்தளமே இருந்திருந்தது. குறிப்பாக ஆலயமொன்றினில் தங்கியிருந்த எட்டு இளைஞர்கள் காணாமல் போயிருந்தமை தொடர்பிலும் இப்படை தளமே குற்றச்சாட்டுக்களி;ற்கு உள்ளாகியிருந்தது.

இந்நிலையினில் சுமார் 18 வருடங்களின் பின்னர் குறித்த படைமுகாம் மூடப்பட்டு காணிகள் மற்றும் வீடுகள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்படப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் அருகாகவுள்ள மிருசுவில் பகுதிக்கு இப்படைத்தளம் நகர்த்தப்பட்டுமிருந்தது. அத்துடன் ஏ-9 வீதியோரம் நகர்த்தப்பட்டு அமைக்கப்பட்டிருந்த குறித்த படைத்தளத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்சவே திறந்தும் வைத்திருந்தார்.

எனினும் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த வரணிப் படைத்தளம் சுமார் இரண்டு மாதங்களின் பின்னதாக நேற்றே முற்றாக விடுவிக்கப்பட்டிருந்தது. கடந்த சில வாரங்களாக இரவு வேளைகளினில் கனரக வாகனங்கள் சகிதம் அப்பகுதியினில் பாரிய குழிகள் அகழப்பட்டதுடன் அங்கிருந்து அவசர அவசரமாக அடையாளம் தெரியாத பொருட்கள் அகற்றப்பட்டதாக அயல் குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இது அப்பகுதி மக்களிடையே பெரும்பரபரப்பினை  தோற்றுவித்திருந்ததுடன் இரவோடிரவாக எடுத்து செல்லப்பட்டவை தொடர்பினில் பலத்த சந்தேககங்கள் மக்களிடையே எழுந்துள்ளது.

குறிப்பாக விடுவிக்கப்பட்ட படைத்தளப்பகுதியினில் காணப்படும் சர்ச்சைக்குரிய பகுதிகளை பார்வையிட்ட மனித நேய செயற்பாட்டு அணி ஒன்று அங்கு காணப்படும் பாரிய குழிகள் அகழப்பட்டு வேறிடங்களிலிருந்து மண் எடுத்துவரப்பட்டதை உறுதிப்படுத்தியுமுள்ளது.

ஏற்கனவே வடமராட்சியினில் கைவிடப்பட்ட பல்லப்பை படைத்தளத்தினில் மனித புதை குழி பற்றி தகவல்கள் வெளியாகியிருந்த நிலையினில் இம்முகாமிலும் புதைகுழிகள் துப்பராவாக்கப்பட்டிருக்கலாமென சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. f73a0453-0f05-42c6-b5ce-a6ffeaf0b199_S_secvpf

SHARE